Posted by: shuhaib | 04/07/2010

குடிக்கிறார்கள் பெண்கள் கெடுக்கிறார்கள் உடலை…!


சுமா தனியார் நிறுவனத்தில் உயரதிகாரி. அன்று மது விருந்தில் கலந்து கொண்டாள். மிகவும் கட்டுபாடாக வளர்ந்த பெண் என்பதால் எதையும் தொடாமல் இருந்தாள். ஆனாலும் அவள் குடித்த குளிர்பானத்தில் ஏதோ கலந்திருக்க… அதன் கிறக்கம் மிகவும் பிடித்து போனது. அதன்பின்னர் கொஞ்சம் மது குடிக்க… புதிதாக சாப்பிட்டதால் உடல் தாங்க முடியாமல் மெல்ல மெல்ல சுயநினைவை இழந்தாள்.

அவள் கவிழித்து பார்த்தபோது அருகில் ஒரு ஆடவன் நிர்வாண நிலையில் கிடந்தான். விக்கித்து நின்றாள் சுமா… என்னாச்சு… எப்படி இங்கே…. யார் என்னிடம்..? இப்படி பல கேள்விகள் மனதை குடைய… தலைவலியால் மண்டையும் குடைய… அப்படியே சரிந்து விழுந்தாள்… அதற்கபுறம்… அவளுடைய வாழ்க்கை…?

இப்படித்தான் பல பெண்கள் ச்சும்மா… ஜாலிக்காக… மதுவை தொட… விடாது கருப்பாக அது தொற்றிக் கொள்கிறது. பொதுவாக ஆண்களுக்கும், பெண்களுக்கு உடல் ரீதியாக நிறைய வித்தியாசங்கள் உண்டு… ஆண்கள் குடிக்கிறார்கள் என்பதற்காக பெண்களும் மதுவை குடிக்க ஆரம்பித்தால் அவர்களுடைய உடல்நிலை மிக மோசமாகும்.

மது குடிக்கும் பெண்களுக்கு முகத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அதற்கு முக்கிய காரணம் கல்லீரலில் ஏற்படும் பிரச்சினைகள். ஆண்களை விட பெண்களின் கல்லீரல் ஆல்கஹால் தாக்கத்தின் காரணமாக விரைவில் கெட்டுவிடும். ஆல்கஹாலின் தாக்கத்தால் கல்லீரல் சுருங்கி, கொழுப்பு அதிகமாகி விடுவதால், என்சைம்களில் அதிக சிக்கல் உண்டாகும். ஆண்களைவிட பெண்களுக்கு கொழுப்பு அதிகம் என்பதால், வெகுவிரைவில் கல்லீரல் கெட்டு, ரத்தத்திலும் மதுவின் தன்மை அதிகம் கலந்து விடும். சில நேரங்களில் மரணம் ஏற்படும் அபாயமும் உண்டு.
ஆல்கஹாலும்இதயமும்

மதுவின் தாக்கம், பெண்களுக்கு கல்லீரலோடு, இதயத்தையும் சேர்த்து தாக்கும். பெண்களுக்கு மன அழுத்தமும், மதுவின் தாக்கமும் ஒன்றுசேர, இதயநோய் அழையா விருந்தாளியாக வந்து பாடாய் படுத்தும். மது குடிப்பதால் ரத்த அழுத்தம் அதிகமாகி, இதயத்தை பலவீனபடுத்தும். இதனால் ரத்த அழுத்தத்தை தாங்காமல் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் வீங்கும்.

சிலருக்கு அழுத்தம் அதிகமாகும்போது வெடித்து விடும் அபாயமும் உண்டு. இல்லாவிட்டால் இதயத்தில் அழுத்தம் தாங்காமல் ஓட்டை விழும். தேவையில்லாமல் இதயம் அதிகமாக துடிப்பதும், இல்லாவிட்டால் மெதுவாக துடிப்பதும் இதயநோய்க்கான அறிகுறிகள். மேலும் உடல் எடை அதிகரித்து, அனைத்து உறுப்புகளின் செயல்பாடுகளும் பாதிப்படையும்.
ஆல்கஹாலும்இனபெருக்கத் திறனும்

அமெரிக்க மெடிக்கல் அசோசியேஷன் சார்பில் வெளிவரும் மருத்துவ இதழில் `மது குடிக்கும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் தாக்கும் அபாயம் அதிகரிக்கும்’ என்று கூறியிருந்தனர். அதாவது தினமும் முன்று கப் ஆல்கஹாலை குடிக்கும் பெண்களுக்கு 41 சதவீதம் மார்பக புற்று நோய் அதிகமாக தாக்கும் என்று எச்சரித்தனர்.

மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும்போது இந்திய பெண்கள் குடிக்கும் மதுவின் அளவு குறைவுதான் என்றாலும், வெளிநாட்டு பெண்களின் உடல் மதுவை தாங்கும் அளவுக்கு இந்திய பெண்களின் உடல் தாங்காது. நம்முடைய பாரம்பரியத்தின் காரணமாக நமது நாட்டின் பெண்களின் உடல் ஆல்கஹாலை எதிர்த்து போராடாது. மது அருந்தும் பெண்களின் இன பெருக்க திறனும் பாதிக்கபடும். அதாவது தினமும் மது குடிக்கும் பெண்களுக்கு, ஆல்கஹாலின் தாக்கத்தால் மாதவிலக்கு ஒழுங்காக வராது.

அப்படியே வந்தாலும், வலி அதிகமாக இருக்கும். இல்லாவிட்டால் குறிபிட்ட நாட்களில் வராமல் நாட்கள் தள்ளி போகலாம். இதனால் வயிற்று பிரச்சினைகளும் ஏற்படும். நடுத்தர வயது பெண்களுக்கு மெனோபாஸ் சிக்கல்களும் ஏற்படும். தினமும் குறைந்த அளவே குடிக்கும் பெண்கள் என்றாலும், டாக்டரிடம் ஆலோசனை செய்து கொள்வது நல்லது. இல்லாவிட்டால் பின்னாளில் பிரச்சினை பெரிதாகிவிடும்.

ஆல்கஹாலும்மூளையும்

இயல்பாகவே பெண்களுக்கு அனைத்து உணர்ச்சி நரம்புகளும் எப்போதும் துடிப்புடன் இருக்கும். அதனால் தான் அவர்கள் இன்பமோ, துன்பமோ, இரக்கமோ, அரக்க குணமோ அதை உடனுக்குடன் வெளிபடுத்தி விடுவார்கள். எதைம் தாங்கி, அமைதியாக இருக்கும் பக்குவம் ஒரு சில பெண்களுக்கு மட்டுமே உண்டு. இதற்கு முக்கிய காரணம் பெண்களுக்கு உள்ள முளையின் அமைப்பு. தினமும் ஆல்கஹாலை உடம்புக்குள் செலுத்தும்போது பெண்களின் முளை மற்றும் நரம்புகள் பாதிக்கபட்டு, மன அழுத்தம், மறதி, திடீர் பதட்டம், திடுக்கிடுதல் போன்ற உணர்ச்சிகள் மேலோங்கும் என்று ஸ்டான்போர்டு மருத்துவ பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். போதைக்கு அடிமையாகும் பெண்களுக்கு, ஆண்களை போன்று முகமும் இறுகி காணப்படும்.
ஆல்கஹாலும்… எலும்புகளும்…

எலும்புகள் அனைத்துமே, கால்சியம் சத்துகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன. உடலில் உள்ள எலும்புகள் மற்றும் பற்களுக்கு கால்சியம் சத்து அவசியம் தேவை.

மது அருந்தும் பெண்களின் எலும்பின் உறுதி பலவீனமாகி, முட்டு வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். குறிப்பாக மது குடிக்கும் வயதான பெண்களுக்கு இந்த பிரச்சினை மிக அதிகமாகத் தோன்றும். ஆங்கிலேய பெண்களை விட இந்திய பெண் களுக்கு எலும்புகள் உறுதியாக இருந்தாலும், ஆல்கஹாலின் தாக்கத்தால் படிபடியாக அவை செயலிழக்க ஆரம்பித்து விடும். மேலும் எலும்பு மஜ்ஜைகளில் இருக்கும் ரத்தத்தில் நல்ல கொழுப்பையும் ஆல்கஹால் அரித்து விடும் என்பதால், மதுவை அறவே தவிர்ப்பது மிகவும் நல்லது.


Leave a comment

Categories