என்னைப்பற்றி


பெயர்: சுஹைப்

என்னைப்பற்றி ஒரு சி ல வரிகள்…

நான் ஒரு அழகானகடற்கரை கிராமத்து …. சரி சரி வேண்டாம்

புதிய நண்பர்களை தேடுவதில் எனக்கு ஆர்வம் அதிகம்…
கவிதை எழுதுவதில் ஆர்
வம் அதிகம்…

எனக்கு பிடித்தது எல்லாமே இயற்கைதான் …

பூக்களும், மரங்களும் நிறைந்த பச்சைப்பசேல் புல்வெளிகளில் அதிக நேரம் இருக்கவே பிடிக்கும்.

அருவிகளின் அமைதியும், நீரோடைகளின் சலனமும் எனக்குப்பிடித்தவை.

என் கிராமத்துக் கடற்கரை எனக்குக் கிடைத்த தனிமைகளுக்கு நல்ல நண்பன்…

கடல் மணலில் காலடிப் பதித்து குஞ்சு நண்டுகள் பொறுக்கி அலைந்து திரிந்த காலங்கள்….

என்னைப்பற்றி என்னிடம் கேட்பதைவிட அந்த குஞ்சு நண்டுகளிடமே கேட்டுவிடலாம்….

அதனால்தானோ ….இத் தளத்துக்குக் கூட கடலோரம் என்பேன்….

கவிதை வாசிப்பதில் ஆர்வம் அதிகம்…

அன்பு, கோபம், துடுக்குத்தனம் இப்படி எதுவாக இருந்தாலும் என்னால் மறைத்துவைக்க இயலாது…

இதனால் இழந்ததும் அதிகம் பெற்றதும் அதிகம்…

அரசியலும்,  வன்முறையும்  எனக்குப்பிடிப்பதில்லை.

எனக்கு பிடித்த மொழிகளில் தமிழ் எப்போதும் முதலிடம். தமிழ் இல்லாமல் நான் இல்லை என்பேன்.

நானும் ஒரு தமிழ்த்தாயின் பிள்ளை என்பதில் பெருமைப்படுகிறேன்…

என்னுடைய சிறு தமிழ் படைப்புகளை இங்கே பதிய போகிறேன்… கண்டிப்பாக அனைவரையும் கவர முயற்சி செய்வேன்…

தமிழில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்… ஏனென்றால் மீண்டும் தவறு வாராமல்  திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்…

எனக்கு வேலை பளு அதிகம் இருப்பதால் என்னுடைய பதிவுகள் வருவதில் சற்று இடைவெளி இருக்கலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்…

Advertisements
%d bloggers like this: