தொழுகை


அல்லாஹ் கூறுகிறான்:
நிச்சயமாக தொழுகை முஃமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக விதிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 4:103)

இஸ்லாத்தை தழுவியபின் முதற்கடமை தொழுகையாகும். இது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். பருவமடைந்த, ஆண், பெண் அனைவரின் மீதும் தொழுகை கடமையாகும்.

அல்லாஹ் நமக்களித்துள்ள எண்ணிலடங்கா அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் வணக்கமே இத்தொழுகை. எனவே அதனை கடமை உணர்வுடனும் நன்மையை எதிர்பார்த்தும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் முறையாக நிறைவேற்றவேண்டும்.

இந்தக் கடமை மனிதன் மரணிக்கும் போதுதான் முடிவடைகிறது. ஊரில் இருக்கும் போதும் பயணத்தில் இருக்கும் போதும் ஆரோக்கியமாக இருக்கும் போதும் நோயாளியாக இருக்கும் போதும் கூட தொழுகையை அதன் நேரத்தில் நிறைவேற்றுவது அவசியமாகும்.

தொழுகையை நிலைநாட்டுமாறு சுமார் 80 இடங்களில் அல்லாஹ் குர்ஆனில் கட்டளையிட்டுள்ளான். நபி(ஸல்)அவர்கள் உயிர் பிரியும் கடைசி வேளையில் கூட தொழுகையை வலியுறுத்தினார்கள். முஸ்லிமுக்கும் முஸ்லிம் அல்லாதவருக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு தொழுகைதான். தொழுகை மானக்கேடான, பாவமான காரியங்களை விட்டும் மனிதனைத் தடுக்கின்றது. ஒரு தொழுகை மற்றொரு தொழுகைக்கு மத்தியிலுள்ள சிறிய பாவங்களுக்கு பரிகாரமாக அமைகிறது. மறுமையில் தொழுகையைப் பற்றித்தான் முதலாவதாக விசாரிக்கப்படும். தொழுகையை பேணித் தொழுதவருக்கு அது மறுமையில் பிரகாசமாகவும் ஒளியாகவும் வரும். தொழுகையை பேணித் தொழாதவன் மறுமையில் அல்லாஹ்வின் எதிரிகளான ஃபிர்அவ்ன், ஹாமான், உபை பின் கலப் ஆகியோருடன் இருப்பான். தொழுகையை முறையாகப் பேணியவர்கள் நிச்சயமாக ஈருலகிலும் வெற்றியடைந்து விட்டார்கள். மனஅமைதியை பெற்று விட்டார்கள்.

தொழுகையின் ஒழுக்கங்கள்
தொழுகைக்கு இறையச்சம் இன்றியமையாததாகும். இறையச்சமற்ற தொழுகை குறையுடைய தொழுகையாகும். எனவே தொழுகையை மிகவும் அச்சஉணர்வுடன் நிறைவேற்றவேண்டும். நாம் அல்லாஹ்வை காணாவிட்டாலும் அவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்துடன் தொழவேண்டும். தொழுகை இறைவனுடன் உரையாடுவது போன்றதாகும். எனவே தொழுகையில் தொழுகையல்லாத மற்றவற்றை சிந்திப்பது, பேசுவது, ஏதேனும் சாப்பிடுவது, மேலே, வலது, இடது புறங்களிலே திரும்புவது, ஸலாத்திற்கு பதில் சொல்வது மேலும் இதுபோன்ற அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் பள்ளிவாயிலில் கூட்டாகத் தொழ வேண்டும். தொழுது கொண்டிருப்பவருக்கு குறுக்கே செல்வதும் தவறாகும். பள்ளிவாசலில் வலது காலை வைத்து நுழையவேண்டும். அங்கிருந்து இடது காலை முன்வைத்து வெளியேறவேண்டும். வெங்காயம், பூண்டு போன்றவற்றின் துர்நாற்றத்துடன் பள்ளிக்குள் வரக்கூடாது.

தொழுகை – பெயரும் நேரமும்
ஒவ்வொரு தொழுகையையும் அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது அவசியமாகும்.

பெயர் நேரம் ரகஅத் எண்ணிக்கை
சுபுஹ் அதிகாலை – சூரியன் உதிக்கும் முன் 2
ளுஹர் மதியம் – சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின் 4
அஸர் மாலை – சூரியன் மறையும் முன் 4
மஃரிப் சூரியன் மறைந்த பின் – உடனே 3
இஷா இரவு – இருள் சூழ்ந்த பின் 4

தூய்மை

தொழுகையை நிறைவேற்ற உடல், உடை, இடம் ஆகியவை தூய்மையாக இருப்பது அவசியமாகும். உடலுறவு கொண்டிருத்தாலோ, அல்லது இந்திரியம் வெளியாகி விட்டாலோ குளிப்பது கடமையாகும். குளிப்பு கடமையில்லாத சூழ்நிலைகளில் உளு மட்டும் செய்துவிட்டு தொழவேண்டும்.

உளு செய்யும் முறை
1) உளு செய்வதாக மனதில் எண்ணிக் கொண்டு, பிஸ்மில்லாஹ் என கூறவேண்டும்.
2) இரு கைகளையும் மணிக்கட்டு வரை மூன்று முறை கழுவிக் கொள்ளவேண்டும்.
3) மூன்று முறை வாய் கொப்பளிக்க வேண்டும். மூக்கையும் மூன்று முறை சுத்தம் செய்யவேண்டும்.
4) முகத்தை மூன்று முறை கழுவவேண்டும். அகலத்தால் ஒரு காதிலிருந்து மறு காதுவரையும், நீளத்தால் நெற்றியின் ஆரம்பப் பகுதியிலிருந்து கீழ் நாடி வரையும் கழுவவேண்டும்.
5) இரண்டு கைகளையும் விரல் நுனிகளிலிருந்து முழங்கை உட்பட மூன்று முறை கழுவவேண்டும். முதலில் வலது கையையும் பிறகு இடது கையையும் கழுவவேண்டும்.
6) தலையை ஒரு தடவை தண்ணீரால் தடவவேண்டும். இரண்டு கைகளையும் தண்ணீரில் நனைத்து தலையின் முற்பகுதியிலிருந்து பிற்பகுதி வரை கொண்டு சென்று மீண்டும் அதனை முற்பகுதிக்கு கொண்டு வரவேண்டும். பிறகு ஆட்காட்டி விரலை காதின் உட்பகுதியையும், பெருவிரலால் காதின் வெளிப்பகுதியையும் தடவ வேண்டும்.
7) இரண்டு கால்களையும் விரல் நுனிகளிலிருந்து கணுக்கால் வரையில் முதலில் வலது காலையும் பிறகு இடது காலையும் மூன்று முறை கழுவவேண்டும்.
8) பிறகு அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹ் என்று கூறவேண்டும்.
(இதனுடன் உளு நிறைவுற்றது)

தொழும் முறை
1. கிப்லா என்னும் கஃபா ஆலயத்தை முன்னோக்கி நின்று கொண்டு, தொழவிரும்பும் தொழுகையை மனதில் நினைக்க வேண்டும்.
2. அல்லாஹு அக்பர் என்று கூறி இருகைகளையும் புஜங்களுக்கு நேராக உயர்த்தி, வலது கை மணிக்கட்டை இடது கை மணிக்கட்டின் மீது வைத்து நெஞ்சின் மீது கட்டிக்கொள்ள வேண்டும்.
3. பிறகு பின்வரும் பிராத்தனையை -துஆவை- ஓதவேண்டும்.
ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக்க வதபாரகஸ்முக வதஆலா ஜத்துக்க வலா இலாஹ கைருக்க.
4. பிறகு ஃபாத்திஹா சூராவை ஓதவேண்டும். அது:
அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹும்
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்
அர்ரஹ்மானிர் ரஹீம் – மாலிகி யவ்மித்தீன்
இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்த்தயீன்
இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்த்தகீம்
ஸிராத்தல்லதீன அன்அம்த்த் அலைஹிம்
கைரில் மஃ(க்)ளுபி அலைஹிம்
வலல் ளால்லீன்.- (ஆமீன்.)

5. பிறகு குர்ஆனின் சில வசனங்களை ஓத வேண்டும்.
சிறிய அத்தியாயங்களில் சில:
(1) குல் ஹீவல்லாஹீ அஹது – அல்லாஹீஸ் ஸமது லம் யலிது, வலம் யூலது – வலம் ய(க்)குல்லஹீ (க்)குஃபுவன் அஹது.
(2) வல்அஸ்ர் – இன்னல் இன்ஸான லஃபீ ஹீஸ்ர் இல்லல்லதீன ஆமனு வஅமிலுஸ் ஸாலிஹாத்தி வதவாஸவ் பில்ஹக்கி வதவாஸவ் பிஸ்ஸப்ர்.
(3) இன்னா அஃத்தைநாக்கல் கவ்ஸர் ஃபஸல்லி லிரப்பிக்க வன்ஹர் இன்ன ஷானிஅக்க ஹீவல் அப்தர்.

6. பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறி ருகூவு செய்யவேண்டும். முதுகை வளைத்துக் குனிந்து இரண்டு கைகளைக் கொண்டு -விரல்களை விரித்தவாறு- முட்டுக்கால்களைப் பிடிக்கவேண்டும். தலையை முதுகின் மட்டத்திற்கு சமமாக வைக்கவேண்டும். இதுவே ருகூவுச் செய்யும் முறையாகும்.
7. ருகூவில் ஸுப்ஹான ரப்பியல் அலீம் என்று மூன்று முறை கூற வேண்டும்.
8. ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறியவாறு ருகூவிலிருந்து எழவேண்டும். பிறகு இரு கைகளையும் புஜத்திற்கு நேராக உயர்த்தி கீழே தொங்கவிட்டவாறு ரப்பனா லகல்ஹம்து என்று கூறவேண்டும்.
9. பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறி ஸுஜுது செய்ய வேண்டும். முகம் (மூக்கு,நெற்றி) இரண்டு உள்ளங்கைகள், இரண்டு முட்டுக்கால்கள், இரண்டு கால் விரல்களின் உட்பகுதி ஆகிய ஏழு உறுப்புக்களும் பூமியில் படும் வகையில் ஸுஜுது அமைந்திட வேண்டும். மேலும் இரு கால்களின் பாதங்களும் நட்டியவாறு இருக்கவேண்டும். கைகளை விழாவோடு ஒட்டிவைப்பதோ, முழங்கைகளை தரையில்படுமாறு வைப்பதோ கூடாது.
10. ஸுஜுதில் ஸுப்ஹான ரப்பியல் அஃலா என்று மூன்று முறை கூறவேண்டும்.
11. பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு ஸுஜுதிலிருந்து தலையை உயர்த்த வேண்டும்.
12. ஸஜ்தாவிலிருந்து எழுந்து இடது கால்களின் மீது உட்கார்ந்து, வலது காலை நட்டி வைத்திருக்க வேண்டும். வலது தொடையின் மீது வலது கையையும் இடது தொடையின் மீது இடது கையையும் முட்டுக்கருகில் கைவிரல்களை விரிக்காமல் இணைத்தவாறு வைக்கவேண்டும்.
13. இந்த இருப்பில் ரப்பிஃ(க்)ஃபிர்லி என்று இரண்டு முறை கூறவேண்டும்.
14. பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறி முதலில் செய்ததைப்போன்று மீண்டும் ஸஜ்தாச் செய்ய வேண்டும்.
(இதனுடன் ஒரு ரகஅத் முடிந்தது)

15. பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறி எழுந்து, மீண்டும் நிலைக்கு வரவேண்டும். இரண்டாவது ரகஅத்தை முதல் ரகஅத்தைப் போன்றே தொழவேண்டும். எனினும் இதில் ஃபாத்திஹா சூராவிலிருந்து ஓதவேண்டும். அதற்கு முன்னுள்ள பிராத்தனையை மீண்டும் ஓதவேண்டியதில்லை.
16. இரண்டாவது ரகஅத்தின் இரண்டு ஸஜ்தாக்களையும் செய்த பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறி இரண்டு ஸஜ்தாவிற்கும் இடையில் அமர்ந்திருந்தது போன்று அமரவேண்டும்.
17. இந்த அமர்வில் அத்தஹிய்யாத் எனும் பின் வரும் பிரார்த்தனையை கூறவேண்டும்.
அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மத் துல்லாஹி வபரகாத்துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு.
(அதனைத் தொடர்ந்து ஸலவாத்து ஓதவேண்டும்)
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹும வஅலா ஆலி இப்ராஹும இன்ன(க்)க ஹமீதுன் மஜீது – வபாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் – கமா பாரக்த அலா இப்ராஹும வஅலா ஆலி இப்ராஹும இன்ன(க்)க ஹமீதுன் மஜுது .
18. இதன் பிறகு தான் விரும்பிய பிராத்தனையைக் கேட்டுக் கொள்ளலாம்.
19. பிறகு வலது புறம் முகத்தைத் திருப்பி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று கூற வேண்டும். பிறகு இடது புறம் முகத்தைத் திருப்பி அது போன்றே ஸலாம் கூற வேண்டும்.
(இதனுடன் 2 ரகஅத் உடைய தொழுகை நிறைவடையும்.)
20. இரண்டு ரகஅத்களை விட அதிகமான ரகஅத் உள்ள தொழுகைகளைத் தொழும்போது இரண்டாம் ரகஅத்தின் அத்தஹிய்யாத்திற்குப் பின் ஸலாம் கொடுக்காமல் மூன்றாம் ரகஅத்திற்காக எழுந்து நிலைக்கு வந்துவிட வேண்டும். அதில் முதலாவது ரகஅத்தில் கைகளை உயர்த்தியது போன்று கைகளை உயர்த்தி பிறகு கட்டிக்கொள்ள வேண்டும். இரண்டு ரகஅத்திற்கு அதிகமான ரகஅத்களில் சூரத்துல் ஃபாத்திஹா மட்டும் ஓதவேண்டும். இறுதி இருப்பில் ஸலாம் கொடுத்து தொழுகையை முடிக்கவேண்டும்.

சில சட்டங்கள்
உளுவை முறிக்கும் செயல்கள்
சில செயல்களால் உளு முறிந்து விடும். இவைகளில் ஏதேனும் ஒன்று நிகழ்ந்து விட்டால் மீண்டும் உளு செய்த பிறகே தொழவேண்டும். அவைகள்: மல ஜலம் கழித்தல் – காற்று பிரிதல் – இச்சை நீர் வெளிப்படல் – இன உறுப்பை இச்சையுடன் தொடுதல் – தூங்குதல் – ஒட்டக மாமிசம் உண்ணுதல்.

தயம்மும் செய்யும் முறை
உளு செய்யவோ, குளிக்கவோ தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் அல்லது தண்ணீர் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாத நோய் போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் உளு மற்றும் குளிப்புக்கு பகரமாக தயம்மும் செய்து தொழுகையை நிறை வேற்றலாம். தூய்மையான மண்ணில் இரண்டு உள்ளங்கைகளையும் ஒரு முறை அடித்து அதனை முகத்தில் தடவிவிட்டு பிறகு அதனைக் கொண்டு இரண்டு முன்னங்கையில் தடவவேண்டும். இதுவே தயம்மும் செய்யும் முறையாகும்.

பெண்களுக்கு சலுகை
மாதவிடாய் காலத்திலும் பிரசவ இரத்த நேரத்திலும் பெண்கள் தொழக்கூடாது. இரத்தம் நின்றவுடன் குளித்துவிட்டு தொழுகையை ஆரம்பிக்கவேண்டும். அந்த காலத்தில் விடுபட்ட தொழுகைகளை தூய்மையான பின் தொழவேண்டியதில்லை.

தொழ மறந்து விட்டால்
தொழ மறந்துவிட்டால் நினைவு வந்தவுடனும், தொழும் எண்ணத்துடன் படுத்திருந்து அயர்ந்து தூங்கி விட்டால் விழித்தவுடனும் தாமதிக்காமல் தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.

சுன்னத் தொழுகை
கடமையல்லாத உபரியான தொழுகைக்கு சுன்னத்தான தொழுகை என்று பெயர். கடமையான தொழுகைகளுக்கு முன்பும் பின்பும் இதனை பேணித் தொழுவது அதிக நன்மையைப் பெற்றுத் தரும். அதில் மிக முக்கியமானவை:

தொழுகை
முன் சுன்னத்
பின் சுன்னத்

சுபுஹ்
2 ரகஅத்

ளுஹர்
2 10 2
2

மஃரிப்

2

இஷா
2 10 வித்ர் 3

குறிப்பு: மேலும் விளக்கங்களுக்கு அறிஞர்களை அணுகி நபி(ஸல்) அவர்களின் தொழுகை முறையை அறிந்து கொள்ளவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: