Posted by: shuhaib | 16/06/2010

ஆன்டர்சனை அமெரிக்கா ஒப்படைக்குமா?


போபால் விஷ வாயு வழக்கில் தொடர்புடைய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி வாரன் ஆன்டர்சனை ஒப்படைப்பது தொடர்பாக இந்தியா விடுக்கும் கோரிக்கையை அமெரிக்கா பரிசீலிக்கும். இத்தகவலை அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பி.ஜே. குரோலி தெரிவித்துள்ளார்.÷1984-ம் ஆண்டு மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையில் டிசம்பர் 2-ம்

தேதி மீதைல் ஐசோ சயனைடு வாயு வெளியானது. இதில் பாதிக்கப்பட்டு 15 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் பல்வேறு கோளாறுகளால் பாதிக்கப்பட்டனர். ÷அப்போது நிறுவனத்தின் தலைமை நிர்வாக செயல் அதிகாரியாக இருந்தவர் வாரன் ஆன்டர்சன். இந்த வழக்கு தொடர்பாக அவர் 1984-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். ஆனால் 2,000 டாலர் ஜாமீன் தொகை செலுத்தி விட்டு அமெரிக்காவுக்குத் திரும்பிய அவர், பின்னர் இந்தியாவுக்குச் செல்லவேயில்லை. இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக வாரன் ஆன்டர்சனை இந்தியா அறிவித்துள்ளது.÷இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கடந்த வாரம் போபால் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. “”தாமதமாக வந்த தீர்ப்பு என்றும், தண்டனை மிகக் குறைவானது,” என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் இன்னமும் தேடப்படும் குற்றவாளியாக வாரன் ஆன்டர்சன் உள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்திருந்தார்.÷வாரன் ஆன்டர்சனை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று 2003-ம் ஆண்டு முதல் இந்திய அரசு அமெரிக்காவிடம் கோரி வருகிறது. குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தின்கீழ் வாரன் ஆன்டர்சனை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை

அமெரிக்கா ஏற்கவில்லை.÷இதனிடையே தற்போது, இது தொடர்பாக இந்திய அரசு விடுக்கும் கோரிக்கையை அமெரிக்கா கவனமாக பரிசீலித்து முடிவு செய்யும் என்று அறிவித்துள்ளது. ஆன்டர்சனை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால், அதை கவனமாக பரிசீலிப்பதாக குரோலி குறிப்பிட்டுள்ளா

ர். ஆன்டர்சன் இந்தியாவுக்கு அனுப்பப்படுவாரா? என்று கேட்டதற்கு “”இது குறித்து கருத்து தெரிவிக்க இயலாது,” என்று கூறினார். இது தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையிலான தகவல் பரிமாற்றம் மிகவும் ரகசியமானது, அதை வெளியிட முடியாது என்றும் குரோலி மேலும் தெரிவித்தார்.÷வாரன் ஆன்டர்சனை இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பாக இந்தியா விடுத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்ததாக இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரி கருத்து தெரிவித்த இரண்டு நாள்களுக்குள் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இவ்விதம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 2003-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். குற்றவாளிகளை ஒப்படைப்பது தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையிலான ஒப்பந்த விதிமுறைகள் ஆன்டர்சன் விஷயத்தில் பொருந்துவதாக இல்லை என்று அமெரிக்கா நிராகரித்துவிட்டதாகவும், இந்த வழக்கில் ஆன்டர்சனுக்குள்ள தொடர்பு குறித்த ஆதாரங்களை அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா கோருவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.÷இது தொடர்பாக தேவையான கூடுதல் தகவல்களை அளிக்குமாறு விசாரணை அமைப்பிடம் (சிபிஐ) கோரியுள்ளதாகவும், அதன் மூலம் இந்த வழக்கை விரைவுபடுத்த இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆன்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்காவில் உள்ள இந்தியாவுக்கான காங்கிரஸ் கட்சி நிறுவனரும்  முன்னாள் இணைத் தலைவருமான பிராங்க் பலோன் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.÷இந்தியாவில் நிகழ்ந்த விஷவாயுக் கசிவு சம்பவத்துக்குக் காரணமான அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டிய குற்றவாளி வாரன் ஆன்டர்சன். இந்த சம்பவத்துக்கான தண்டனையை அவர் பெற்றாக வேண்டும். போபால் விஷ வாயுக் கசிவு சம்பவத்துக்கு ஆன்டர்சன்தான் முழு பொறுப்பு என்றும் பலோன் குறிப்பிட்டார்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: