Posted by: shuhaib | 16/06/2010

இந்தியாவின் தண்ணீர் பிரச்சினைகள்


நம்முடையஉலகம் அடுத்த பத்து வருடங்களுக்குள்ளேயே மிகப்பெரும் தண்ணீர் பிரச்னையைச் சந்திக்கும் என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்தியா தன்னுடைய தண்ணீர்ப் பிரச்னையின் அபாயம் பற்றிப் புரிந்து கொண்டிருக்கிறது என்பது ஆறுதலான விஷயம். தண்ணீர் குறித்தான பல திட்டங்களை நாம் தீட்டி வருவதும் உண்மைதான். நல்ல தலைமைப்பண்புகளைக் கொண்ட இளைஞர்கள் இந்தத் திட்டங்களுக்குத் தலைமை தாங்கும் போது திட்டங்கள் நனவுகளாகும் அதிசயத்தை நாம் காண்போம்.

இந்த நிலையில்தான் நதிநீர் இணைப்பு மற்றும் புதிய தண்ணீர் வழிச் சாலைகள் பற்றி எல்லோரும் திறந்த மனத்துடன், தேசத்தின் எதிர்கால சுபிட்சத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்பது என் ஆசை. இப்போது அது மனதின் தணலாகத்தான் இருக்கிறது. தூண்டப்பட்ட அந்த மனதின் பொறி பெரும் தீயாகப் பரவ வேண்டும். அதைப் பற்றிய விவாதங்களும் ஆராய்ச்சிகளும் இந்தியா முழுக்க நடத்தப்படும் போது அதன் பயன்பாடுகளைப் பற்றிய உண்மைகள் தெரிய வரும்,

இந்தியா எதிர்நோக்கி உள்ள இன்னொரு பெரும் பிரச்னை “எனர்ஜி எனப்படும் எரிசக்தி. உலக மக்கள் தொகையில் மொத்தம் 17 சதவீதத்தை நாம் கொண்டிருக்கிறோம். ஆனால் உலகில் உள்ள எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு வளங்களில் நம்முடையது, அல்லது நாம் அறிந்து வைத்திருப்பது வெறும் 0.8 சதவீதம்தான்! நிலக்கரி வளம் இன்னும் நம்மிடையே இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதை மேலும் மேலும் தோண்டி எடுத்து எரிக்கும் போது சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில்தான் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் எனப்படும் தண்ணீரினால் கிடைக்கும் சக்தி அதிக முக்கியத்துவம் பெறுகிறது.உலகம் முழுவதும் வெப்ப மயமாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் நம்முடைய தண்ணீர் நிலைகள் வற்றிக் கொண்டே வருவதும் ஆபத்தான நிகழ்வு. இந்த நூற்றாண்டில் மனிதனுக்கு அரிதாகக் கிடைக்கக் கூடிய இரண்டு பொருட்களாக தண்ணீரும் எரிபொருளும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நம்மிடம் மிகப்பிரமாண்டமான தண்ணீர் தேக்கி வைக்கக் கூடிய ஹைடல் பிராஜக்டுகள் இருப்பதென்னவோ உண்மைதான். ஆனால் எதிர்நோக்கி உள்ள தட்டுப்பாட்டின் அளவைப் பார்க்கும் போது அவை போதாது.

பெரும் ஆறுகளின் அருகே உள்ள சமவெளிகளில் நாம் பிரமாண்டமான புதிய நீர்தேக்கங்களைக் கட்டியே ஆக வேண்டும். வெள்ள காலங்களின் போது அதில் வரக்கூடிய உபரித் தண்ணீரை இந்த நீர்தேக்கங்களில் சேமித்து வைக்க முடியும். ஒருவகையில் இந்தியா கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்ட நாடு என்று சொல்வேன். எப்படித் தெரியுமா?

நமது கடற்கரையின் (ஸ்ரீர்ஹள்ற்ப்ண்ய்ங்) நீளம் 7000 கிலோ மீட்டர். நமது நாட்டில் ஓடக்கூடிய ஆறுகளின் நீளமோ இதைவிடப் பல மடங்கு நீளம் கொண்டவை. முக்கிய நகரங்கள் எல்லாமே ஏதாவது ஒரு நதியின் கரையிலேயே அமைந்திருக்கின்றன, அல்லது கடலோரங்களில் உள்ளன. இந்த முக்கியமான பாயிண்டுகளை இணைக்க வேண்டியதுதான் நாம் செய்ய வேண்டிய வேலை. இயற்கையே நாம் செய்து முடித்தாக வேண்டிய வேலைகளைக் கண் முன்னால் வைத்திருக்கிறது.

நதிகளை, நகரங்களை, கடலோரங்களை புதிய தண்ணீர் வழிகளின் வழியே இணைப்பது முடியாத காரியம் அல்ல. நம்முடைய வாழ்வாதாரங்களே மழையும் நதியும். அவை தரும் அருட் செல்வங்களை வீணாக்கக் கூடாது. இப்படி நகரங்களையும், கடல்களையும், நதிகளையும் இணைத்திருப்பது உலகின் பல இடங்களில் நடந்திருக்கின்றன.

லண்டன், பாரீஸ், பிராக், ஃபிளா ரன்ஸ், வாஷிங்டன், நியூஆர்லியன்ஸ், பால்டிமோர் போன்ற நகரங்களில் இதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.இங்கே கட்டமைக்கப்பட்டுள்ள புதிய தண்ணீர்வழிச்சாலைகளைக் கண்டு நான் பிரமித்துப் போயிருக்கிறேன். அவை செயற்கை தண்ணீர்த் தடங்களைப் போலவே இல்லாமல் இயற்கையோடு இரண்டறக் கலந்து விட்டவை. இரவு, பகல் என்று இருபத்தி நான்குமணி நேரமும் இந்தப் பகுதிகள் வியா பாரம், பொழுதுபோக்கு, போக்குவரத்து என்று ஜகஜ்ஜோதியாகக் காட்சியளிக்கும். மக்களின் குடிதண்ணீர் தேவைகளைத் தீர்த்து வைப்பது மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் இவை நாட்டிற்கு நல்ல வருமானத்தை ஈட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இவை அங்கே “”வாட்டர் ஃபிரண்ட்’’’ என்று அழைக்கப்படுகின்றன. தண்ணீர் வழிச்சாலைகளை அமைக்கும் டெக்னாலஜியில் புகழ்பெற்று விளங்கும் நெதர்லாந்து நாடு கூட நம் நாட்டில் புதிய தண்ணீர் வழிச்சாலைகளை அமைக்கும் திட்டங்களுக்கு உதவத் தயார் என்று அறிவித்திருக்கிறது. இதெல்லாம் நல்ல செய்தி.

மும்பையில் உருவாக்கப்பட்டிருக்கும் “தானே கிரீக்’ எனப்படும் நல்ல தண்ணீர் ஏரி நம் கண்முன்னால் உள்ள மற்றொரு உதா ரணம். தில்லியில் யமுனா மற்றும் ஹிந்தோன் நதிகளின் படுகைகளிலும் பிரமாண்டமான நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இப்படி உருவாக்கப்படும் புதிய ஏரிகள் மற்றும் தண்ணீர் வழிச்சாலைகளால் மற்றும் ஒரு முக்கியமான நன்மையும் உண்டு. இவை நிலத்தடி நீரின் அளவை பெரும் அளவில் உயர்த்துகின்றன. இந்தத் தண்ணீர் நல்ல தரத்தில் குடிநீராகவும் பயன்படக்கூடியது.

இந்திய மக்களுக்கு, குறிப்பாக கிராம மக்களுக்கு தண்ணீர் அவர்களுடைய சுகாதாரத் தேவைகளுக்காக நிறைய தேவைப்படுகிறது. ஆனால் தேவைப்படும் அளவுக்கு கிடைப்பதில்லை என்பது பெரும் பிரச்னை. தண்ணீரைச் சிறப்பாகப் பயன்படுத்தும் கிராமங்களை நான் கண்டிருக்கிறேன். தமிழ்நாட்டின் கீரப்பாளையம், வல்லம், குஜராத்தின் அகமதாபாத் போன்ற இடங்களில் ஃபைபர் கண்ணாடியினால் ஆன சுத்தமான டாய்லெட்டுகள் உண்டு. பயன்படுத்தக் கூடிய தண்ணீரும் சிக்கனமான அளவில் வெளியேறக் கூடியதாக அமைப்புகள் இங்கே இருப்பது ஆச்சர்யமான விஷயம்.

கழிப்பறை என்பது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கக்கூடியது. மிகத் தேவையானதும், மிகச் சுத்தமாகவும் இருக்க வேண்டிய விஷயம் இது. தகுந்த பிளம்பிங் அமைப்புகளால் தண்ணீர் தேவையைச் சிக்கனமாகவும், ஆரோக்கியமாகவும் பயன்படுத்தப்படக்கூடிய இடமாக டாய்லெட்டுகள் இருக்க வேண்டும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: