Posted by: shuhaib | 16/06/2010

இனி​யா​வது…


மங்​க​ளூ​ரில் இருந்து எழு​கின்ற மரண ஓலம் ஓய்ந்​தா​லும்,​​ பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​க​ளில் தொட​ரும் துய​ரம்​தீர ஆண்​டு​கள் பல​வா​கும்.​ எண்​ணற்ற ஆசை​க​ளை​யும்,​​ கன​வு​க​ளை​யும் சுமந்து கொண்டு பறந்த 158 பேர் கண் இமைக்​கும் நேரத்​தில் கால​னின் கொடுங்​கூற்​றுக்கு இரை​யா​கி​விட்ட அவ​லம் உல​கையே உலுக்​கு​கி​றது.​ எட்​டுப் பேரா​வது உயிர்​பி​ழைத்​த​னரே என்று சமா​தா​னப்​பட்​டுக் கொள்​ள​லாம்,​​ அவ்​வ​ளவே.​விபத்து என்​பது தவிர்க்க இய​லாத ஒன்று என்​பது தெரிந்​த​து​தான்.​ விமா​னத்​தில் பறந்​த​தால் மட்​டுமே விபத்து ஏற்​ப​டும் என்​றும்,​​ ரயி​லில் பய​ணித்​த​தால் விபத்து ஏற்​பட்​டு​வி​டும் என்​றும் சொல்​லி​விட இய​லாது.​ நடந்து போகும்​போ​து​கூட விபத்து நேரி​ட​லாம்.​ சாலை​யில் செல்​லும் பேருந்தோ,​​ லாரியோ வீட்​டில் மோதிய சம்​ப​வங்​கள் ஏரா​ளம் உண்டு.​ ஆனால்,​​ விபத்து என்​பது மனி​த​னின் கவ​னக்​கு​றை​வாலோ அல்​லது தவ​றான நடை​மு​றை​யாலோ ஏற்​பட்​டி​ருந்​தால் அதை எப்​படி மன்​னிக்க முடி​யும்?​துபையி​லி​ருந்து மங்​க​ளூ​ருக்​குப் பறந்து வந்த விமா​னம் இயந்​தி​ரக் கோளாறு ஏற்​பட்டு வானத்​தில் வெடித்​துச் சிதறி இருந்​தால் அந்த விபத்தை நம்​மால் ஏற்​றுக்​கொள்ள முடி​யா​விட்​டா​லும் ஜீர​ணிக்க முடி​யும்.​ ஆனால்,​​ தவ​று​த​லா​கத் தரை​யி​றங்​கி​ய​தால் விபத்து ஏற்​பட்டு உயி​ரி​ழப்பு என்​பதை ஏற்​றுக்​கொள்ள முடி​ய​வில்லை.​விமான ஓட்​டி​யான கேப்​டன் குலு​சிகா,​​ சுமார் 10,200 மணி​நே​ரம் இது​வரை விமா​னத்​தில் பறந்த அனு​ப​வசாலி.​ இது​வரை 19 முறை மங்​க​ளூர் விமான நிலை​யத்​தில் விமா​னத்தை வெற்​றி​க​ர​மாக இறக்கி இருப்​ப​வர் கேப்​டன் குலு​சிகா.​ கடந்​த​வா​ரம்​கூட விமா​னத்​தில் மங்​க​ளூர் வந்து இறங்​கி​ய​வர்.​ தவ​று​த​லுக்​குக் கார​ணம் அனு​ப​வ​மின்மை என்றோ,​​ அவ​ருக்கு இடம் புதிது என்றோ சொல்​லி​விட முடி​யாது.​விபத்து நடந்​த​போது தெளிந்த வானம் இருந்​தி​ருக்​கி​றது.​ மழை எது​வும் பெய்​யா​த​தால் விமா​னம் இறங்​கும் பாதை​யில் ஈரப்​பசை கொஞ்​ச​மும் கிடை​யாது.​ விபத்​துக்​குள்​ளான போயிங் 737 -​ 800 பத்​தி​ர​மாக இறங்​கு​வ​தற்கு மங்​க​ளூர் விமான நிலை​யத்​தில் 8,000 அடி நீள விமான ஓடு​பாதை தாரா​ள​மா​கப் போது​மா​னது.​ பிறகு ஏன் இந்த விபத்து நேர்ந்​தது?​விவ ​ரம் அறிந்​த​வர்​க​ளி​டம் விசா​ரிக்​கும்​போது அவர்​கள் தரும் தக​வல் திகைப்பை ஏற்​ப​டுத்​து​கி​றது.​ சாதா​ர​ண​மாக,​​ விமான ஓடு​பா​தை​யில் ஆரம்​பத்தி​லி​ருந்து சுமார் 1,400 அடி முதல் 1,800 அடிக்​குள் விமா​னம் தரை​யைத் தொட்​டால் பிரச்னை ஏற்​பட வாய்ப்​பில்லை.​ ஆனால்,​​ இந்த விமா​னம் 3,000 அடி​யில்​தான் விமான தளத்​தில் இறங்​கித் தரை​யைத் தொட்​டது என்​கி​றார்​கள்.​ அதற்கு என்ன கார​ணம் என்​பதை விமா​னத்தி​லி​ருந்து சிதறி விழுந்​தி​ருக்​கும் கருப்​புப் பெட்டி ஆய்வு செய்​யப்​பட்​டால் மட்​டுமே விடை கிடைக்​கும்.​இந்த விமான விபத்​தின் காரண காரி​யங்​கள் ஒரு​பு​றம் இருக்​கட்​டும்.​ எந்த அள​வுக்கு இந்​திய விமான நிலை​யங்​கள் பாது​காப்​பா​னவை என்​ப​தை​யும்,​​ நமது விமான ஓட்​டி​கள் எந்த அள​வுக்கு அனு​ப​வ​சா​லி​கள் என்​ப​தை​யும் மறு​ப​ரி​சீ​லனை செய்ய வேண்​டிய கட்​டம் இது.​ கடந்த 20 ஆண்​டு​க​ளாக,​​ சர்​வ​தே​சத் தரத்​தில் இந்​தியா முன்​னேற வேண்​டும் என்​கிற முனைப்​பில்,​​ வரை​முறை இல்​லாத வளர்ச்​சியை விமா​னப் போக்​கு​வ​ரத்​தில் ஏற்​பட நமது அரசு முனைந்​தது எந்த அள​வுக்​குப் புத்​தி​சா​லித்​த​னம் என்​ப​தை​யும் சீர்​தூக்கி ஆராய வேண்​டிய நேரம் இது.​எண்​ணிக்​கை​ யைக் கூட்ட வேண்​டும் என்​ப​தற்​கா​கத் தரத்​தைக் குறைக்க முய​லும் பேதை​மைத்​த​னம் தமி​ழக உயர்​கல்​வித் துறைக்கு மட்​டுமே உரித்​தா​னது என்று எண்​ணி​வி​ட​லா​காது.​ விமா​னத் துறை​யை​யும் பீடித்​தி​ருக்​கும் வியாதி இது​தான்.​ தனி​யார் துறையை ஊக்​கப்​ப​டுத்​தக் கணக்​கு​வ​ழக்கு இல்​லா​மல் அனு​மதி அள்ளி வழங்​கப்​ப​டு​கி​றது.​ வெளி​நா​டு​களி​லி​ருந்து பெறும் பழைய விமா​னங்​க​ளும்,​​ குத்​த​கைக்கு எடுக்​கப்​ப​டும் விமா​னங்​க​ளும்​கூ​டத் தனி​யா​ரால் பயன்​ப​டுத்​தப்​ப​டு​கின்​றன.​விமான நிலை​யங்​க​ளும் சரி,​​ தேர்ந்த அனு​ப​வ​சா​லி​க​ளால் பரா​ம​ரிக்​கப்​ப​டு​கின்​ற​னவா என்​பது சந்​தே​கமே.​ சின்​னச் சின்ன நக​ரங்​க​ளில் விமான நிலை​யங்​கள் அமைப்​ப​தும்,​​ விமா​னப் போக்​கு​வ​ரத்து அதி​க​ரிக்​கப்​ப​டு​வ​தும் நல்​ல​து​தான்.​ அதே​நே​ரத்​தில்,​​ போதிய கட்​ட​மைப்பு வச​தி​க​ளும்,​​ திற​மை​யான தொழில்​நுட்​பம் தெரிந்த பணி​யா​ளர்​க​ளும் இருந்​தால்​தானே முறை​யாக அந்த விமான நிலை​யங்​கள் செயல்​பட முடி​யும்.​விமா​னம் ஒவ்​வொரு முறை இறங்​கும்​போ​தும்,​​ சக்​க​ரங்​க​ளில் தேய்​மா​னத்​தால் விமான ஓடு​பா​தை​யில் ரப்​பர் துகள்​கள் தங்​கி​வி​டும்.​ அதை அவ்​வப்​போது அகற்​றிச் சுத்​தப்​ப​டுத்​தா​விட்​டால் அடுத்த விமா​னம் இறங்​கும்​போது,​​ சறுக்கி விபத்து ஏற்​பட ஏது​வா​கும்.​ இது​போல,​​ விமான நிலை​யத்​தில் இன்​னும் பல நுணுக்​க​மான பாது​காப்பு அம்​சங்​கள் உள்​ளன.​ அவை முறை​யா​கக் கையா​ளப்​ப​டு​கின்​ற​னவா என்​பது சந்​தே​க​மாக இருக்​கி​றது.​ கடந்த இரண்​டாண்​டு​க​ளாக உயிர்ச்​சே​தம் ஏற்​ப​ட​வில்​லையே தவிர,​​ விமா​ன​தள விபத்​து​கள் பல நடந்​தி​ருப்​பது செய்​தி​யாக்​கப்​ப​ட​வில்லை என்​ப​து​தான் உண்மை.​விமான நிலை​யங்​க​ளைப் புதுப்​பிப்​ப​தற்​கும்,​​ புதிய விமான நிலை​யங்​களை அமைப்​ப​தற்​கும் பல்​லா​யி​ரம் கோடி ரூபாய்​களை வாரி இறைக்​கும் அரசு,​​ திற​மை​யான விமான ஓட்​டி​க​ளை​யும்,​​ விமான நிலை​யத் தொழில்​நுட்​பப் பணி​யா​ளர்​க​ளை​யும் உரு​வாக்​கு​வ​தில் முத​லில் ​ அக்​கறை காட்ட வேண்​டும்.​ மங்​க​ளூர் விமான விபத்து என்​பது ஓர் எச்​ச​ரிக்கை மணி,​​ அவ்​வ​ளவே.​ இதி​லி​ருந்து நாம் பாடம் படித்​தால் புத்​தி​சா​லி​கள்.​ இல்​லா​விட்​டால்?​ அப்​பா​விப் பய​ணி​கள் துர​திர்ஷ்​ட​சா​லி​கள்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: