Posted by: shuhaib | 16/06/2010

முதலுதவி அளிக்க கற்றுக்கொள்ளுங்கள்..


முதலுதவி அளிக்க கற்றுக்கொள்ளுங்கள்..

ஆரம்பித்திலேயே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறோம். ஒரு கையோடு இருந்தால் போதும். எல்லா சந்தர்ப்பங்கம் நாமாகவே சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று நினைத்துவிடாதீர்கள். காரணம் சிகிச்சை முறைகள் நபருக்கு மாறுபடும். சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். ஆனாலும் சில பொதுவான விதிகளை மட்டுமே இங்கே தொகுத்துள்ளோம்.

முதல் கட்டமாக, முதலுதவி செய்பவர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் மூன்று:

1.உயிரைப் பாதுகாக்க வேண்டும்.
2.நிலைமை மோசமாவதைத் தடுக்க வேண்டும்.
3.சீக்கிரத்தில குணமளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
எல்லாவற்றையும் விட முக்கியமானது தைரியம். பாதிக்கப்பட்டவர்களைத் தேற்றி, ஆறுதல் சொல்ல வேண்டும். பயப்படக் கூடாது. தவிரவும் வேறு சில பொறுப்புகளும் உள்ளன.

1. உடனடியாக நிலைமையை ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும். பதட்டப்படக் கூடாது. தகுந்த மருத்துவ உதவி கிடைக்க உதவ வேண்டும்.
2. தீ விபத்தில் சிக்கிக் கொண்ட ஒருவருக்கு முதலுதவி அளிக்க வேண்டும் என்றால் முதலில் முதலுதவி அளிக்க முன்வருபவருக்குத் தன்னை பாதுகாக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிறகு, பாதிக்கப்பட்டவர், பிறகு அருகில் இருப்பவர்.
3. பாதிப்பின் தன்மையை சரியாக உணர்ந்துகொள் வேண்டும்.
4. உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளவர் மீது நம் கவனம் முதலில் திரும்ப வேண்டும்.
5. சம்பந்தப்பட்டவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கோ, வீட்டுக்கோ, மருத்துவரிடமோ அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். தக்க வாகனங்களைத் தயார் செய்ய வேண்டும்.
6. மருத்தவ உதவி கிடைக்கும்வரை சம்பந்தப்பட்டவருக்கு அருகேயே இருக்க வேண்டும்.
7. நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டும்.

எப்படிச் சமாளிப்பது?
நிதானத்துடன், பதற்றமில்லாமல், இவை இரண்டும் மிக மிக முக்கயம். மேலும் சில குறிப்புகள் கீழே –

1. சூழ்நிலையை உணர்தல்
2. பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துதல்
3. அவசர சிகிச்சை அளித்தல்
4. உதவி பெறுதல்
5. மீண்டு வருதல்

அடிப்படை உயிர் பாதுகாப்பு முறை

1. பாதிக்கப்பட்டவர் உடன் இருப்பவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பாதுகாப்பு முக்கியமானது.
பேச்சு மூச்சு இல்லையா?
கத்தி உதவி கேட்கவும்
காற்றோட்டம் ஏற்படுத்தவும்
சுவாசம் சீராக இருக்கிறதா?
அருகிலுள்ள அவசர சிகிச்சை எண்ணைத் தொடர்பு கொள்ளவு.
30முறை நெஞ்சை அழுத்தம் முறை
சுவாச மீட்டு (2முறை)
மீண்டும் 30 தடவை நெஞ்சை அழுத்தும் முறை

2. ஏதாவது அசைவு இருக்கிறதா என்று பார்க்கவும் எப்படி இருக்கிறீர்கள்? என்று தோளை அசைத்துக் கேட்கலாம்.

3. அ) அவரிடமிருந்து பதில் வந்தால்
வேறு ஆபத்து இல்லை என்னும் பட்சத்தில், அவர் முன்னர் இருந்த நிலையிலேயே இருக்க விடலாம்.
அவருக்கு என்ன பிரச்சனை என்று கண்டறிய முயற்சி செய்யுங்கள். உதவி கிடைக்குமா என்று பாருங்கள்.
அவ்வப்போது அவரைப் பரிசோதித்துக் கொண்டே இருங்கள்.

3) ஆ) அவரிடமிருந்து பதில்இல்லை என்றால்
உதவி கேட்டு கத்துங்கள்
சம்பந்தப்பட்டவரை பின்பக்கமாகத் திருப்பவும். அவர் மூச்சு விடுவதற்கு ஏற்ப தலையையும் மோவாய் கட்டையையும் உயர்த்தி வைக்கவும்.
தலையைச் சாய்த்து, மோவாயை உயர்த்துதல்

1) அவரது நெற்றியில் கை வைத்து தலையை பின்னுக்கு சாய்க்கவும்.
2) உங்கள் விரல் நுனியை மோவாய்கட்டையின் முனையில் வைத்து உயர்த்தவும்

தலையைச் சாய்த்து, மோவாய் கட்டையை உயர்த்துதல்

4. சீரான சுவாசம் இருக்கிறதா என்று சரிபார்த்தல்
மார்பில் ஏற்ற இறக்கம் இருக்கிறதா என்று கவனித்தல்

சுவாசிக்கும் சத்தம் கேட்கிறதா என்ற வாயை கவனித்தல்
முகத்துக்கு அருகே குனிந்து சுவாசத்தை கவனித்தல்

சுவாசத்தை கவனித்தல்

நினைவிழப்பு ஏற்பட்ட ஒரு சில நிமிடங்களுக்கு சுவாசம் தடைபடும். சுவாசிக்கும் இடைவெளி அதிகம் இருக்கும். இறைச்சல் இருக்கும். இதனைக் கூர்ந்து கவனிக்க வேண்டியது. அவசியம்.

சந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபரின் சுவாசத்தை பத்து விநாடிகள் தொடர்ந்து கண்காணிக்கவும். சிறிய தடங்கல் ஏற்பட்டாலும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம்.

5. அ) சுவாசம் சீராக இருந்தால் –
அவரது நிலையை மாற்றவும்
உதவி பெறவும். ஆம்புலன்ஸை வரவழைக்கவும்
தொடர்ந்து சீராக சுவாசிக்கிறாரா என்று கண்காணிக்கவும்.

குணமடையும் நிலை

5 அ) சுவாசம் சீராக இல்லை என்றால் –
அருகிலிருப்பவரிடம் சொல்லி உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைக்கவும். நீங்கள் தனியாக இருக்கும்பட்சத்தில், கீழ்க்கண்ட விஷயங்களைச் செய்யலாம்.

1. அவருக்கு அருகே முழங்காலிட்டு அமர்ந்துகொள்ளவும்.
2. ஒரு கையைப் பிரித்து அவரது நெஞ்சின் மையத்தில் வைக்கவும்.
நெஞ்சின் மையத்தில் கையை வைத்தல்

3. முதல் கையின் மீது மற்றொரு கையை வைக்கவும்.
முதல் கையின் மீது மற்றொரு கையை வைத்தல்

4.கை விரல்களை ஒன்றாகச் சேர்த்துக்கொள்ளவும். கவனம், அவரது நெஞ்சையோ மார்புக்கூட்டையோ அழுத்த வேண்டாம்
இரு கை விரல்களையும் சேர்த்துக் கொள்ளுதல்

5.செங்குத்தாக, சம்பந்தப்பட்டவரின் நெஞ்சுக்கு மேலாக நகர்ந்து, மார் எலும்பை 4 – 5 செ.மீட்டர் அழுத்தவும்

மார் எலும்பை 4 – 5 செ.மீட்டர் அழுத்துதல்
6. ஒவ்வொரு முறை அழுத்தி பின்பும், நெஞ்சில் உள்ள அழுத்தத்தை வெளியேற்றவும். அவ்வாறு செய்யும்போது, உங்கள் கைகளும் மார் எலும்பு இடையில் தொடர்பு இருக்க வேண்டும்.
7. ஒரு நிமிடத்துக்கு நூறு முறை அழுத்தலாம் (ஒரு விநாடிக்கு இரண்டு முறை என்னும் விகிதத்தைவிட கொஞ்சம் குறைச்சல்)
8. அழுத்தும்போதும், வெளியேற்றும்போதும் ஒரே மாதிரியான அவகாசம்தான் இருக்க வேண்டும்.

6 அ) நெஞ்சை அழுத்துவதையும் சுவாசத்தை மீட்பதையும் ஒன்றிணைத்தல்
30 அழுத்தங்களுக்குப் பிறகு, மீண்டும் தலையைச் சாய்த்து மோவாயை உயர்த்தவும்.
உங்கள் ஆள்காட்டி விரலையும் கட்டை விரலைவும் கொண்டு அவரது மூக்கை மெலிதாக அழுத்தவும்.
மோவாய் கட்டையை உயர்த்தியபடி, அவரது வாயை மெதுவாகத் திறக்கவும்.

தலையைச் சாய்த்து மோவாயை உயர்த்தும்போது, மூக்கையும் மெலிதாக அழுத்தவும்.

ஒரு முறை மூச்சை இழுத்து விட்டுவிட்டு, அவரது வாயோடு உங்கள் வாயைப் பொருத்துங்கள்.
அவரது வாயுக்குள் ஊத ஆரம்பியுங்கள். அப்போது அவரது நெஞ்சு உயர்கிறதா என்று கவனியுங்கள். இயல்பாக சுவாசிக்கும்போது நெஞ்சு எப்படி உயர்கிறதோ அப்படி உயர்ந்த பின், மீண்டும் ஊதுங்கள். இது சுவாசத்தை மீட்கும் வழி.

நெஞ்சு உயர்கிறதா என்று கவனித்தபடியே அவரது வாய்க்குள் ஊதுங்கள்

தலை சாய்ந்த நிலையிலும், மோவாய் உயர்ந்த நிலையிலும் இருக்கும்போது, உங்கள் வாயை அவரிடமிருந்து விலக்கிக் கொள்ளுங்கள். காற்று வெறியேறும்போது, அவரது நெஞ்சு கீழே இறங்கிறதா என்று கவனியுங்கள்.

உங்கள் வாயை அவரிடமிருந்து விலக்கிக் கொள்ளுங்கள். காற்று வெளியேறும்போது, அவரது நெஞ்சு கீழே இறங்குகிறதா என்று கவனியுங்கள்.

நன்றாக ஒரு முறை சுவாசித்துவிட்டு, மீண்டும் குனிந்து அவர் வாயில் ஊதுங்கள். மொத்தம் இரண்டு முறை, முன் இருந்த நிலையில் அவரைக் கொண்டு சென்று மீண்டும் 30 முறை நெஞ்சை அழுத்துங்கள்.

30 முறை நெஞ்சை அழுத்யி பிறகு, இரண்டு முறை சுவாச மீட்புச் செய்யலாம்.

அவர் இயல்பாக சுவாசிக்க ஆரம்பித்தால் ஒழிய இந்த முறைகளைக் கைவிட வேண்டாம்.

மேற்கண்ட வழிகளில் முயன்றும் சீரான சுவாசம் வரவில்லை என்றால், மீண்டும் முயற்சியைத் தொடரும் முன் கீழ்க்கண்டவற்றைச் செய்யவும்.
தடை செய்யும்படி அவர் வாயில் ஏதாவது உள்ளதா என்று பார்க்கவும்
போதுமான அளவுக்குத் தலை சாய்க்கப்பட்ட நிலையிலும் முகவாய்க்கட்டை உயர்த்தப்பட்ட நிலையிலும் உள்ளதா என்று சரிபார்க்கவும்
மார்பை அழுத்துவதற்கு முன்னால் இரண்டு முறைக்கு மேல் ஊத வேண்டாம்.
ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கும் பட்சத்தில், இரண்டு நிமிட இடைவெளிக்குப் பிறகு, மற்றொருவர் மார்பை அழுத்தும் பணியைச் செய்யலாம்.

6 ஆ) மார்பை அழுத்துதல் மட்டும்
சுவாச மீட்பு செய்வதில் உங்களுக்கு விருப்பமில்லாத பட்சத்தில், மார்பை மட்டும் அழுத்தவும்.
இடையில் நிறுத்தாமல் நிமிடத்துக்கு 100 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அவருக்கு சுவாசம் திரும்பி விட்டதா என்று பார்க்கவும், திரும்பவில்லை என்றால் மீண்டும் சிகிச்சையை தொடரவும்.

7. இதய இயக்க மீட்புப் பணியை எது வரை தொடரலாம்?
தகுந்த பயிற்சி பெற்ற ஒருவர் வரும் வரை
பாதிக்கப்பட்டவர் சீராக மூச்சு விடும் வரை
நீங்கள் சோர்வடையும் வரை

மீட்பு நிலை
பாதிக்கப்பட்டவரை இப்படித்தாக் கிடத்தி வைக்க வேண்டும் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. ஆனால், அவர் நிலையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். சுவாசம் தடைபடாதபடி இருக்க வேண்டும்.

கீழ்க்கண்டவற்றைச் செய்யலாம்.

அவரது மூக்குக் கண்ணாடியை அகற்றவும்
அவரது கால்கள் நேராக நீட்டிக் கொண்டிருக்கின்றதா என்று கவனிக்கவும்.
அவருக்குப் பக்கவாட்டில் மண்டியிட்டு அமர்ந்து, கீழ்க்கண்ட படத்தில் உள்ளவாறு உங்கள் கைகளால் அவரது மணிக்கட்டையும் முழங்கைகையும் பற்றிக்கொள்ளவும்

உங்கள் கைகளால் அவரது மணிக்கட்டையும் முழங்கையைம் பற்றிக் கொள்ளவும்

மார்புக்குக் குறுக்காக அவரது கையை எடுத்துச் செல்லவும். அவரது கன்னத்தை ஒட்டியபடி உங்கள் கையை ஊன்றவும்.

மார்புக்குக் குறுக்காக அவரது கையை எடுத்துச் சென்று, அவரது கன்னத்தை ஒட்டியபடி உங்கள் கையை ஊன்றவும்.

மற்றொரு கையால் அவரது காலை மேல் நோக்கி உயர்த்தவும். கால் பாதம் தரையில் படும்படி இருக்க வேண்டும்.

மற்றொரு கையால் அவரது காலை மேல் நோக்கி உயர்த்தவும். கால் பாதம் தரையில் படும்படி இருக்க வேண்டும்.

உங்களது ஒரு கை அவரது கன்னத்தில் இருக்கிறது- அப்படியே, மற்றொரு கையால் அவரை பக்கவாட்டில் ஒருக்களித்தவாறு திருப்பி விடுங்கள்.

படத்தில் உள்ளவாறு அவரது கால்களை மாற்றி வைக்கவும்
காற்று வழி தடைபடாதபடி தலை¬யைச் சரிசெய்யவும்.
காற்று வழி தடைபடாதபடி தலையைச் சரிசெய்யவும்
தேவைப்பட்டால், கன்னத்தின் கீழே உள்ள அவரது கையை சரி செய்யவும்.

மீட்பு நிலை

சுவாசத்தின் தொடர்ச்சியை பரிசோதிக்கவும்

ஒருக்களித்த நிலையிலேயே அரை மணி நேரத்துக்கு மேலாக அவர் இருக்க வேண்டும் என்னும் நிலையில், எதிர்பபுறமாக அவரைத் திருப்பி விடலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: