Posted by: shuhaib | 16/06/2010

அடிப்படை ஆங்கிலம்


அன்புடையீர்!

ஆங்கிலத்தில் சரளமாக பேசவேண்டும் என்ற ஆவல் இன்று பெரும் பாலானவர்களிடம் நிறைந்திருக்கிறது.

இவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான வழி என்ன என்பதைப்பற்றி நான் நாட்களாக யோசித்ததுண்டு.

தற்போது கடைகளில் விற்கப்படும் புத்தகங்களை எல்லாம் வாங்கிப்படித்து நமது மாணவர்கள் தனது பொன்னான நேரங்களை அதில் வீணாக்குகிறார்கள்..அப்படி கடைகளில் வாங்கிப்படிக்கும் புத்தகம்போல்அல்லாமல், மாணவர்களது பிரச்சினை என்ன என்பதை முழுமையாக அறிந்து, அவர்களுக்கு புரியும் விதத்தில் மிகவும் எழிய முறையில் ஆங்கில மொழியைச் சொல்லிக்கொடுக்க என்ன செய்யலாம் என்று நான் பல அறிஞர்களிடமும், வல்லுனர்களிடமும் கலந்து ஆலோசித்தேன்.

இதன் விழைவாக, அவர்களுடைய ஒத்துழைப்புடன் நான் “ஈஸி இங்கிலீஷ் ” என்னும் இந்த பக்கத்தை உங்களுக்காக என் தளம் மூலமாக தினமும் உங்களுக்கு சொல்லி தரபோகிறேன்…

தமிழில் எவரும் இதுவரை மேற்கொள்ளாத ஒரு புது முயற்சியாக உளவியல் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள பாடங்களை நீங்கள் ஆர்வமுடன் படித்துப்பயிற்சி செய்தால் போதும். அடிப்படையிலிருந்து ஆங்கில இலக்கணத்தை நீங்கள் முழுமையாக கற்றுக்கொள்ளமுடியும்.

இனி நமக்கு வகுப்பிற்கு போகலாம்.

வகுப்பு 1

இது நமது முதல் வகுப்பு. இந்த வகுப்பில் அடிப்படை ஆங்கிலம் பற்றி கூற விரும்புகிறேன்.

1. எழுத்துக்கள்

தமிழ் எழுத்துக்கள் எத்தனை என்று உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் நான் கூறி விடுகிறேன்.

தமிழில் ‘அ’ முதல் ‘ஔ’ வரையுள்ள உயிர் எழுத்துக்கள் மொத்தம் 12.

‘க்’ முதல் ‘ன்’ வரையுள்ள மெய்யெழுத்துக்கள் மொத்தம் 18.

உயிரும் மெய்யும் சேர்ந்த ‘க’ முதல் ‘னெள’  வரையுள்ள உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம் 216.

ஃ என்ற ஆயுத எழுத்தும் உண்டு.

உயிர் எழுத்துக்கள்                           12
மெய்யெழுத்துக்கள்                         18
உயிர்மெய் எழுத்துக்கள்                216

ஆயுத எழுத்து                                   1
மொத்தம்                                      247

ஆனால் ஆங்கில எழுத்துக்கள் மொத்தம் 26 தான். இதில் உயிரெழுத்துக்கள்  மொத்தம், மெய்யெழுத்துக்கள் என்ற இரண்டு வகை உண்டு.

ஆங்கில உயிரெழுத்துக்கள்

A,      E,      I,      O,     U

ஆங்கில உயிரெழுத்துக்கள் மொத்தம் 5  மட்டுமே.

கவனிக்கவும்

உயிரெழுத்துக்கள் 5  அதாவது A,    E,      I,      O,     U இதை மட்டும் மனப்பாடமாக வைத்துக்கொண்டால் போதும். மற்ற ஆங்கில எழுத்துக்கள் எல்லாம் மெய்யெழுத்துக்கள் என்று தானாகவே தெரிந்து கொண்டு விடலாம்.

ஆங்கில மெய்யெழுத்துக்கள்

A,      B,      C,     D,     F,      G,      H,      J

K,      L,       M,     N,      P,      Q,      R

S,       T,       V,      W,     X,      Y,      Z

ஆங்கில மெய்யெழுத்துக்கள்  மொத்தம் 21 மட்டுமே.

ஆங்கிலத்தில், தமிழில் இருப்பதைப்போன்று உயிர்மெய் எழுத்துக்கள் கிடையாது.

உதாரணமாக நாம் ராமா என்பதை தமிழில் எழுத வேண்டு

மானால் உயிர்மெய் எழுத்தான ‘ரா’ மற்றும் ‘மா’ இவ்விரண்டையும் சேர்த்து நாம் எழுதுகிறோம்.இதையே ஆங்கிலத்தில் எழுதவேண்டுமானால் மெய்யெழுதான

R என்பதையும், உயிரேழுதான A என்பதையும் இணைத்து RA-ரா என்று உயிர்மெய் எழுத்தை உருவாக்கவேண்டும். அதே போல மெய்யெழுதான M என்பதயும், உயிரேழுதான A என்பதயும் இணைத்து M A-மா என்று உயிர்மெய் எழுத்தை உருவாக்க  வேண்டும் RA-ரா, M A-மா RAMA –ராமா என்ற சொல்லை நாம் இப்பொழுது உருவாக்கயுள்ளோம்.

தமிழ் எழுத்துகளில் ஒரே ஒரு வகைதான் உள்ளது. ஆனால் ஆங்கில எழுத்துக்களில் பெரிய எழுத்துக்கள் CAPITAL LETTERS, SMALL LETTERS என்ற சிறிய எழுத்துக்கள் என்னும் இரண்டு வகை உண்டு.

இனி ஆங்கில எழுத்துக்களை ஒன்றாக சேர்த்து அவைகளை எப்படி உச்ச்சரிக்க வேண்டும் என்பதை ஓர் அட்டவணை மூலம் விளக்கயுள்ளேன்.

ஒவ்வொரு வார்த்தையும் நிறுத்தி, நிதானமாக உச்சரித்து பழகுங்

கள்.

ஆங்கில சொற்கள்           உச்சரிப்பு

A
Am ஆம்
An ஆன
As ஆஸ்
At அட்
And அண்ட்
Ago எகோ
Air ஏர்
Ant ஆன்ட்
Aim எய்ம்
Arm ஆர்ம்
Ask ஸ்க்
Are ஆர்ம்
Axe க்ஸ்
Aall ஆல்
Also ஆல்ஸோ
Aunt ஆண்ட்

குறிப்பு:

தமிழ் உச்சரிப்புப் பகுதியில் சில வார்த்தைகள் தடித்த எழுத்தில் உள்ளதை கவனித்தீர்களா? தடித்த வார்த்தைகளை லேசாக உச்சரிக்க வேண்டும்..

இனி ஆங்கில எழுத்துக்களை ஒன்றாக சேர்த்து எழுதும்போது உச்சரிப்பு எப்படியெல்லாம் மாறுபடுகிறது என்பதை விளக்குகிறேன்.

ING – இதை ‘ங்’ என்று உச்சரிக்க வேண்டும்.

GOING,   COMING,   SEEING,   READING,   DOING,   WALKING,  PLAYING

‘CK’ என்பதை ‘க்’ என்று உச்சரிக்க வேண்டும்.

COCK,   CLOCK,   LOCK,   SHOCK

‘CH’ என்பதை ‘ச்’ என்று உச்சரிக்க வேண்டும்.

BENCH,  CHURCH,  BUNCH,  LUNCH,  MUCH

‘TION’  ‘SION’ என்பவை ‘ஷன்’ உச்சரிப்பை கொடுக்கும்.

NATION,  ACTION,  RATION,  FUSION

உயிர் எழுத்திற்கு பிறகு ‘DU’ என்ற எழுத்துக்கள் இடம் பெற்றால் அதன் உச்சரிப்புஜுஎன்று வரும்.

EDUCATION,  GRADUAT,  EDUCATED,   GRADUAL

‘PHO’ என்பதுஃபோஎன்று உச்சரிக்கப்படுகிறது.

PHOTO,  PHONE

‘PHY’ என்பதன் உச்சரிப்புஃபிஎன்று வரும்.

PHYSICS , PHYSIOTHERAPY

ஆங்கில சொற்களில் இடம் பெறும் சில எழுத்துக்களை உச்ச்சரிக்ககூடாது.

‘OFTEN’ ‘T’ என்பதை உச்சரிக்காமல்ஆஃபன்என்றே உச்சரிக்க வேண்டும்.

‘T’ ஐச் சேர்த்துஆப்டன்என்று உச்சரிக்கக்கூடாது.

இதேப்போல சில வார்த்தைகள்.

சொற்கள் உச்சரிக்க்கூடாத ழுத்து
COMP B
LAMB B
KNOW K
TALK L
DOUBT B
COULD L
LISTEN T
FORM R
WORM R
SHOULD L
WALK L
KNIFE K

இதுவரை ஆங்கில எழுத்துக்கள் உச்சரிக்கும் முறை எப்படி என்று தெரிந்து கொண்டீர்கள் …


Responses

  1. Appreciate u for ur effort and dictionay words with a sentence

  2. plz continue…sir ,its very use full

  3. rombo usefula iruku sir, neenga thodranthu eluthunga sir,…plz

    • எழுதுகிறேன்…உங்கள் வருகைக்கு நன்றிகள்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: