Posted by: shuhaib | 16/06/2010

ஆங்கில இலக்கணம்


இனி  ஆங்கில இலக்கணம் பற்றி பார்க்கலாம்.

ஆங்கில இலக்கணத்தில் part of speech என்பதைப்பற்றி நீங்கள் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.

PART OF SPEECH

சொற்களின் வகைகள்
NOUN பெயர்ச்சொல்
PRONOUN பிரதி பெயர்ச்சொல்
VERB வினைச்சொல்
ADVERB வினையை சிறப்பிக்கும் சொல்
ADJECTIVE பெயரை சிறப்பிக்கும் சொல்
PREPOSITIONS வேற்றுமை உருபுகள்
CONJUNCTION இணைப்புச்சொல்
INTERJECTION வியப்பிடைச்சொல்

மேற்கூறிய எட்டு தலைப்புகளில்தான் இந்த ஆங்கில இலக்கணம் அடங்கயுள்ளது.

எனவே இவைகளைச் சற்று கவனமாக படிதுக்கொண்டால் ஆங்கிலத்தில் புலமை பெறலாம்.

தற்போது இந்த எட்டு தலைப்புப் பற்றி சுருக்கமாக கூறுகிறேன்.

NOUN (நௌன்)

Noun எனபது பெயர்சொல்லாகும். பொருட்களின் பெயர்கள், மனிதனின் பெயர், இடத்தின் பெயர்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லும் அனைத்துமே பெயர்ச் சொல்லாகும்.

உதாரணம்: இப்ராஹீம், அஹ்மத், பிரகாஷ், ஜோசப், கரடி, சிங்கம், ரோஜா, தாமரை, மயில், காகம்,நாகர்கோயில், மதுரை….

Noun என்பதை 4 பிரிவாக பிரிக்கலாம்.

1.Proper Noun (சிறப்புப் பெயர்ச்சொல்)

ஒரு குறிப்பிட்ட ஆளின், இடத்தின், பொருளின் பெயரைக்குறிப்பதாகும். ஈ. வே. ரா பெரியார் என்பது அனைவரும் அறிந்த பெயர். இது ஒரு தனிப்பட்ட நபரின் பெயரைக் குறிப்பதாகும்.

2.Common Noun (பொதுப்பெயர்ச்சொல்)

நாம் குறிப்பாக, குழந்தை என்கிறோம். இது பொதுப்பெயர். ஆண் குழந்தையாகவும் இருக்கலாம். பெண் குழந்தையாகவும் இருக்கலாம். இதே போலே மாடு என்கிறோம். காளை மாடு, பசு மாடு என்று தனியாக குறிப்பிட்டால் அது சிறப்புப்பெயச்சொல். பொதுவாக மாடு என்றால் அது பொதுப்பெயர்ச்சொல்.

3. Collective Noun (கூட்டுப்பெயர்ச்சொல்)

பல பொருட்களைச் சேர்த்தோ, பல நபர்களைச் சேர்த்தோ கூட்டாக குறிக்கும் சொற்களை collective noun என்கிறோம்.

உதாரணம்: Army என்கிறோம். இதன் அர்த்தம் படை வீரர்கள். படை என்றால் பல இராணுவ வீரர்கள் சேர்ந்த ஒரு குழுவாகும். அதுபோலவே Sangam . சங்கம் என்றால் பல நபர்கள் இணைந்த ஒரு கூட்டம். Cattle  (மந்தை). இவைகள் கூட்டுப்பெயர்ச்சொல் எனப்படும்.

3. Abstract Noun (பண்புப் பெயர்ச்சொல்)

மனிதன் மற்றவர்களிடம் அன்பாக இருக்கவேண்டும் என்று கூறுகிறோம்.

ஆனால் இந்த அன்பை நமது கண்களால் பார்க்க முடிமா? முடியாது. உணரத்தான் முடியும். இதேப்போன்று…

Influence ———— செல்வாக்கு

Strenth———— பலம்

Honesty———— நேர்மை

Kind———— அன்பு

Hatred———— வெறுப்புதன்மை

போன்றவைகள் பண்புப் பெயர் என்கிறோம்.

அடுத்த வகுப்பில் இறைவன் நாடினால் PRONOUN பற்றி  பார்போம்.


Responses

  1. Pl.continue, very interesting to learn

    • I am sure.. I will continue it… Thanks for your comment.

  2. Thanks for teaching in simple method!

  3. Dear sir,
    Very good attempt to teach English
    I appreciate your efforts

  4. good,continue

  5. plz continue very intersting to read

    • மிகவும் நன்றி நண்பனே … உங்கள் ஊக்கத்துக்கு நன்றி

  6. dear sir,
    its very good attempt to teach english grammer,
    very useful sit,plz continue …its my umble request

    • yes … i will do it soon .. don’t worry dear

  7. anna enga poninga pls eluthunga ………….enaku ithu rombo usefula iruku……enaku next sem champous iruku na so neenga enakaga continue panunga…………pls pls pls pls

    • i will do it soon


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: