Posted by: shuhaib | 17/06/2010

“ஆன்டர்சனை தப்பிக்க விட்டிருக்காவிட்டால் வன்முறை கும்பல் அவரை கொன்றிருக்கும்’


புதுடில்லி : “போபால் விஷ வாயு கசிவு நிகழ்ந்த நேரத்தில், ஆன்டர்சனை தப்பிக்க விட்டிருக்கா விட்டால், கோபத்தில் இருந்த வன்முறை கும்பல் அவரை கொன்றிருக்கும்’ என, காங்கிரஸ் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போபால் விஷ வாயு கசிவு நிகழ்ந்த போது, கசிவுக்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆன்டர்சன் தப்பிச் செல்ல, மத்தியப் பிரதேச அரசும், மத்திய அரசும் உதவின என, எதிர்க்கட்சிகள் உட்பட பல தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலக பொறுப்பாளரும், காங்கிரஸ் கட்சியின் சட்ட உதவி மற்றும் மனித உரிமைகள் துறையின் செயலருமான கே.சி.மிட்டல் ஆவணம் ஒன்றைத் தயாரித்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:போபால் விஷ வாயு கசிவு நிகழ்ந்து ஆயிரக்கணக்கானவர்கள் செத்து மடிந்த நேரத்தில், கொந்தளிப்பான சூழ்நிலை காணப்பட்டது. ஏராளமானோர் பலியானதால், வன்முறையும் நிகழ்ந்தது. அப்போது வாரன் ஆன்டர்சனை தப்பிக்க அனுமதி கொடுக்காமல் இருந்திருந்தால், கோபத்திலிருந்த மக்கள் கும்பல் அவரை அடித்தே கொன்றிருக்கும். பெரும் சட்ட ஒழுங்கு பிரச்னை உருவாகியிருக்கும்.அப்போதிருந்த சூழ்நிலையில், ஆன்டர்சன் போபாலை விட்டு வெளியேறியது சரியானது. நிலைமை மேலும் மோசமாவதை தடுக்கவே, மத்தியப் பிரதேச நிர்வாகத்தினர் இந்த முடிவை எடுத்தனர்.

கிரிமினல்கள் உட்பட ஒவ்வொரு குடிமகனையும் காக்க வேண்டியது அரசின் கடமை. மும்பை தாக்குதல் வழக்கின் குற்றவாளி அஜ்மல் கசாப்பிற்கும், அரசு சார்பில் தான் சட்ட உதவி அளிக்கப்பட்டது. இதற்கான செலவையும் அரசே ஏற்றுக் கொண்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏராளமானவர்களை கசாப் கொன்ற போதும், அவனுக்காக நிறைய பணத்தை அரசு செலவிட்டுள்ளது.எப்போது தேவைப்பட்டாலும், அப்போது கோர்ட்டில் ஆஜராவதாக ஆன்டர்சன் உத்தரவாதம் அளித்துள்ளார். மேலும், ஆன்டர்சனை பிடித்துக் கொண்டுவர வேண்டும் எனில், அதற்கு கோர்ட்டும், சி.பி.ஐ.,யும்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போபால் விஷ வாயு சம்பவ விவகாரத்தில், ராஜிவை களங்கப்படுத்த சதி நடக்கிறது.இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதிலும், மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்துவதிலும் மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவை எல்லாம் பாராட்டத்தக்கவை. மேலும், ராஜிவ்காந்தி மேற்கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையின் காரணமாக, அவசரச் சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்த அவசர சட்டம் சட்டமாக மாற்றப்பட்டது. இதன் மூலம் போபால் விஷ வாயு சம்பவத்தினால், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக அமெரிக்க கோர்ட்டுகளில் வழக்குத் தொடர ஏற்பாடு செய்யப்பட்டது. ராஜிவின் இந்த செயலால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் கிடைத்தது. இவ்வாறு ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: