Posted by: shuhaib | 17/06/2010

திருப்தியின்மை


தீர்க்க முடியாத பல மன வியாதிகளில் ஒன்று- திருப்தியின்மை. இது தன்னைதானே கொல்லும் மிகப் பெரிய மன வியாதி. நிச்சயம், நம்மில் அனேகம் பேருக்கு இந்த வியாதி பீடித்திருக்கலாம். சந்தேகமே இல்லை, அவசியம் இவை தீர்த்து கொள்ள வேண்டிய வியாதி தான். இது, பாதிக்கப்பட்டவரையும் அலைக்கழித்து, அவரை சார்ந்துள்ளவரையும் அலைகழிக்கும் என்பதில் துளியும் மாற்று கருத்து இல்லை. எங்கெல்லாம், எதனாலெல்லாம் திருப்தியின்மை வருகிறது.

அந்த பெரியவருக்கு, இப்போது வயது அறுபதிருக்கலாம். திருமணமாகி முப்பது, முப்பதிரண்டு ஆண்டுகள் இருக்கக்கூடும். திருமணமாகி, இத்தனை வருஷங்களுக்கு பிறகும்- “எனக்கு தகுதியானவளே நீ கிடையாது. உன்னை அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என்பார்- தன் மனைவியை பார்த்து.

நான் அந்த அம்மாவை பார்த்திருக்கிறேன். ஒரு இல்லத்தரசி எப்படி இருக்க வேண்டுமோ- அப்படி இருந்தார். பலர் என்னற்ற விஷயங்களை அவரிடம் கற்று கொள்ளலாம். அவரது, எந்த ஒரு பணியையும் குற்றம் சொல்ல முடியாது. மிகப் பெரிய வசதி இல்லை என்ற போதும்-குடும்பத்தை சரியாக நிர்வகித்தார். அந்த பெரியவருக்கு குடும்பம் குறித்தெல்லாம் அக்கறை இருந்ததில்லை. தான் தோன்றித்தனமாக தான் வாழ்ந்தார்.

அந்த பெண்மணியால் தான் குடும்பம் சிறப்பு பெற்றது என்றும் சொல்லலாம். குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டு வந்தார். படித்திருந்தால், ஒரு மிகப்பெரிய நிறுவனத்தை கூட அந்த பெண்மணியால், நிர்வகித்து இருக்கமுடியும். அப்படிப்பட்ட பெண்ணை பார்த்து தான் “எனக்கு தகுதியானவளே நீ கிடையாது. உன்னை அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என்கிறார்.

தனக்கு என்ன தேவை, தன் தகுதி என்ன என்பதை அறிந்து கொள்ளாமலே, எதன் பொருட்டாவது ஆசை வைப்பவர்களையே, திருப்தியின்மை என்கிற வியாதி பீடிக்கிறது.

அவர் சொன்னதை, அந்த பெண் தான் சொல்லி இருக்க வேண்டும், இவரைப் பார்த்து “எனக்கு தகுதியானவரா நீங்க கிடையாது. உங்களை அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என்று. ஆனால்- அவர் சொல்லவில்லை. காரணம். மனித குணங்களை முழுமையாக உணர்ந்தவர்கள், எப்போதும் பிறரை குறை சொல்ல மாட்டார்கள்.

இதே போல் பெண்களும், தங்கள் வாழ்க்கை துணை மீது திருப்தியின்மையை வெளிப்படுத்துகிறார்கள். சில நேரங்களில் திருப்தியின்மையில் உண்மையும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எப்போதும் அவை உண்மையாக இருப்பதில்லை. அலுத்து கொள்ளுதலே அனேக சமயங்களில் உள்ளது.

திட்டமிடுதல் எவரிடம் இல்லையோ- அவர்களிடம் திருப்தியின்மை உள்ளது. அவ நம்பிக்கை எவர் மனதில் குடி கொண்டுள்ளதோ- அவர்களிடம் திருப்தியின்மை உள்ளது. உலகில் எல்லாமே ஒன்று போல் இருக்காது. ஒன்றை விட ஒன்று சிறப்பானதாகவோ அல்லது ஒன்றை விட ஒன்று சிறப்பு குறைவானதாகவோ இருக்கலாம். இது குறித்த ஒரு தெளிவு பெற்றோருக்கு – நிச்சயம் திருப்தியின்மை என்றால் என்ன என்று கூட தெரியாமல் இருக்கும்.

ஒரு முறை நண்பரின் மனைவி, ஜவுளி கடைக்கு சென்று இருக்கிறார். பத்து நிமிஷத்தில் தனக்கான சேலையை தேர்வு செய்து விட்டார். வழக்கமாய் அவர், ஒரு சேலையை தேர்வு செய்ய ஒரு மணி நேரமாவது ஆகும். வழி நெடுக, தன் கணவரிடம், “சேலை நல்லா இருக்கா… நல்லா இருக்கா” என்று கேட்டு கொண்டே வந்திருக்கிறார்.

“ஏன் ஓயாம்ம கேட்கிறே” என்று அவர் கணவர் கேட்டதற்கு, இப்படி பதில் சொன்னாராம், “பத்தே நிமிஷத்துல செலக்ட் பண்ணிட்டேன். எப்பவும் இவ்வளவு வேகமா செலக்ட் பண்ணியது இல்ல. அதான். அவசரப்பட்டு எடுத்துட்டோமோன்னு நினைக்கிறேன்”…என்றவர்- தொடர்ந்து, “கடைல ஏதாவது சாக்கு, போக்கு சொல்லி- இந்த சேலைய கொடுத்துட்டு வேற சேலை எடுக்கலாமா” என்றாராம். அவர் கணவர், “உனக்கு இந்த சேலை பிடிச்சு இருக்கா, பிடிக்கலயான்னு மட்டும் சொல்லு” என்று கேட்டு இருக்கிறார். “பிடிச்சு இருக்கு” என்று பதில வர,

“அப்ப அதோட விட்டுட வேண்டியது தானே. வேகமா ஒரு பொருளை தேர்வு செய்ததால் அது தரமற்றதா ஆயிடுமா அல்லது நல்ல பொருள் இல்லேன்னு ஆயிடுமா. வேகமா ஒரு பொருளை தேர்வு செய்திருப்பதன் மூலம், நீ முதிர்ச்சி அடைஞ்சிட்டு வர்றேன்னு தெரியுது” என்றாராம் நண்பர். நண்பர் சொன்னதை, அவர் மனைவி கேட்டு மனம் மாறினாரா அல்லது திருப்தியின்மையிலேயே இருந்தாரா என்று தெரியவில்லை.

ஆனால், நண்பர் சொன்னதில் நிறைய உண்மைகள் உள்ளன. சேலை எடுத்ததை சொன்னது ஒரு சின்ன உதாரணம். வாழ்வில் நிறைய விஷயங்கள், இப்படி பட்டதாகவே உள்ளன.

“திருப்தியின்மையும்”,” செய்ற வேலைய திருந்த செய்” என்பதும்- இரட்டை குழந்தைகள் போல் ஒன்று சொன்னாற் போல் இருப்பதாய் தோன்றும். ஆனால் குணம் எதிர்மறையானவைகள். தன் விஷயத்தில், குறை கண்டு பிடித்து- சீர் படுத்தி வாழ நினைப்பதே- செய்வதை திருந்த செய்யும் மனோபாவம். பிறர், எவ்வளவு சிறப்புற பணி செய்திருந்தாலும், அதில் குறை காண்வதே திருப்தியின்மையின் குணாதிசயம்.எவ்வளவு ருசியாக சாப்பாடு இருந்தாலும், “ஏதோ ஒண்ணு கம்மியா இருக்கே” என்று சொல்வார்கள். அந்த, “ஏதோ ஒண்ணு என்ன” என்பதை அவர்களால் சொல்லவே இயலாது. எத்தனை சிறப்பாக வேலையை முடித்து கொடுத்தாலும், “ஏதோ ஒண்ணு சரியா இல்லையே” என்பார்கள். அந்த “ஏதோ
ஒன்றை”- அவர்களாலேயே கண்டு பிடிக்கவே இயலாது. ஆனால் அந்த “ஏதோ ஒன்றுக்காக” திருப்தியற்று இருப்பார்கள்.

கண்ணுக்கு தெரியாத ஒன்று, மூளைக்கே  பிடிபடாத ஒன்றாக, அந்த ஏதோ ஒன்று இருக்கும். இந்த “ஏதோ ஒன்று”தான், சிலரை சந்தோஷப்படுத்தும். சிலரை சஞ்சலப்படுத்தும்.

“உன்கிட்ட உள்ள ஏதோ ஒண்ணு தான், எனக்கு பிடிச்சிருக்கு”என்பவர்களுக்கும், அந்த ஏதோ ஒன்று என்னவென்று தெரியாது. “உன்கிட்ட உள்ள ஏதோ ஒண்ணு எனக்கு பிடிக்கல” என்று சொல்பவருக்கும், அந்த ஏதோ ஒன்று- எதுவென்று தெரியாது.

Advertisements

Responses

  1. Good work ……If possible try to correct the tamil script……

    Regards
    Nazaie.M

    • முடிந்தவரை சரிபண்ண முயற்சிக்கிறேன்… நன்றி


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: