Posted by: shuhaib | 17/06/2010

பள்ளியில் படிக்குமாறு உத்தர விட்டதால் 8 வயது இளம் சாமியார் ஆசிரமத்தை மூடி விட்டு ஓட்டம்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் நந்தியாலாவில் ஆசிரமம் ஒன்று உள்ளது. இங்கு 8 வயது இளம் சாமியார் சாம்பவி பக்தர்களுக்கு ஆசி அளித்து வந்தார். பக்தர்கள் அவரது காலில் விழுந்து வழி பட்டு வந்தனர். அவரை தெய்வப்பிறவி  கிருஷ்ணரின் மறுஉருவம் என்றெல்லாம் வர்ணித்து வந்தனர்.
இந்நிலையில் ஆந்திர மனித உரிமை ஆணைய தலைவர் சுபாஷன் ரெட்டி, கல்வி உரிமை சட்டப்படி சாமியார் சாம்பவியை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும். இல்லை யென்றால் அவரது பெற்றோரை தண்டிக்க வேண்டி இருக்கும் என்று உத்தர விட்டார்.
இதையறிந்ததும் சாமியார் சாம்பவி ஆசிரமத்தை இழுத்து பூட்டி விட்டு இமாசல பிரதேசத்திற்கு தப்பி ஓடினார். அவருடன் பெற் றோரும் சென்றுள்ளனர். அங்குள்ள தலாய்லாமா ஆசிரமத்தில் அவர்கள் தங்கி உள்ளனர்.
அங்கிருந்து கர்னூல் கலெக்டருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதத்தில், நான் தலாய்லாமா ஆசிரமத்தில் தங்கி இருந்து சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் கற்று வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இளம் சாமியாரிடம் இன்று ஆசி பெற ஆசிரமத்திற்கு வந்த பக்தர்கள் கதவு மூடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பள்ளிக்கு செல்வதற்கு பயந்து இளம் சாமியார் ஆசிரமத்தை மூடி விட்டு தப்பி ஓடிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 1
நகரி, ஜூன். 16-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: