Posted by: shuhaib | 17/06/2010

பஸ்களில் தொடரும் சில்லரை தட்டுப்பாடு : கண்டக்டர்கள், பயணிகள் மோதல் அபாயம்


கீழக்கரை : கீழக்கரை,ஏர்வாடி செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் சில்லரை தட்டுப்பாடு காரணமாக கண்டக்டர்கள், பயணிகள் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு மோதல் அபாயம் காணப்படுகிறது.

கடைகளில்,பஸ்களில்,மார்க்கெட் பகுதிகளில் சில்லரையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தும் மத்திய அரசு சில்லரை புழக்கத்தை கட்டுப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக கடைகாரர்கள் தற்போது கமிஷன் கொடுத்து சில்லரை வாங்கி வியாபாரம் செய்கின்றனர்.

கண்டக்டர்களும் தேவையான சில்லரை இல்லாத நிலையில் பணிக்கு செல்கின்றனர்.அரசு அலுவலர்கள் முதல் பாமர மக்கள் வரை பெரும்பாலானோர் டிக்கெட்டிற்கான சரியான சில்லரை இல்லாமல் பஸ்களில் ஏறி விடுகின்றனர்.இதன் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.தொடர்ந்து வரும் இப்பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர் பார்க்கின்றனர்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: