Posted by: shuhaib | 17/06/2010

காந்திஜி-ஏசு-கிருஷ்ணர்


ஆசிரியர்: காந்திஜி, ஏசு கிருஸ்து, கிருஷ்ணர் இவர்கள் மூன்று பேருக்குமுள்ள ஒற்றுமை என்ன?

சர்தார்ஜி: அவங்க மூணு பேருமே, கவர்மென்ட் லீவ் நாள்-ல பிறந்தவங்க சார்.

நம்ம சர்தார் அவருடைய நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார். பேசிக் கொண்டிருந்துவிட்டு விடை பெறும் நேரம் கடும் மழை பிடித்துக் கொண்டது. நண்பர் சொன்னார்.. மழை பெய்யறதப் பாத்தா இப்போதைக்கு நிக்காது போலருக்கு சிங்கு. அதனாலே தங்கிட்டு காலேல போ..
சர்தாரும் ஒப்புக்கொண்டார்.

சற்று நேரத்தில் சர்தார் திடீரென மழையில் நனைந்து கொண்டே தெருவில் இறங்கி ஓடினார்..கொஞ்ச நேரத்தில் தொப்பலாக நனைந்து கொண்டே திரும்பினார்..

நண்பர் கேட்டார்..” எங்கே சிங்கு நனைஞ்சுக்கிட்டே ஓடினே..?’
சர்தார் சொன்னார்.. ” எப்படியும் இங்கே தங்குறதுன்னு முடிவாயிருச்சி.. அதான் என் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்தேன்.. ராத்திரிக்கு வரமாட்டேன்னு…!

சர்தார் ஒருத்தர் பஸ் ஸ்டாப்ல பஸ்க்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கார்.
பஸ்
ஸ்டாப்ல நிக்காம தள்ளி போய் நிக்குது,
சர்தாரும் பஸ்ஸ பிடிச்சிரலாம்னு ஒடுறார்…..
கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..
சரி அடுத்த ஸ்டாப்ல பிடிச்சிரலாம்னு ஒடுறார்,
அப்பவும் கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..

இப்படியே ஒடி ஒடி சர்தார் வீட்டுக்கே வந்திர்றார்.

வந்தவர் வீட்ல wife கிட்ட எல்லா கதையும் சொல்லிட்டு, பஸ் பின்னால ஒடியே வந்துட்டதால இன்னைக்கு 2.50 பைசா மிச்சம்னு சொல்றார்.

கேட்ட சர்தாரிணி(wife)க்கு ரொம்ப கோபம்,
என்னய்யா நீ பிழைக்க தெரியாத மனுசனா இருக்க பஸ் பின்னால ஒடி வந்ததுக்கு பதிலா ஒரு டாக்ஸி பின்னால ஓடி வந்த்திருந்தா 200 ரூபாயில்ல மிச்சம் ஆயிருக்கும்னு கடுப்பானார்………..

சர்தார் கடுமையா யோசிக்கத் தொடங்கினார்
அடுத்த நாளுக்காக………..

கனடாவில் கடுமையாக உழைத்த நம் சர்தார்ஜி சாந்தாசிங், கிடைத்த கொழுத்த பணத்தில் புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கினார். கார் விற்பனை நிலையத்திலிருந்து ” L ” எச்சரிக்கை பலகையுடன் காரை பிரதான சாலைக்கு ஓட்டி வந்தார். காரை சாலையின் இரு ஓரங்களிலும் அங்குமிங்குமாக தாறுமாறாக ஓட்டியதால், போக்குவரத்து காவலரிடம் பிடிபட்டார்.

காவலர், “ஏன் காரை அங்குமிங்குமாக சாலையில் தாறுமாறாக ஓட்டுகிறீர்கள்? என வினவினார்.

அதற்கு சர்தார் “நான் கார் ஓட்டி பழகுகிறேன்!” என்றார்.

உடனே காவலர், “நீங்கள், அதற்கு பயிற்சி ஆசிரியரை அருகில் வைத்துக்கொண்டல்லவா பழக வேண்டும்? எங்கே உங்கள் பழகுனர் உரிமம் தாளை காண்பியுங்கள்” என்றார்.

உடனே சாந்தாசிங், தன் பாக்கெட்டுலுள்ள கவரை உடனே எடுத்து நீட்டி “இதோ அத்தாட்சி! நான் அஞ்சல் வழியில் கார் ஓட்டி பழகுகிறேன்..!” என்றார்


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: