Posted by: shuhaib | 18/06/2010

ஈரான் நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய கட்டுப்பாடு


ஈரான் நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய கட்டுப்பாடு

வாஷிங்டன், ஜூன் 17: ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள தடையைத் தொடர்ந்து 12 நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய தடையை விதித்துள்ளது. இது தவிர, ஈரானின் புரட்சி படையைச் சேர்ந்த 2 கமாண்டர்களுக்கும் தடை விதித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் தடையை மீறி அணு திட்டத்தை நிறைவேற்ற உதவிய வங்கியின் செயல்பாடும் முடக்கப்பட்டது. இந்த வங்கி ஈரானின் செபா வங்கியின் அங்கமாகும். இது தபால் அலுவலகம் போல இயங்கிவந்தது. இதைக் கண்டுபிடித்து அதன் செயல்பாடுகளை முடக்கியதாக அமெரிக்க நிதித்துறை அமைச்சர் டிமோத்தி கெய்த்னர் தெரிவித்தார். தடையால் பாதிக்கப்பட்டுள்ள 16-வது ஈரான் வங்கி இதுவாகும்.

இது தவிர, ஈரானின் புரட்சிப் படையைச் சேர்ந்த முன்னணி கமாண்டர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள்தான்

அணுசக்தித் திட்டத்தை கண்காணித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் 22 பெட்ரோலிய ஏஜென்ஸிகளும், காப்பீட்டு நிறுவனங்களும் தற்போது பன்னாட்டு தடையில் சிக்கியுள்ளன. இவை அனைத்தும் ஈரான் அரசால் நிர்வகிக்கப்படுபவையாகும். இவற்றில் சில ஈரானிலும், சில வெளி நாடுகளிலும் செயல்படுகின்றன.

வரும் வாரங்களில் ஈரான் மீதான பொருளாதார தடையை மேலும் அதிகப்படுத்துவோம் என்றும், ஈரான் ஆதரிக்கும் பயங்கரவாத இயக்கங்கள் மீதான நெருக்குதலும் தொடரும் என்று கெய்த்னர் மேலும் தெரிவித்தார். சர்வதேச தடையிலிருந்து மறைந்து கொண்டு ஈரான் நிறுவனங்கள் செயல்படுவதைக் கண்டுபிடித்து அவற்றின் மீது தடை விதிப்பது தொடரும். இதன் மூலம் இத்தகைய நிறுவனங்களை பிற நாடுகளுக்கு அடையாளம் காட்ட உள்ளதாக கெய்த்னர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் கடந்த 9-ம் தேதி புதிதாக ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளைக் கொண்டு வந்தது. ஐக்கிய நாடுகள் சபை கொண்டு வந்த தீர்மானத்துக்கு நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ரஷியா, சீனா ஆகியன ஆதரவு தெரிவித்தன. நிரந்தர உறுப்பு நாடுகள் அல்லாத துருக்கியும், பிரேஸிலும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன.

ஈரானின் 5 முக்கிய நிறுவனங்கள் மற்றும் அந்நாட்டுக்குச் சொந்தமான 90 கப்பல்களின் விவரங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இவை அனைத்தும் தடையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்ததாக அமெரிக்கா சுட்டிக் காட்டியுள்ளது.

ஈரான் வங்கியான செபாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து தப்பித்து சர்வதேச வர்த்தகத்துக்காக தபால் நிலையம் போல செயல்பட்டுவந்தது. இதைக் கண்டறிந்து அதன் செயல்பாட்டை முடக்கியதாக அமெரிக்காவின் நிதி மற்றும் பயங்கரவாதிகளின் நிதி கண்காணிப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் துணை அமைச்சர் ஸ்டூவர்ட் லெவி தெரிவித்தார்.

போஸ்ட் பேங்க் என்ற பெயரில் இயங்கி வந்த இதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஈரானின் கப்பல் போக்குவரத்து நிறுவன (ஐஆர்ஐஎஸ்எல்) கப்பல்களுக்கும் தடை விதித்துள்ளது.

இதுவரையில் மொத்தம் 26 நிறுவனங்கள் மற்றும் ஈரான் புரட்சிக் குழுவைச் சேர்ந்த நபர்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள தடையை பிற நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. இதை சீனா முற்றிலுமாக

ஆதரித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: