Posted by: shuhaib | 18/06/2010

Pronoun


Pronoun என்றால் பிரதி பெயர்ச்சொல் என்பதாகும். ஆங்கில இலக்கணத்தைப் பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ள இவ்வகுப்பில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைப் படித்து அவற்றை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

Pronoun என்பது பெயர்ச் சொல்லிற்குப் பதிலாக வந்து பெயர்ச் சொற்கள் என்ன பொருளைக் குறிக்கிறதோ அவற்றை குறிக்கும்.

pronoun ஜ மூன்று பிரிவுகளாக விளக்கலாம் என்று நினைக்கிறேன்.

  1. FIRST PERSON
  2. SECOND PERSON
  3. THIRD PERSON

என்ன I, II, III PERSON என்று கூறினால் நாங்கள் எப்படிப் புரிந்து கொள்வது என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது.சரி. தெளிவாக கூறுகிறேன். நான் உங்களிடம் திரு.அண்ணாவைப் பற்றிக் கூறுகிறேன். இதில் நான் என்பது FIRST PERSON உங்களிடம் என்பது SECOND PERSON திரு. அண்ணா என்பது THIRD PERSON.

I PERSON (முதல் நபர்)

I நான்
WE நாங்கள்
MY என்னுடைய
OUR நம்முடைய/எங்களுடைய
ME என்னை
US எங்களை
MINE என்னுடைய

II PERSON (இரண்டாம் நபர்)

YOUYOU நீ / நீங்கள்
YOU உன்னை / உங்களை
YOUR உன்னுடைய / உங்களுடைய
YOURS உன்னுடையது / உங்களுடையது

III PERSON (மூன்றாம் நபர்)

HE அவன்
SHE அவள்
IT அது/அதை
THEY அவர்கள்
HIS அவனுடைய / அவனுடையது
HER அவளுடைய / அவளை
HERS அவளுடையது
ITS அதனுடையது
THEIR அவர்களுடைய / அவைகளுடைய
HIM அவனை

இவ்வகுப்பில் கூறியுள்ள பிரதி பெயர்ச் சொற்களை, பல முறை படித்து நினைவில் வைத்துக் கொள்ளவும். இவைகளை வைத்துக் கொண்டுதான் நாம் ஆங்கில வாக்கியங்களி அமைக்கப் போகிறோம். அதற்கு முன் SINGULAR, PLURAL பற்றி விளக்குகிறேன்.

SINGULAR (ஒருமை)

PLURAL (பன்மை)

BOY BOYS
KEY KEYS
MONKEY MONKEYS
DAY DAYS

பொதுவாக ஆங்கில ஒருமைப் பெயர்ச்சொற்களைப் பன்மையாக மாற்ற அவற்றுடன் S சேர்த்தால் போதும்.

Sசேர்த்து பன்மையாக மாற்றக் கூடாத சொற்கள் அடுத்த வகுப்பில்..


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: