Posted by: shuhaib | 20/06/2010

ஆசிய கோப்பை கிரிக்கெட்:: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி;பாகிஸ்தானை வெளியேற்றியது


10-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையின் தம்புல்லாவில் நடந்து வ ருகிறது. 4 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு நுழையும்.தொடக்க ஆட்டத்தில் இலங்கை அணி பாகிஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் இந்தியா, வங்காளதேசத்தையும், மூன்றாவது ஆட்டத்தில் இலங்கை அணி, வங்காளதேசத்தையும் வீழ்த்தி இருந்தன. இந்த நிலையில் நேற்று 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் சல்மான் பட்டும், இம்ரான் பர்ஹத்தும் நிதானமாக விளையாடி நல்ல தொடக்கத்தை தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. பர்ஹத் 25 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த சோயிப் மாலிக்கும், சல்மான்பட்டுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்ததால் பாகிஸ்தான் வலுவான ஸ்கோரை நோக்கி பயணித்தது.

ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டுக்கு 144 ரன்கள் (28.5 ஓவர்) எடுத்திருந்ததை பார்த்த போது பாகிஸ்தான் 290 ரன்களை எட்டலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த 4 ஓவர்களில் மாலிக் (39 ரன்), சல்மான் பட் (74 ரன், 85 பந்து, 9 பவுண்டரி), உமர் அமின் (5 ரன்) ஆகியோர் வெளியேறியதால் பாகிஸ்தான் ரன் வேகம் குறைந்தது. இதன் பிறகு குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் கம்ரன் அக்மல் (51 ரன், 41 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) அதிரடி காட்டியதால் பாகிஸ்தான் சவாலான ஸ்கோரை பெற்றது. 49

.3 ஓவர்களில் 267 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது.

அடுத்து 268 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கம்பீரும், ஷேவாக்கும், பாகிஸ்தான் வேக கூட்டணி அக்தர்-ஆமிர் பந்து வீச்சில் தொடக்கத்தில் திணறினார்கள். பாகிஸ்தான் பவுலர்கள் அடிக்கடி ஷார்ட்பிட்ச் பந்து போட்டு நெருக்கடி கொடுத்தனர். வழக்கத்துக்கு மாறாக தடுமாறிய அதிரடி மன்னன் ஷேவாக், தசைப்பிடிப்பாலும் அவதிப்பட்டதால் அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. 10 ரன்களில் (32 பந்து, ஒரு பவுண்டரி) அவர் ஏமாற்றினார். அடுத்து வந்த விராட் கோக்லியும் (18 ரன்) அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
இதை தொடர்ந்து கம்பீருடன், கேப்டன் டோனி ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை நல்ல நிலைக்கு உயர்த்தினர். அபாரமாக ஆடிய கம்பீர் அரைசதத்தை கடந்தார். அணியின் ஸ்கோர் 180 ரன்களை எட்டிய போது, கம்பீர் 83 ரன்களில் (97 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். இதன் பின்னர் வந்த ரோகித் ஷர்மா (22 ரன்) மற்றும் கேப்டன் டோனி (56 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பியதால், போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
வெற்றி யாருக்கு? என்பது மதில் மேல் பூனையானது. ரவீந்திர ஜடேஜா 6 ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில், சுரேஷ் ரெய்னா நம்பிக்கைïட்டினார். இறுதிகட்டத்தில் கிடைத்த பவர்-பிளே (45-49-வது ஓவர் வரை ) நெருக்கடியை குறைக்க உதவியது.
கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. ரெய்னாவும், ஹர்பஜன்சிங்கும் களத்தில் நின்றனர். 50-வது ஓவரை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் வீசினார். முதல் பந்தில் ரெய்னா ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தை ஹர்பஜன்சிங் சந்தித்த போது, ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு தேவையில்லாமல் ரெய்னா (34 ரன், 27 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ரன்-அவுட் ஆனார். இதனால் மீண்டும் சிக்சல் ஏற்பட்டது.
இதையடுத்து 8-வது விக்கெட்டுக்கு இறங்கிய பிரவீன்குமார் 3-வது பந்தில் 2 ரன்னும், 4-வது பந்தில் ஒரு ரன்னும் எடுத்தார். இதனால் வெற்றிக்கு கடைசி 2 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தை எதிர்கொண்ட ஹர்பஜன்சிங் அட்டகாசமாக சிக்சர் அடிக்க, திரிலிங்கான ஆட்டம் இந்தியாவுக்கு சுபமாக முடிந்தது.
இந்திய அணி 49.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. திடீரென ஹீரோவாக உருவெடுத்த ஹர்பஜன்சிங் 15 ரன்களுடன் (11 பந்து, 2 சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார். தம்புல்லா மைதானத்தில் பகல்-இரவு ஆட்டத்தில் சேசிங் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். கம்பீர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
2-வது வெற்றியை பெற்றதன் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இரண்டு ஆட்டத்திலும் தோல்வியடைந்த பாகிஸ்தான் போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டது. முன்னதாக 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்த இலங்கையும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து விட்டது. பாகிஸ்தானைப் போல் 2 ஆட்டத்தில் தோல்வி கண்ட வங்காளதேசமும் இறுதி வாய்ப்பை இழந்தது.

இந்த தொடரில் இன்னும் 2 லீக் ஆட்டங்கள் (பாகிஸ்தான்-வங்காளதேசம் (21-ந்தேதி), இந்தியா-இலங்கை (22-ந்தேதி எஞ்சி இருக்கின்றன. இவற்றின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. வருகிற 24-ந்தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோத உள்ளன.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: