Posted by: shuhaib | 20/06/2010

குவைத் இள​வ​ர​சர் சுட்​டுக்​கொலை


துபை, ஜூன்19: குவைத் இளவரசர் ஷேக் பாஷில் சலீம் ஷாபா அல் சலீம் அல் ஷாபா (52) துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.÷கார்கள் வாங்குவது தொடர்பான தகராறில் இளவரசரை அவரது மாமா சுட்டுக் கொன்றுவிட்டதாக அரபு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இளவரசர் இறந்து வி

ட்டதால் துக்கம் அனுசரிக்கப்படுவதாக குவைத் அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இறந்ததற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.÷இது குறித்து குவைத் பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: இளவரசர் ஷேக் பாஷிலுடன் பேசுவதற்காக வீட்டிலிருந்து அவரை அவரது மாமா வியாழக்கிழமை இரவு வெளியே அழைத்துச் சென்றார். அப்போது அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் இ

ளவரசரை அவரது மாமா துப்பாக்கியால் பலமுறை சுட்டார். இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இளவரசரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் ஷேக் பாஷில், மிக அருகில் இருந்து பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார் என்று டாக்டர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இளவரசரின் மாமாவை போலீஸôர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.÷கொல்லப்பட்ட ஷேக் பாஷில், குவைத்தின் 12-வது மன்னர் ஷேக் ஷாபா அல் சலீம் ஷாபாவின் பேரனாவார். இவரது தந்தை ஷேக் சலீம் ஷாபா அமெரிக்கா, கனடா, வெனிசுலா ஆகிய நாடுகளுக்கான குவைத் தூதராக பணியாற்றியுள்ளார். குவைத்தில் பாதுகாப்பு, வெளியுறவுத் துறை உள்பட பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் அமைச்சராகவும் இருந்துள்ளார்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: