Posted by: shuhaib | 21/06/2010

‘S’ சேர்த்து பன்மையாக மாற்றக்கூடாத சொற்கள்…


‘S’ சேர்த்து பன்மையாக மாற்றக்கூடாத சொற்கள்…

உதாரணம்: MAN –மனிதன். இது ஒருமை இதை பன்மையாக மாற்ற MAN+S = MANS மனிதர்கள் என்று மாற்றுவது தவறு. MAN என்பதன் பன்மை MEN ஆகும்.

இதைப்போன்ற மற்ற சில பெயர்ச் சொற்களை S’ சேர்க்காமல் எப்படி பன்மையாக மாற்ற வேண்டும் என்பதை விளக்குகிறேன்.

  1. பெயர் சொல்லின் கடைசி எழுத்து O,S,SH,CH,X என்ற எழுத்துக்களில் முடிவடைந்திருந்தால் இவைகளைப் பன்மையாக மாற்ற இவைகளுடன் ES’ சேர்க்க வேண்டும்.

உதாரணம்:

SINGULAR- ஒருமை

PLURAL – பன்மை

HERO (கதாநாயகன்)

HEROES (கதாநாயகர்கள்)

MANGO (மாம்பழம்)

MANGOES (மாம்பழங்கள்)

CLASS (வகுப்பு)

CLASSES (வகுப்புகள்)

BRUSH (தூரிகை)

BRUSHES (தூரிகைகள்)

WATCH (கடிகாரம்)

WATCHES (கடிகாரங்கள்)

BOX (பெட்டி)

BOXES (பெட்டிகள்)

விதிவிலக்கு:

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒருமைப் பெயர்ச்சொற்கள் ‘O’ என்ற எழுத்தை இறுதியாகக் கொண்டு முடிவடைந்திருந்தாலும் அவைகளுடன் ‘ES’ சேராது. வெறும் S’ சேர்த்தால் போதும்.

உதாரணம்:

DYNAMO

DYNAMOS

PIANO

PIANOS

PHOTO

PHOTOS

‘F’ அல்லது FE இறுதி எழுத்தாக கொண்டு முடியும் பெயர்சொர்களைப் பன்மையாக மாற்ற ‘F’ என்பதை நீக்கி விட்டு அதற்குப் பதிலாக VES’ சேர்க்க வேண்டும்.

SINGULAR- ஒருமை

PLURAL – பன்மை


LEAF (இலை)

LEAVES (இலைகள்)

KNIFE (கத்தி)

KNIVES (கத்திகள்)

THIEF (திருடன்)

THIEVES (திருடர்கள்)

WOLF (ஓநாய்)

WOLVES (ஓநாய்கள்)

SHELF (அலமாரி)

SHELVES (அலமாரிகள்)

WIFE (மனைவி)

WIVES (மனைவிகள்)

விதிவிலக்கு:

கீழே கொடுக்கப்பட்டுள்ள பெயர்ச்சொற்கள் ‘F’ இல் முடிந்திருந்தாலும் அவைகளைப் பன்மையாக மாற்ற ‘VES’

சேர்க்காமல் வெறும் S’ மட்டும் சேர்த்தல் போதும்.

உதாரணம்:

BELIEF (நம்பிக்கை)

BELIEFS

CHIEF (தலைவன்)

CHIEFS

ROOF (கூரை)

ROOFS

PROOF (சாட்சி)

PROOFS

பெயர்சொர்களின் முடிவில் Y’ என்ற எழுத்து இடம் பெற்றிருந்தால் அப்பெயர்ச் சொற்களை பன்மையாக மாற்ற ‘Y’

என்பதை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக IES’ சேர்த்து அவைகளை பன்மையாக மாற்ற வேண்டும்.

உதாரணம்:

LADY

LADIES

CITI

CITIES

BABY

BABIES

SPY

SPIES

FLY

FLIES

கீழ்க்கண்ட பெயர்ச் சொற்களின் இறுதி எழுத்து Y’ ஆக இருந்தாலும் அவைகளுடன் ‘S’ சேர்த்து பன்மையாக மாற்ற வேண்டும். ‘IES’ சேர்க்கக்கூடாது.

BOY பையன் BOYS … பையன்கள் BOIES என்று எழுதக்கூடாது. ஏன் தெரியுமா? பெயர்ச்சொல் BOY என்பதை எடுத்துக்கொள்வோம். ‘Y’

என்பதற்கு முன் எழுத்து ‘O’ வந்துள்ளது. இதைப் போன்று ‘Y’ க்கு முன்னால் A,E,I,O,U என்ற உயிரெழுத்துக்கள் இடம்பெற்றிருந்தால்

அப்பெயர்சொர்களுடன் S’ மட்டும் சேர்த்தால் போதும்.

இதுவரை ஒருமைப் பெயர்ச்சொற்களை எப்படிப் பன்மையாக மாற்ற வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொண்டோம். இனி சில ஒருமைப் பெயர்ச்சொற்கள் பன்மயிலும் ஒரே மாதிரியாக இருப்பதைக் காணலாம்.

உதாரணம்:

DEER

PAIR

SHEEP

CATTLE

POULTRY

LUGGAGE

STAFF

BREAD

கீழ்க்காணும் ஒருமைப் பெயர்ச்சொற்கள் S’ சேராமல் வேறுவிதமாக மாரிவருவதைக் கவனிக்கவும்.

SINGULAR- ஒருமை

PLURAL – பன்மை

MAN (மனிதன்)

MEN (மனிதர்கள்)

WOMAN (பெண்)

WOMEN (பெண்கள்)

FOOT (பாதம்)

FEET (பாதங்கள்)

GOOSE (வாத்து)

GEESE (வாத்துக்கள்)

OX (எருது)

OXEN  (எருதுகள்)

இதுவரை ஒருமை, பன்மை பற்றித் தெரிந்து கொண்டீர்கள். வாக்கியங்களை பிழையின்றி அமைக்க இவ்வகுப்பில் கூறியுள்ள கருத்துக்கள் மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். எனவே இக்கருத்துக்களைப் படித்து நினைவில் வைத்துக்கொள்ளவும்.

நீங்களே வாக்கியங்களை தானாக அமைத்துப்பாருங்கள். அப்பொழுதுதான் உங்களை வேகமாக தயார்ப்படுத்திக்கொள்ள

முடியும்.

வாக்கியங்களை அமைக்க நமக்குத் தேவைப்படுவது வினைச் சொல். அதாவது VERB. VERB இல்லாமல் நம்மால் வாக்கியங்களை அமைக்க முடியாது. அமைக்கவும் கூடாது. எனவே VERB என்றால் என்ன? என்று அடுத்த வ


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: