Posted by: shuhaib | 22/06/2010

மசாலா தோசை


    • தேவையானவை:

  • புழு ங்கலரிசி – 2 கப்
  • பச்சரிசி – 2 கப்
  • உளுத்தம்பருப்பு – ஒரு கப்
  • வெந்தயம் – 2 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • தண்ணீர் – தேவையான அளவு
  • கிழங்கு பிரட்டல் கறி – தேவையானளவு

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் புழுங்கல் அரிசி, தண்ணீர் ஆகியவற்றை கலந்து 2 மணி நேரம்  ஊற வைக்கவும்.
  • இன்னொரு பாத்திரத்தில் பச்சரிசி, தண்ணீர் ஆகியவற்றை கலந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • மற்றை ய பாத்திரத்தில் உளுத்தம்பருப்பு, வெந்தயம், தண்ணீர் ஆகியவற்றை கலந்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • ஊறிய உளுத்தம்பருப்பு, வெந்தயம், தண்ணீர் ஆகியவற்றை கலந்து கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு பொங்க பொங்க அரைக்கவும்.
  • அரைத்த பின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். அதன் பின்பு ஊறவைத்த பச்சரிசி, தண்ணீர் ஆகியவற்றை கலந்து கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு நைசாக அரைக்கவும்.
  • அரைத்த பின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். பின்பு ஊறவைத்த புழுங்கல் அரிசி, தண்ணீர் ஆகியவற்றை கலந்து கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு நைசாக அரைக்கவும்.
  • அரைத்த பின்பு எடுத்து பச்சரிசிமா போட்ட பாத்திரத்தில் போட்டு கலக்கவும்.
  • பின்பு அதனுடன் அரைத்த உளுந்து வெந்தயம் போட்டு கலந்து புளிக்க வைக்கவும்.
  • அடுத்த நாள் அதற்கு உப்பு போட்டு கலக்கவும். பின்பு அடுப்பில் தோசைக்கல்லைவைத்து அதை சூடாக்கவும். தோசைக்கல் சூடானதும் அதற்கு சிறிதளவு நல்லெண்ணெய் ஒருதுணியில் எடுத்து அதை தோசைக்கல்லில் தடவும்.
  • பின்பு ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி நன்றாக தடவி தோசையை வேகவிடவும்.
  • தோசையின் ஒருபக்கம் வெந்ததும் அதன் மேல் கிழங்குபிரட்டல்கறியை வைத்து அதன் இருபக்கமும் மடித்து அதை திருப்பி போட்டு வேகவிடவும்.
  • தோசை நன்றாக வெந்தபின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
  • இதே போல மற்றைய தோசைகளை சுட்டு முதலில் சுட்ட தோசை போட்ட பாத்திரத்தில் வைக்கவும். அதன் பின்பு ஒரு தட்டில் தோசைகளை வைத்து பரிமாறவும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: