மழையாய் நீ வந்தாலும்
உன்னை தாங்கிக்கொள்ளும்
பூமியாய் நான் இருப்பேன்…
நிலவாய் நீ இருந்தால்
உன்னை சுமக்கும்
வானமாய் நான் இருப்பேன்…
காற்றாக நீ இருந்தால்
உன்னை மட்டுமே சுவாசிப்பேன் …
மலராய் நீ இருந்தாலும்
வண்டாய் வந்து உன்னை
வசியம் செய்வேன்…
அலையாய் நீ இருந்தாலும்
உனக்காக கரையாய் நான் இருப்பேன்…
புன்னகையாய் நீ இருந்தால்
உன் அழகுக்கு அழகாய் நான் இருப்பேன்…
என் அருகில் நீ இருந்தால்
உன் நிழலாய் நான் இருப்பேன்…
அன்பே!
நீ மட்டும் மௌனமானால்…
நான் மரணித்தே போய் விடுவேன்!!
Advertisements
Leave a Reply