Posted by: shuhaib | 23/06/2010

மறதி நோயில் ஆன்டர்சன் :சொல்கிறார் அவரது மனைவி


வாரன் ஆன்டர்சனை கொண்டுவர திட்டமா ?

போபால் விஷவாயு சம்பவம் தொடர்பாக, யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சனை இந்தியா கொண்டு வருவது தொடர்பாக, மத்திய அமைச்சரவையின் முடிவுக்காக காத்திருப்பதாக வெளியுறவு செயலர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.

போபால் விஷவாயு கசிவு சம்பவம் தொடர்பான வழக்கில், சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட்டது. யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அப்போதைய தலைவர் வாரன் ஆன்டர்சனைப் பற்றி தீர்ப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையில் நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில், போபால் விஷவாயு கசிவு சம்பவம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் நிவாரணம் கோரும் மனு ஒன்றை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது, வாரன் ஆன்டர்சனை பிடித்துக் கொண்டுவரும்படி உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், அமைச்சர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, வாரன் ஆன்டர்சன் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவாரா என, மத்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவிடம் நிருபர்கள் கேட்டனர்.இதற்கு பதில் அளித்த நிருபமா ராவ் கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அமைச்சரவை விரைவில் கூடி விவாதிக்கவுள்ளது. அதன் பின்னர் எடுக்கப்படும். முடிவைப் பொறுத்தே எதையும் தெரிவிக்க முடியும்’ என்றார்.

மறதி நோயில் ஆன்டர்சன் :சொல்கிறார் அவரது மனைவி : போபால் விஷவாயு வழக்கில் இந்திய அரசால் தப்ப விடப்பட்ட, யூனியன் கார்பைடு நிறுவன அதிபர் வாரன் ஆன்டர்சன்(89), தற்போது மறதிநோயால் அவதிப்படுவதாகவும், அவரால் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க முடியாது என்றும், அவரது மனைவி தெரிவித்துள்ளார். தற்போது ஆன்டர்சன் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் பிரிட்ஜ்ஹேம்ப்டன் என்ற ஊரில் வசித்து வருகிறார். அவருடன் அவரது மனைவி லில்லியன் ஆன்டர்சன்(85) இருக்கிறார்.சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்த லில்லியன், “அவர் உடல்நலம் சரியில்லாமல் உள்ளார். அவரால் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல இயலாது. மேலும் அவரைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை’ என்று கூறியுள்ளார்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: