Posted by: shuhaib | 24/06/2010

VERBS – வினைச் சொற்கள்


ஆங்கில இலக்கணத்தில்  மிக முக்கியமான பங்கு வகிக்கும் VERBS பற்றி இவ்வகுப்பில் சற்று விரிவாக காணப்  போகிறோம். ஒவ்வொரு விசயத்தயும் நிதானமாகப்  படித்துப் புரிந்து கொள்ளவும். VERB என்பதை வினைச் சொல் என்கிறோம். இது நாம் செய்யும் செயலைக் குறிப்பதாகும். ஒரு சில செயல்களை நாம் வழக்கமாக செய்து கொண்டிருப்போம். சில செயல்களை நேற்றே செய்து முடித்திருப்போம். இன்னும் சில செயல்களை  நாளை செய்ய வேண்டும் என்று நினைத்திருப்போம்.இது போன்று செயல்கள் காலத்திற்கு ஏற்ப மாறுபடும். உதாரணம் மூலம் விளக்கினால் உங்களுக்கு எழிதில் புரியும் என்று நினைக்கிறேன்.

  1. நான் தினசரி அலுவலகம் செல்கிறேன்.
  2. நேற்று நான் அலுவலகம் சென்றேன்.
  3. நாளை நான் அலுவலகம் செல்வேன்.

 மேற்கூறிய வாக்கியங்களில் செயல் அதாவது VERB காலத்திற்கு ஏற்ப்ப செல்கிறேன், சென்றேன், செல்வேன் என்று மாறுபட்டு இருப்பதை கவனித்தீர்களா? நாம் பிழையின்றி ஆங்கிலத்தில் எழுதவும், உரையாடவும் வேண்டுமானால் இந்த VERB ஐ காலத்திற்கேற்ப எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டால் போதும். உங்களால் பிழையின்றி ஆங்கிலத்தில் எழுத , பேச முடியும். ஆனால் இனி நான் கூறப்போகும் கருத்துக்களை மிகவும் கவனமாகப் படித்துக்  கொள்ள வேண்டும். உங்களுக்கு சந்தேகம் தோன்றாதபடி கருத்துக்களை மிகவும் எளிய முறையில் கூறுகிறேன். நான் தினசரி அலுவலகத்திற்கு செல்கிறேன். இது PRESENT TENSE அதாவது நிகழ்காலம். நேற்று நான் அலுவலகத்திற்கு சென்றேன். PAST TENSE. அதாவது கடந்த காலம். நாளை நான் அலுவலகத்திற்கு செல்வேன். இது FUTURE TENSE. அதாவது எதிர்காலம்.

மறந்து விடாதீர்கள். காலங்கள் மூன்று வகைப்படும்.

  1.  PRESENT TENSE அதாவது நிகழ்காலம்.
  2.  PAST TENSE. அதாவது கடந்த காலம்.
  3.  FUTURE TENSE. அதாவது எதிர்காலம்.

இந்த மூன்று காலங்களையும் நீங்கள் தெரிந்து கொண்டால் போதும். நீங்கள் ஆங்கிலத்தில் 40 % புலமை பெற்று விட்டீர்கள். இதுவரை தமிழில் வாக்கியத்தை அமைத்து இருக்கிறேன். தற்போது நாம் ஆங்கிலத்தில் வாக்கியங்களை அமைக்கலாமா? ‘நான் போகிறேன்’ என்று ஆங்கிலத்தில் எழுதிப்பார்க்கலாம். ‘நான்’ என்பதை ஆங்கிலத்தில் ‘I’ என்று கூறவேண்டும். ‘போகிறேன்’ என்பதை எப்படிக் கூறுவது? போகிறேன் என்பது VERB அல்லவா? இதுபோல வருகிறேன், தருகிறேன், பார்கிறேன், சிரிக்கிறேன், எழுதுகிறேன், படிக்கிறேன், விழையாடுகிறேன் என்று மட மடவென்று கருத்துக்களை வெளியிட VERB மிகவும் தேவையல்லவா? ஆமாம் தேவைதான்.சரி. நீங்கள் என்றும் நினைவில் வைத்துக்கொள்ள ஒரு ஸ்பெஷல் அட்டவணைத் தருகிறேன். அதிலுள்ள VERB களை மனப்பாடமாக வைத்திருந்தால் போதும். சரளமாக உரையாடலாம். இலக்கணப்பிழையின்றி எழுதலாம். அட்டவணயைப் படிப்பதற்கு முன்னால் நிகழ்காலம், கடந்தகாலம், எதிகாலம் இந்த மூன்று காலங்களிலும் VERB  எப்படி மாறுகிறது என்பதைப் பற்றி உதாரணத்துடன் கூறிவிடுகிறேன்.

  1. நான் போகிறேன். நிகழ்காலம் PRESENT TENSE
  2. நான் போனேன். கடந்த காலம் PAST TENSE
  3. நான் போவேன். எதிர்காலம் FUTURE TENSE

  குறிப்பு: TENSE என்றால் காலம் என்று அர்த்தம்.

நான் என்பதை ‘I’ என்கிறோம். போகிறேன் என்பதை GO’ என்று சொல்ல வேண்டும். I GO நான் போகிறேன். GO என்றால் போ என்று அர்த்தம்.ஆனால் அது I என்ற பிரதிப் பெயர்ச்சொல் (PRONOUN) உடன் இணையும் பொது நான் போகிறேன் என்று மாறுகிறது. என்ன புரியவில்லையா? சரி மேலும் சில உதாரணங்களைக் கூறுகிறேன்.

WRITE எழுது

I WRITE நான் எழுதுகிறேன்.

READ படி

I READ நான் படிக்கிறேன்

WALK நட

I WALK நான் நடக்கிறேன்

LAUGH சிரி

I LAUGH நான் சிரிக்கிறேன்

PLAY விளையாடு

I PLAY நான் விளையாடுகிறேன்

என்ன தற்போது புரிகிறதா? தற்போது வினைச் சொற்கள் (அதுதான் VERBS)  மூன்று காலங்களில் எப்படி மாறி வருகிறது என்பதைப் பார்க்கலாம்.

PRESENT TENSE PAST TENSE FUTURE TENSE

I WALK (நான் நடக்கிறேன்) I WALKED (நான் நடந்தேன்) I SHALL WALK (நான் நடப்பேன்)
I ASK (நான் கேட்கிறேன்) I ASKED (நான் கேட்டேன்) I SHALL ASK (நான் கேட்பேன்)
I SEE (நான் பார்கிறேன்) I ASKED (நான் பார்த்தேன்) I SHALL ASK (நான் பார்ப்பேன்)
I WRITE (நான் எழுதுகிறேன்) I WROTE (நான் எழுதினேன்) I SHALL WRITE (நான் எழுதுவேன்)

அட்டவணையைப் பார்த்தீர்களா? புரியும்படி உள்ளது அல்லவா? எனக்குத் தெரியும் ஏதோ ஒன்றைப் பார்த்து  நீங்கள் குளம்பி விட்டீர்கள் என்று . ஒ மன்னித்து விடுங்கள். முதல் மற்றும் இரண்டாவது வாக்கியத்தில் WALK என்ற PRENT TENSE, WALKED ஆகவும். ASK என்ற PRESENT TENSE, ASKED ஆகவும் மாறியுள்ளது. ஆனால் மூன்று மற்றும் நான்காவது வாக்கியங்களில் SEE என்பது SAW ஆகவும் WRITE என்பது PAST TENSE ல் WROTE ஆகவும் மாறியுள்ளது.

உங்கள் சந்தேகம் நியாயமானதுதான். VERB என்பதை இரண்டு பிரிவாக பிரிக்கலாம். ஒன்று WEAK VERBS; இரண்டாவது STRONG VERBS...

WEAK VERB மற்றும் STRONG VERBS பற்றி அடுத்த வகுப்பில் பார்க்கலாம்


Responses

  1. hi
    easy english supper


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: