Posted by: shuhaib | 28/06/2010

கேர்ள் ஃபிரெண்ட் வேணுமா?


பக்கத்து வீட்டு பாபு முதல் எதுத்த வீட்டு ஏழுமலை வரை எல்லாரும் ஒரு கேர்ள் ஃபிரெண்ட் வச்சிட்டு சுத்துறப்போ உங்களுக்கு கேர்ள் ஃபிரெண்ட் இல்லன்னா ரொம்பக் கடுப்பாதான் இருக்கும். அதுக்காக ‘தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்’ ரேஞ்சுல எல்லாம் கேர்ள் ஃப்ரெண்டை செலெக்ட் பண்ணக் கூடாது. கேர்ள் ஃபிரெண்டை செலக்ட் பண்ணறப்போ இந்த ஐந்து விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேணும்.

1. தீவிரமான போட்டியாளர்கள்

நம்மள மாதிரியே காய்ஞ்சு போனவன் ரொம்பப் பேரு இருப்பான். அவங்களும் நாம ரூட்டு போடுற பொண்ண ரூட்டு போடறாங்களா என்று பார்க்கணும். ஒவ்வொருத்தனோட பலம் என்ன, பலவீனம் என்ன என்பதையெல்லாம் சரியா ஆராய்ஞ்சு பாக்கணும். ஒவ்வொருத்தன் எப்பிடி எல்லாம் அப்ரோச் பண்ணுறான்?, எதைக் காட்டி மயக்கப் பாக்கிறான்?, நம்மளவிட நல்ல ட்ரெஸ் பண்ணுறானா?, நம்மளைப் போலவே மொக்கையா? என்றெல்லாம் தெரிஞ்சுக்கணும். முக்கியமா நம்ம கூட இருந்தே யாராச்சும் குழி பறிக்கிறானான்னும் பாத்து வச்சுக்கணும். அப்பத்தான் நாம நம்மளோட ரூட்டை மாத்திக்கலாம். இல்லேன்னா இலவு காத்த கிளிதான்.

2. மாற்று உறவு முறைகளின் அச்சுறுத்தல்

இந்த தங்கை கிளாஸ்மேட்டைக் காதலிக்கிற பசங்க ரொம்பவே கவனமா இருக்கணும். ‘நான் உங்கள அண்ணனாதான் நெனச்சேன்’ அப்பிடின்னு ஆப்பு வரலாம். அதனால இந்த தங்கச்சி கிளாஸ்மேட்டை லவ் பண்ணுறதெல்லாம் கொஞ்சம் ரிஸ்க்கான வேலை மாமூ. அப்புறம் அந்தப் பக்கம் வாற சிக்னல் லவ் சிக்னல்தானான்னு சரியாப் புரிஞ்சுக்கணும். அதவிட்டுட்டு நீ அவசரப்பட்டு லவ் சொல்ல அவ ‘அடச்சீ, உன்னைய நான் ஃபிரெண்டாதானே நெனச்சேன். இப்பிடி கொச்சைப் படுத்திட்டியே’ ன்னு படம் காட்ட, நாம தேவதாஸ் ஆகணும். ஆக, ஒரு பெண் ஒரு ஆணை காதலன், புருஷன் தவிர வேறு என்ன உறவுமுறைக்குள்ள வச்சுப்பா, அந்த ஒவ்வொரு உறவுமுறைக்கும் என்ன சிக்னல்னெல்லாம் சரியாத் தெரியாமல் கோதாவுல இறங்கக்கூடாது.

3. அவளோட சைட் பலம்

அவ நல்லா செலவு செய்யற பையனா, காரில சுத்தற பையனா, அடிக்கடி மாலுக்கு கூட்டினு போய் நல்லா சாப்பாடு போடற பையனா அம்பானி ரேஞ்சுல மனசுல நினைச்சு கனவு கண்டுட்டிருப்பா. நாம சிங்கிள் டீ வாங்கவேஅப்பன்கிட்ட சிங்கியடிக்கற ஆளா இருப்போம். அப்பிடியான பொண்ணை ரூட்டு போட்டு காதலியா மாத்தினதுக்கு அப்புறம் அவளோட செலவு எல்லாமே நம்ம தலையில விழும். அந்தச் செலவுக்கு உலக வங்கியில கடன் வாங்கினாலும் போதாது. ஆக துட்டிலாத நீயி, இப்புடி அதிக செலவு செய்யற பொண்ணை நீ லவ் பண்ணா, அம்பேல்தான். அதவிட முக்கியம் ஓ.கே ஆயிட்டா கடிதம் கொண்டுட்டு குடுக்க, அவங்கப்பனுக்கு தெரிஞ்சு அவன் முரண்டு பண்ணினா மெசேஜ் பாஸ் பண்ண அதுக்கு இதுக்குன்னு அவ சைடுல கொஞ்சம் ஃப்ரெண்ட்ஸ் இருக்கிறது நல்லது. எதுக்குச் சொல்றேன்னா ஒரு வேளை அவ மாட்டேன்னுட்டா அவ ஃப்ரெண்டுக்கு ரூட்டு போட்டு மனதை தேத்திக்கலாமே, அதுக்குதான்

4. நம்மளோட சைட் பலம்.

வேற வழியே இல்லாம ரொம்ப செலவு வைக்கற பொண்ணுதான் உனக்கு அமையும் போல தோணுச்சுன்னா, உன்னோட ஏ.டி.எம், அதான்யா, உன்னோட அப்பன்கிட்ட இதுக்கெல்லாம் காசு கறக்கலாமா? அப்பிடி காசு தர அவனால முடியுமா? இதெல்லாம் யோசிச்சுக்க. பார்ட் டைம் வேலையெல்லாம் பாத்து தேத்திடலாம்னு நினைச்சா, ஏற்கனவே அப்புடி இருக்கற ஜந்துக்களைப் புடிச்சு விசாரி. அவளோட செலவுக்கெல்லாம் நம்மிடம் ‘மணி’ சப்ளை இருக்கான்னு பார். இருந்தா அவள் உனக்கு கேர்ள் ஃபிரெண்ட்… இல்லியா ஜஸ்ட் ஃப்ரெண்ட். அதவிட முக்கியம் தான் மொக்கையானாலும் பரவாயில்லைன்னு நம்ம தெய்வீகக் காதலுக்கு ஹெல்ப் பண்ண ஒரு நாலஞ்சு அல்லக்கைங்க (நாடோடிகள்) நம்ம சைடுல இருக்கணும். ஏதாச்சும் பிரச்சினைன்னா இவங்களைக் கோத்து விட்டுட்டு எஸ்கேப் ஆய்டலாம். இவங்கள்ள யாரும் பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கறவனா இருக்கக்கூடாது. நம்மளை மொக்கையாக்கிட்டு நம்ம கிளிய அவன் கொத்திட்டு போய்டுவான்

5. பொண்ணைக் காதலிக்குறதுல உள்ள தடைகள்

இதுதான் ரொம்ப முக்கியம். நம்ம உமா அக்காவோட புருஷன் ரியாஸ்கான் மாதிரி அண்ணன் இருக்கறவ, நம்ம அஞ்சா நெஞ்சன் மாதிரி அப்பன் இருக்கற பொண்ணு, எடுத்ததும் அறிவால பேசாம, அரிவாளால பேசுற முறை மாமன் இருக்கற பொண்ணு இதெல்லாம் வேண்டாம். இதெல்லாம் நாம அவளைக் காதல் பண்ணுறதில உள்ள தடைகள். மிக முக்கியமான தடை அவளோட பாய் ஃபிரெண்ட் அல்லது புருஷன். ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ணையோ பாய் ஃப்ரெண்ட் உள்ள பொண்ணையோ ரூட்டு போடப்போயி அது நம்ம உயிருக்கே உலையாப் போய்டலாம். அவ சும்மா சிரிச்சிருப்பா, தாலிய சுரிதாருக்க மறைச்சிருப்பா. அதுதெரியாம போய் செத்துடாதீங்கடா.

ஆக, ஒரு ஃப்ரெண்ட் கேர்ளை கேர்ள் ஃபிரெண்டாக்க ரூட்டுப் போடணுமா?, மேலே நான் சொன்ன ஐந்து மேட்டரையும் நல்லா ஆராய்ஞ்சுட்டு ரூட்டு போடுங்க. இல்லைன்னா…. நான் சொல்லியா தெரியணும்?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: