Posted by: shuhaib | 05/07/2010

உடைந்த இதயத்தை ஓட்ட வைக்க 20 வழிகள்


காதல் தோல்வியானவங்க மட்டும் படிங்க! மற்றவர் விடுங்க!

இந்த உலகத்தில் காதலைச் சந்திக்காதவர்களே இருக்க முடியாது. ‘‘என் லைஃபில் காதல் வரவே இல்லப்பா’’ என்று உதார் விடும் பார்ட்டிகள் ஒன்று பொய் சொல்கிறார்கள், இல்லையென்றால் தன் வாழ்க்கையில், காதல் வந்து போனதே தெரியாத அப்பாவிகள்!

காதல் ஒரு சிலருக்கு திருமணத்தை பரிசளிக்கும்! ஆனால், பலரை தாடி வளர்க்க வைத்து, சிலநேரம் தற்கொலை வரை கொண்டு செல்வதும் உண்டு. அப்படிப்பட்ட உடைந்த உள்ளங்களை மறுபடியும் ஒட்ட வைக்க இதோ 20 பேண்ட்எய்டுகள், ஸாரி டிப்ஸ்!

1. ஒரு பேப்பரை எடுங்கள், உங்களுடைய அவன் அல்லது அவள் மீதுள்ள கோபத்தை அதில் ஆசை தீர கொட்டுங்கள் (அட எழுதுங்கப்பா)! எழுதியதை சத்தமாகப் படியுங்கள். படிக்கும் போது இடையிடையே கோபத்தைப் பொறுத்து, ‘நாயே, பேயே’ என்றும் திட்டிக்கலாம்! பின்னர் அந்த பேப்பரை சுக்குநூறாக கிழித்து எரித்து விடுங்கள்.

(உங்களுடைய எக்ஸ் காத(லி)லர் நினைவுகளையும் சேர்த்துதான்!)

2. உங்கள் வேலையைத் தீவிரமாக காதலிக்க ஆரம்பியுங்கள். அதில் கிடைக்கும் வெற்றிகள், உங்களுடைய வேதனையை நிச்சயம் மறக்கடிக்கும். இன்னொரு விஷயம், வேலை என்பது ‘உங்களது பிரெய்ன் கொடவு’னைத்தான் பிஸியாக்கும். பாடி ஷோரூமை திரும்பிக்கூட பார்க்காது.. ஆக, பிஸியில் உங்களை மறப்பீர்கள்! ஹிஹி!

3. ‘‘இந்த யெல்லோ சுடிதார்ல (ஆம்பளைன்னா யெல்லோ சர்ட்ன்னு வச்சிக்கோங்க) நீ எவ்ளோ க்யூட்டா இருக்கிற தெரியுமா?’’ என்கிற ரேஞ்சில் உங்கள் ‘எக்ஸ்’ உங்களிடம் ரசித்த சில விஷயங்களை, அவ(ரை)ளை உங்களுக்கு அடிக்கடி நினைவுபடுத்துகிற விஷயங்களை தலையைச் சுற்றி தூக்கி எறியுங்கள்!

(கூடவே அவ(ன்)ள் ஞாபகத்தையும்)

4. ஒரு கிரிக்கெட் பேட்டை எடுத்துக் கொள்ளுங்கள். பெட்ரூமுக்குச் செல்லுங்கள். கதவை லாக் பண்ணுங்கள். உங்களுடைய தலையணையை உங்களுக்கு அல்வா கொடுத்த, ஸாரி… சீட்டிங் செய்த ஆசாமியாக நினைத்துக் கொள்ளுங்கள். அ(வ)தனிடம், நீங்கள் அவன் மீது வைத்திருந்த உண்மையான காதலை மனம் விட்டுச் சொல்லுங்கள்.

பிறகு அ(வ)தனை தயாராக வைத்துள்ள கிரிக்கெட் ‘பேட்’டால் நீங்கள் டயர்டாகும் வரை சும்மா அடித்து விளாசுங்கள். அப்படியே படுத்துத் தூங்குங்கள். காலையில் கிழக்கில் மட்டுமல்ல, உங்கள் மனதிலும் ஒரு வெளிச்சம் வந்திருக்கும்!

5. சார்லி சாப்ளின்_, விவேக், வடிவேல், கவுண்ட மணி_ செந்தில்னு எல்லோருடைய காமெடி சீன்களையும் திரும்பத் திரும்பப் பாருங்க. வாய் விட்டுச் சிரிங்க!

(வாய்விட்டுச் சிரிச்சா நோய் மட்டுமில்லீங்க, காதல் தோல்வியோட வலி கூட ஓடிப் போயிடும்!)

6. பலாப் பழத்துக்கு பலாப்பழம் தாங்க மருந்து. அதே மாதிரி காதல் தோல்விக்கு காதல்தாங்க மருந்து! ஐ மீன் காதல் கதைகள்.

(ஆனா கிளைமாக்ஸ் சுபம்தானான்னு முதலிலேயே பார்த்துட்டுப் படிங்க)

7. பியூட்டி பார்லருக்குப் போய் வாருங்கள். ப்ளீச், ஃபேசியல், மசாஜ் என்று உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள். அது உங்களுடைய தொலைந்த தன்னம்பிக்கையை மீட்டுத் தரும்.

8. உங்களவர் சூழ்நிலை காரணமாகக்கூட உங்களை விட்டுப் பிரிய நேர்ந்திருக்கலாம்! அவர் பக்கத்து நியாயங்களை, நீங்களே உங்கள் உள் மனதுக்கு எடுத்துச் சொல்லுங்கள். நிச்சயம் உங்கள் மனது ‘கன்வின்ஸ்’ ஆகும்!

9. மனதை ஏரோபிக்ஸ், டான்ஸ், கராத்தே என்று உங்களுக்குப் பிடித்த விஷயங்களின் பக்கம் திசை திருப்புங்கள்!

(ஃப்யூச்சர்ல உங்க ‘எக்ஸ்’ எங்கயாவது வசமா மாட்டிக்கிட்டா ரெண்டு தட்டுத் தட்டலாமில்ல?)

10. மறுபடியும் ஒரு நீ…ளமான பேப்பரை எடுங்கள். உங்களோட ‘எக்ஸ்’கிட்ட உங்களுக்குப் பிடிக்காத விஷயங்களை அதில் வரிசையாக எழுதுங்கள். உதாரணத்துக்கு அது உங்களுடைய அவ(ள்)ர் சரியாக பல் தேய்க்காத விஷயமாக கூட இருக்கலாம். இந்த ‘பிடிக்காத விஷயப்’ பட்டியலை நாலைந்து தடவை திரும்பத் திரும்ப படித்தால். உங்க எக்ஸ் மேலே உங்களுக்கு ஒரு வெறுப்பே வந்து விடும்!

11. நீங்கள் படித்துக் கொண்டிருப்பவராக இருந்தாலோ காலேஜிற்கு அல்லது வேலைக்குச் செல்பவராக இருந்தால் ஆஃபிசுக்கு ஒரு வாரம் மட்டம் போடுங்க! உங்களைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாத ஒரு இடத்திற்கு (பேரண்ட்ஸிடம் சொல்லிட்டுதான்) போயிட்டு வாங்க! இந்த இட மாறுதல் நிச்சயம் ஒரு மனமாற்றத்தை உங்களுக்குள் ஏற்படுத்தும்.

12. நாய், பூனை, கிளி என்று வாய் பேசாத செல்லங்களை உடனே வளர்க்க ஆரம்பியுங்கள். அதைக் கொஞ்சுவது நம் இதய நோய்களையே தடுக்கும் என்கிறபோது உங்களோட காதல் வலியைக் குறைக்காதா? (ஒரு கொசுறு டிப்ஸ்… லவ் பேர்ட்ஸ்’ மட்டும் வேண்டாம்!)

13. உங்களை முழுமையாகப் புரிந்து கொண்ட நண்பர்களிடம் உங்கள் மனதிலுள்ள எல்லா வேதனைகளையும் கொட்டித் தீர்த்து தேவையென்றால் அழுதும் தீர்த்து விடுங்கள் (அந்த சுமைதாங்கிக்கும் (தோழிக்கு) ஒரு காதல் தோல்வி இருந்தால் கூடுதல் ப்ளஸ்!)

14. கவிதை, பெயிண்ட்டிங்ஸ் என்று இதுவரை நீங்கள் முயற்சி செய்யாத ஏரியாவுக்குள் நுழைந்து பாருங்கள்! யாரு கண்டா? ‘‘காதல் என் வாழ்க்கையை மாற்றியது அதனால்தான் இன்று நான் ஒரு ஃபேமஸ் ஓவியராக இருக்கிறேன்’’ என்று நீங்களும் டி.வி. சேனலுக்கு சீக்கிரமே பேட்டியளிக்கக் கூடும்!

15. உங்களுடைய அவ(ர்)ள் கெட்டவராக மாறிவிட்டதால், உலகத்திலுள்ள எல்லா பெ(ஆ)ண்களுமே கெட்டவர்கள்தான் என்று கண்மூடித்தனமாக தீர்மானிக்காதீர்கள்! இந்த குறுகிய மனப்பான்மை மற்றவர்களை உங்களிடம் பழக விடாமல் செய்து விடலாம்!

16. உங்கள் மனதுக்குப் பிடித்த இடங்களுக்குச் செல்லுங்கள். அது ஊட்டி கொடைக்கானலாகவும் இருக்கலாம். அல்லது உங்கள் வீட்டுத் தோட்டமாகவும் இருக்கலாம்.

(பட் ‘பீச்’ மட்டும் வேண்டாம்!)

17. உங்கள் தோல்வியினுடைய வலியை முழுமையாக அனுபவியுங்கள், தேவைப்பட்டால் உங்கள் ரூமுக்குள் வாய் விட்டு, வெட்கப்படாமல் கதறி அழுங்கள். கண்ணீர் எல்லாக் காயங்களையும் ஆற்றும்!

18 உங்கள் ‘எக்ஸ்’ உங்களுக்குக் கொடுத்த எல்லா ‘கிஃப்ட்’களையும் வீடு கடத்துங்கள்!

19. காதலுக்கும் _ காதல் தோல்விக்கும் ரோஜாவுக்கும், அதனுடைய முள்ளுக்கும் இருக்கும் இடைவெளிதாங்க. முள் குத்திவிட்டால். அழுது அரற்றி தற்கொலை போன்ற கடைசி முடிவுக்கெல்லாம் போய்விடாதீர்கள். ஏனென்றால், தற்கொலைகள் எல்லாமே சமுதாயத்தையோ அல்லது ஒரு தனி நபரையோ பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு செய்யும் முட்டாள்தனம்தான்!

ஆனால் ‘வாழ்ந்து காட்டுதலைவிட சிறந்த பழிவாங்குதல் வேறில்லீங்க!’

20. இது எல்லாவற்றயும்விட ஒரு சூப்பர் ஐடியா இருக்கு கேளுங்க. Shock ஆயிடாதீங்க. ஏதோ காதலிச்சோம்…காதல் தோல்வியாகி விட்டது. அதற்காக தாடி வளர்த்தி முகம் சுருங்கி, உடல் நலம் கெட்டு நடக்கிறதல்லாம் அந்தக்காலம். உங்க EX காதலிய நீங்க பளிவாங்க வேண்டுமென்று நினைக்கிறீங்கள்னா மீண்டும் காதலிங்க. அதுவும் வேறே எவரயும் போய் காதலிக்காதீங்க. உங்க EX காதிலியோட நெருங்கிய நண்பி அவளைக் காதலீங்க. அவள் நண்பியோட உள்ள காதலை திருமணம் வரை சொல்லாதீங்க. திருமணம் நெருங்கியவுடன் கண்டிப்பா அழைப்பிதழ் அனுப்புங்க. நிச்சயம் உடைந்தே போவாள். (ஹி… ஹி…. இதெப்படி?)

நானும் இப்படிதாங்க… காதல் தோல்வியால் தொலைந்து விடவில்லை.. முன்னை விட SUPER ஆ இருக்கேன்.

என்ன 20 டிப்ஸ்களையும் படிச்சாச்சா! ம்… கண்ணைத் துடைங்க… எங்கே சிரிங்க பார்க்கலாம்! அப்படித்தான். அப்படித்தான்… குட்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: