Posted by: shuhaib | 07/07/2010

தவிர்க்கவே முடியாதவைகள்…


தவிர்க்க முடியாத விஷயங்களாய், தவிர்க்க முடியாத பொழுதுகளாய்- நம்வாழ்வில் அனேக அம்சங்கள் உள்ளன… எப்படி அடிபட்டால் வலியை தவிர்க்க முடியாதோ- அப்படி.  வெற்றி, தோல்வி, ஏமாற்றம், கோபம், துரோகம், காதல்,கண்ணீர், வலி, அவமானம் என்று தவிர்க்கவே முடியாதவைகளாக நிறைய உள்ளன.

ஒரு சிறு பயணத்தின் போது, நம் பார்வையிலிருந்து – தவிர்க்கவே முடியாத விஷயங்களாக சில இருக்கும் வழிபாட்டு தலங்கள், திரையரங்குகள், பள்ளிகூடங்கள், கழிப்பறைகள், ஒயின் ஷாப்கள் என்று. ஒயின் ஷாப்கள் வந்தால் பார்வையை வேறு பக்கமும், கழிப்பறைகள் வந்தால் மூக்கை பொத்திக் கொண்டும், திரையரங்கங்களை பார்த்தால் ஆர்வமாய் திரும்பி பார்த்தும், வழிபாட்டுத் தலங்களை கண்டால் வணங்கவும் தலைப் படுகிறோம்.

ஒரு சிறு பயணத்திலேயே தவிர்க்க முடியாத விஷயங்களாக எவ்வளவோ உள்ள போது – மொத்த வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத விஷயங்களாக, நிறைய அம்சங்கள் இருக்குமே. சில தவிர்க்க முடியாதவைகளை- தவிர்க்கவே நினைப்போம். வலி, அவமானம், தோல்வி, ஏமாற்றம் என்று மேற் கண்டவைகளை தவிர்த்து விட அல்லது அல்லது அதிலிருந்து மீண்டு ஓடி விட நினைப்போம். ஆனால் தவிர்க்கவே முடியாமலே போகும்.

எப்படி பூக்களில் இருந்து வாசங்களை தவிர்க்க முடியாதோ, அப்படி சில விஷயங்களை தவிர்க்கவே முடியாது. வாசத்தை தனியாகவும், பூக்களை தனியாகவும் பிரித்தோமேயானால், அதற்கு வேறு வேறு பெயராகிறது. சென்ட் பாட்டில் என்றோ அல்லது பிளாஸ்டிக் பூ என்றோ தான் அழைக்க முடியும். பூக்கள் என்று பெருமை சொல்லி கொள்ள முடியாது.

ஒரு மனிதன் தவிர்க்க நினைப்பதெல்லாம்- தனக்கு தேவையற்றதாக கருதுவதையே… உதாரணமாக தோல்விகளை. தோல்விகளை எப்படி
தவிர்க்க முடியும். நமது தோல்வி, அடுத்தவரின் வெற்றி என்றாகும் போது -அந்த தோல்வியை எப்படி தவிர்க்க முடியும். ஒரு வேளை நாம் வெற்றியாளராக மாறினால், எதிராளி தோல்வியை தவிர்க்க முடியாதவராக ஆகிறார். தோல்வியை தவிர்க்க விரும்பினால் – நாம் வெற்றியையும் தவிர்த்தே ஆக வேண்டும். அதனால் நாம் தோல்வியை தவிர்க்கவே முடியாது.

நாம் அடுத்து தவிர்க்க நினைக்கும் அம்சமாக கோபம். பிறரின் கோபத்தை தவிர்க்க நினைக்கிறோமா அல்லது நமது கோபத்தை தவிர்க்க நினைக்கிறோமா… கோபத்தை நாம் தவிர்த்தோமேயானால் – நம் எதிர்ப்பை எப்படி வெளிக் காட்டுவது… சொல்லுங்கள்.

வயது வித்தியாசமின்றி எல்லோராலும் தவிர்த்து விடவே நினைக்கும் விஷயம்…ஏமாற்றம். ஏமாற்றம் என்ற ஒன்றை தவிர்க்கவே முடியாதவர்களாய் தான் ஆகிறோம். எப்போது கனவு காண தயாராகிறோமோ- அப்போதே ஏமாற்றம் வந்தால் எப்படி தாங்குவது என்பதை பழகி கொள்ள வேண்டும்.

எப்போதெல்லாம், எதையெல்லாம் – நாம் தவிர்க்க நினைக்கிறோம். எதிர் கொள்ள தைரியமில்லாத விஷயங்களையே தவிர்க்க நினைக்கிறோம். ஒரு வேளை கஷ்டப்பட்டு – அதை தவிர்த்து விட்டால்- நம் வாழ்க்கை அத்தோடு முடிந்தே போய் விடுகிறது. மாணவன் பரிட்சையை தவிர்க்க நினைத்து- தவிர்த்தும் விட்டால்… முடிவென்ன.

தர்மசங்கடமான சூழ்நிலைகளை தவிர்க்க விரும்புகிறோம். மரணத்தை மனிதனால் தவிர்க்க முடியுமா? முடியாதே. தர்மசங்கடங்களையும் தவிர்க்க முடியாது. பல தர்மசங்கடங்கள் நமக்கான ஒரு பரிட்சை தான். அதை நாம், தவிர்க்க நினைக்காமல் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் தான்- நம் மொத்த வாழ்வின் அடுத்த கட்டமே உள்ளது.

குறும்பை தவிர்த்து பார்த்தால் மழலையில் என்ன இருக்கும். காதலை தவிர்த்து விட்டால் வாலிபம் வசந்தமாகுமா? துயரத்தில் கண்ணீரை தவிர்த்தால்- அந்த சோகம் முழுமை அடையுமா…  வாழ்க்கை அழகாக இருப்பது வசந்தங்களால் மட்டும் அல்ல- துயரங்களாலும் தான். ஒரு தாய் வலியை தவிர்த்து பிள்ளை பெற இயலுமா… அந்த வலி துயரமென்றாலும் – அந்த குழந்தை வசந்தம் தான்.

பெண்ணை தவிர்த்த ஆணுலகம் எப்படி இருக்கும். ஆணை தவிர்த்தபெண்ணுலகம் எப்படி இருக்கும். துன்பத்தை தவிர்த்தால் இன்பத்தின் ருசி
தெரியாமலே போகும். இன்பத்தின் ருசியை அறிய துன்பம் வேண்டும். எதிர்பார்ப்பை தவிர்த்து விட்டால் ஏமாற்றம் இருக்காது. ஏன் எதிர்ப்பார்ப்பை தவிர்க்க வேண்டும். ஏமாற்றம் வந்தால் வரட்டுமே. அதை ஒரு அனுபவமாக வைப்போமே. தோல்வியை தவிர்த்து பார்த்தால் வெற்றி கென்ன பெருமை.

ஒருவனாக ஒடி, ஒருவனாக வெற்றி பெறுவதா பெருமை. நான் ஒரு போதும் கஷ்டங்களை, ஏமாற்றங்களை, தோல்விகளை தவிர்க்க நினைப்பதே இல்லை. வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளை போல் அதுவும் இருந்து விட்டு போகட்டுமே.

கஷ்டம் எனக்கு மகிழ்ச்சியின் அருமை, பெருமையை சொல்கிறது. வலியும் அவமானமும், என்னை சகலரையும் நேசி என்கிறது. தோல்விகள்,   தேக்கங்கள் – எனக்கு வாழ்க்கையின ஏற்ற இறக்கங்களை சொல்கிறது. அதனால் – எனக்காகவே உருவாக்கப் பட்டிருக்கும்- எதையுமே தவிர்க்க விரும்பாமல்- அப்படியே  ஏற்று கொள்ளதயாராகிறேன்.

// // // //

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: