Posted by: shuhaib | 07/07/2010

AUXILIARY VERBS இணைந்த வாக்கியம் என்றால் என்ன?


AUXILIARY VERBS இணைந்த வாக்கியம் என்றால் என்ன?

முதலில் AUXILIARY VERBS என்றால் என்ன என்பதைப் பற்றி விளக்குகிறேன். கீழ்க்காணும் சொற்களை AUXILIARY VERBS என்று கூறுகிறோம்.

Am , Is, Are, Was, Were, Will be & Shall be  இந்த மூன்று கட்டங்களில் அமைந்துள்ள சொற்களை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

இச்சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமைத்தால் அதற்க்கு AUXILIARY VERBS அதாவது துணை வினைச் சொற்கள் இணைந்த வாக்கியம் என்று பெயர்.

போன வார வகுப்பில் கூறிய verbs களைப் படித்து முடித்து விட்டீர்களா? என்ன… இன்னும் முடிக்கவில்லையா? சரி .. விரைவில் படித்து முடித்து விடுங்கள். ஆமாம் நீங்கள் MAIN VERBS களைப் படித்து முடிக்காமல் இருந்தால் நான் எப்படி அவைகளைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமைப்பது?ஒரு வாரத்திற்குள் அட்டவணையில் உள்ள எல்லா வினைச்சொர்களையும் படித்து அவைகளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.MAIN VERBS  களை இணைத்து வாக்கியங்கள் அமைக்கும் முறையைப் பற்றி அடுத்த வகுப்பில் தெளிவாகக் கற்றுத் தருகிறேன்.

இப்பொழுது துணை வினைச்சொர்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமைக்கத் துவங்கலாமா?

AUXILIARY VERBS (துணை வினைச் சொற்கள்) இணைந்த வாக்கியங்களை அமைப்பது எப்படி?

தற்போது IS, ARE, AM என்ற துனைவினைச் சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமைக்கலாம்.

THIS                                                       இது

THAT                                                     அது

IT                                                            அது

அருகில் உள்ள பொருளை அல்லது மனிதரைச் சுட்டிக்காட்டும்போது THIS என்பதைப் பயன்படுத்துகிறோம்.

சற்று தொலைவில் உள்ள பொருளைப் பற்றி பேசும்போது THAT என்பதைப் பயன்படுத்துகிறோம். தற்போது THIS என்பதைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமைத்துக் காட்டுகிறேன். இவ்வாங்கியங்களைப் பற்றி உங்களுக்கு தெரிந்தாலும் எல்லா வாக்கியங்களையும் பல முறை வாய் விட்டு உச்சரித்து பழகவும். இப்படி நான் கூறுவதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. அதை இப்பொழுது கூறமாட்டேன். இப்பயிற்சி நிறைவு பெற்று நீங்கள் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடத் துவங்கும்போது கூறுகிறேன். எனவே ஏதோ நான் விழையாட்டாகக் கூறுவதாக நினைத்துக் கொண்டு இந்த வாக்கியங்கள் எனக்குத் தெரிந்ததுதான் என்று உதாசீனப்படுத்தாமல் ஒவ்வொரு வாக்கியத்தையும் பல முறை உச்சரித்து பழகி கொள்ளுங்கள்.

THIS IS A BOOK                                 இது ஒரு புத்தகம்

THIS IS A PEN                                    இது ஒரு பேனா

THIS IS A CAR                                   இது ஒரு கார்

THIS IS A CHAIR                              இது ஒரு நாற்காலி

THIS IS A CYCLE                              இது ஒரு சைக்கிள்

இதன் விளக்கம்

THIS                                       இது

IS                                            இருக்கிறது

A                                             ஒரு

BOOK                                    புத்தகம்

இது ஒரு புத்தகம், ஆனால் வாக்கியத்தை, தனித் தனியாகப் பிரித்துப் பார்க்கும்போது இருக்கிறது என்பது இணைந்துள்ளது தெரிகிறது. தமிழில் இது ஒரு புத்தகமாக இருக்கிறது ஏற்று எழுதவோ அல்லது உச்ச்சரிக்கவோ தேவையில்லை.இது ஒரு புத்தகம் என்றால் போதும். அதற்காக THIS A BOOK என்று எழுதக் கூடாது.

ஏன் இப்படி எழுதக் கூடாது?

THIS                                       இது

A                                             ஒரு

BOOK                                    புத்தகம்

சரியாகத்தானே இருக்கிறது என்று நீங்கள் கூறலாம்.ஒரு முக்கியமான விசையத்தை மறந்து விட்டீர்களே. ஒரு வாக்கியம் என்றால் கண்டிப்பாக MAIN VERB அல்லது AUXILIARY VERB இருக்க வேண்டும் அல்லவா?

THIS A BOOK என்பதில் IS என்ற AUXILIARY VERB இல்லையென்றால் அதை ஒரு வாக்கியம் என்று அழைப்பது எப்படி? இப்பொழுது AUXILIARY VERB இல்லாமல் வாக்கியங்களை அமைக்கக் கூடாது என்பதை புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்.

உச்சரித்து பழகுங்கள்

  1. THIS IS A BIRD                          இது ஒரு பறவை
  2. THIS IS A DOG                           இது ஒரு நாய்
  3. THIS IS A COW                          இது ஒரு பாசு
  4. THIS IS A SHEEP                      இது ஒரு செம்மறி ஆடு
  5. THIS IS A GOAT                        இது ஒரு ஆடு
  6. THIS IS A BLACK DOG            இது ஒரு கருப்பு நாய்
  7. THIS IS A WHITE COW           இது ஒரு வெள்ளைப் பசு
  8. THIS IS A BLACK GOAT         இது ஒரு கருப்பு ஆடு
  9. THIS IS A TREE                         இது ஒரு மரம்

10.  THIS IS A COCONUT TREE        இது ஒரு தென்னை மரம்

11.  THIS IS A BOY                                இவன் (இது) ஒரு பையன்

12.  THIS IS A GIRL                              இவள் (இது) ஒரு பெண்

13.  THAT IS A BUS                              அது ஒரு பஸ்

14.  THAT IS A CHAIR                       அது ஒரு நாற்காலி

15.  THAT IS A BOOK                          அது ஒரு புத்தகம்

16.  THAT IS A CAT                             அது ஒரு பூனை

17.  THAT IS A RAT                            அது ஒரு எலி

18.  THAT IS A RED ROSE                அது ஒரு சிவப்பு ரோஜா

19.  THAT IS A FISH                           அது ஒரு மீன்

20.  THAT IS A LAMP                        அது ஒரு விளக்கு

21.  THAT IS A SHIP                           அது ஒரு கப்பல்

22.  THAT IS A BIRD                          அது ஒரு பறவை

அடுத்து வாக்கியத்தில் ‘MY’ என்பதை இணைக்கலாம்.

  1. THIS  IS MY BOOK                     இது என்னுடைய புத்தகம்
  2. THIS  IS MY PEN                        இது என்னுடைய பேனா
  3. THIS  ISMY HOUSE                   இது என்னுடைய வீடு
  4. THIS  IS MY UNCLE                  இது என்னுடைய மாமா
  5. THIS  IS MY TEACHER            இது என்னுடைய ஆசிரியர்

[HIS – அவனுடைய]

  1. THIS  IS HIS BOOK                     இது அவனுடைய புத்தகம்
  2. THIS  IS HIS PEN                        இது அவனுடைய பேனா
  3. THIS  IS HIS HOUSE                  இது அவனுடைய வீடு
  4. THIS  IS HIS CAR                        இது அவனுடைய கார்
  5. THIS  IS HIS CYCLE                   இது அவனுடைய சைக்கிள்

[HER – அவளுடைய]

  1. THIS  IS HER BOOK                    இது அவளுடைய புத்தகம்
  2. THIS  IS HER PEN                       இது அவளுடைய பேனா
  3. THIS  IS HER HOUSE                 இது அவளுடைய வீடு
  4. THIS  IS HER CAR                       இது அவளுடைய கார்
  5. THIS  IS HER CYCLE                  இது அவளுடைய சைக்கிள்

[YOUR – உன்னுடைய]

  1. THIS  IS YOUR BOOK                இது உன்னுடைய புத்தகம்
  2. THIS  IS YOUR PEN                   இது உன்னுடைய பேனா
  3. THIS  IS YOUR CYCLE              இது உன்னுடைய சைக்கிள்

[THEIR – அவர்களுடைய]

  1. THIS  IS THEIR BOOK                இது அவர்களுடைய புத்தகம்
  2. THIS  IS THEIR PEN                   இது அவர்களுடைய பேனா
  3. THIS  IS THEIR CYCLE              இது அவர்களுடைய சைக்கிள்

THESE             இவைகள்

THOSE           அவைகள்

THIS               இது

THAT             அது

ஒரு பேனாவாக இருந்தால் THIS IS MY PEN என்று கூறலாம் இவைகள் என்னுடைய பேனாக்கள் என்று கூற வேண்டுமானால் THESE என்பதைப் பயன்படுத்த வேண்டும்.

THESE அருகில் AUXILIARY VERB ‘IS’ என்பதைப் பயன்படுத்தக் கூடாது. ஒன்றுக்கு மேற்ப்பட்ட பொருட்களைப் பற்றி அல்லது மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘ARE’ என்பதைப் பயன்படுத்த வேண்டும்.

  1. THESE ARE MY PENS.

இவைகள் என்னுடைய பேனாக்கள்.

  1. THESE ARE MY BOOKS

இவைகள் என்னுடைய புத்தகங்கள்.

  1. THESE ARE MY FRIENDS

இவைகள் என்னுடைய நண்பர்கள்.

  1. THOSE ARE MY BOOKS

அவைகள் என்னுடைய புத்தகங்கள்.

  1. THOSE ARE MY PENS.

அவைகள் என்னுடைய பேனாக்கள்

தற்போது IS, ARE போன்ற AUXILIARY VERB களை வாக்கியங்களில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொண்டீர்கள் அல்லவா? மேலும் சில வாக்கியங்களைக் கூறுகிறேன். அவைகளைப் படித்துக் கொள்ளுங்கள்.

  • IAM A BOY                                   நான் ஒரு பையன்
  • HE IS MY BROTHER                அவன் எனது சகோதரன்
  • SHE IS MY SISTER                   அவள் எனது சகோதரி
  • HE IS MY FATHER                   அவர் எனது தகப்பனார்
  • SHE IS MY MOTHER               அவர் எனது தாய்
  • MY NAME IS RAJA                 என்னுடைய பெயர் ராஜா
  • MY FATHER’S NAME IS SUNDARAM   என் தந்தையின் பெயர் சுந்தரம்
  • I AM HIS SON                             நான் அவருடைய மகன்
  • MY NAME IS MANI                 என்னுடைய பெயர் மணி
  • KALA IS MY SISTER                கலா என்னுடைய சகோதரி
  • RAJA IS MY BROTHER           ராஜா என்னுடைய சகோதரன்.

SOME – ANY – EVERY

SOMEBODY, SOMETHING

ANYBODY, ANYTHING

EVERYBODY, EVERYTHING

இது போன்ற வார்த்தைகளுடன் AUXILIARY VERB ‘IS’ என்பதை பயன்படுத்தலாம்.

SOMEBODY IS COMING                    யாரோ வந்துகொண்டிரிக்கிறார்கள்

SOMETHING IS GOING ON             ஏதோ நடந்து கொண்டிருக்கிறது

IS ANYBODY INTRESTED?             யாராவது ஆர்வமாக இரிக்கிறீர்களா?

IS ANYTHING IMPORTANT?        ஏதாவது முக்கியமான விஷயம் இருக்கிறதா?

EVERYBODY IS INTRESTED         எல்லோருக்கும் ஆர்வமாக இருக்கிறது

EVERYTHING IS READY                எல்லாம் தயாராக இருக்கிறது.

நினைவிருக்கட்டும்

SOME, EVERY, ANY போன்ற வார்த்தைகளுடன் ‘ARE’ என்ற AUXILIARY VERB இடம் பெறாது.

‘வாக்கியம்’ விரிவுரை அடுத்த வகுப்பில்…


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: