Posted by: shuhaib | 09/07/2010

தமிழில் இன்ஜினியரிங் படிக்க 22 பேர் தயார்


பொறியியல் கவுன்சிலிங்கில் முதல் ஐந்து நாட்களிலேயே, தமிழ் வழி பொறியியல் படிப்பில் 22 பேர் சேர்ந்துள்ளனர். கிண்டி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைப்பதால், அங்குள்ள சிவில், மெக்கானிக்கல் தமிழ் வழிப் படிப்பில் அதிக “கட்-ஆப்’ மதிப்பெண் எடுத்த மாணவர்களும் சேர்ந்துள்ளனர். தனியார் கல்லூரிகளில் தமிழ் வழி பொறியியல் படிப்பை துவக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பி.இ., – பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்பிற்கான கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்து வருகிறது. பொதுப்பிரிவு கவுன்சிலிங்கிற்கு ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 300 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 67 ஆயிரத்து 727 பேர், பிளஸ் 2வில் தமிழ் வழியில் படித்தவர்கள். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 50 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. நேற்று வரை நடந்த ஐந்து நாள் கவுன்சிலிங்கிற்கு, 11 ஆயிரத்து 405 பேர் அழைக்கப்பட்டனர். இதில் 1,731 பேர் கவுன்சிலிங்கிற்கு வரவில்லை. ஒருவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. கவுன்சிலிங்கிற்கு வந்தவர்களில், 36 பேர் இடம் வேண்டாம் என தெரிவித்து சென்றனர். நேற்றைய நிலவரப்படி, 9,637 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இ.சி.இ., 2,270 பேர், கம்ப்யூட்டர் சயின்ஸ் 1,538, மெக்கானிக்கல் 1,516, இ.இ.இ., 1,191, ஐ.டி., 893, சிவில் 531 பேர் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்பில் தமிழ் பயிற்று மொழியிலான வகுப்புகள் துவக்கப் பட்டுள்ளன.

முதற்கட்டமாக அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல் பிரிவுகளில் மட்டும் தமிழ் வழிக் கல்வி வகுப்புகள் துவக்கப்பட்டுஉள்ளன. கிண்டி பொறியியல் கல்லூரி, திருச்சி அண்ணா பல்கலை (பி.ஐ.டி., வளாகம்) மற்றும் திண்டிவனம், அரியலூர், ராமநாதபுரம், திருக்குவளை, பண்ருட்டி, பட்டுக் கோட்டை, திண்டுக்கல், நாகர்கோவில், தூத்துக்குடி அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகள் என, மொத்தம் 11 கல்லூரிகளில், சிவில் படிப்பில் தமிழ் பயிற்று மொழி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. கிண்டி பொறியியல் கல்லூரி, திருச்சி அண்ணா பல்கலை (பி.ஐ.டி., வளாகம்) மற்றும் விழுப்புரம், ஆரணி, அரியலூர், ராமநாதபுரம், திருக்குவளை, பண்ருட்டி, பட்டுக் கோட்டை, திண்டுக்கல், நாகர்கோவில், தூத்துக்குடி அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகள் என, மொத்தம் 12 கல்லூரிகளில் மெக்கானிக்கல் படிப்பில் தமிழ் பயிற்று மொழி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.

பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், கடந்த 5ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த கவுன்சிலிங்கிலும், 190க்கு மேல் “கட்-ஆப்’ மதிப்பெண் எடுத்த மாணவர்கள் கூட தமிழ் வழி பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்துள்ளனர். கடந்த 6, 7, 8ம் தேதிகளில், பொறியியல் படிப்பில், தலா இரண்டு பேர், நேற்று ஏழு பேர், தொழிற்கல்வி படிப்பில் ஒன்பது பேர் என, மொத்தம் 22 பேர் இதுவரை தமிழ் வழி பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். இதில் மூன்று மாணவர்கள், பிளஸ் 2 படிப்பில் ஆங்கில பயிற்று மொழியில் படித்தவர்கள். இவர்கள், கிண்டி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கிறது என்பதற்காக, தமிழ் வழி பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். தற்போது, அண்ணா பல்கலைக் கழகங்களில் மட்டுமே தமிழ் வழி பொறியியல் படிப்பு துவக்கப் பட்டுள்ளது. தமிழ் வழியில் பொறியியல் படிப்பால், வெறுமனே மனப்பாடம் செய்யாமல், பாடத்தை புரிந்து படித்து, அதில் முழு அறிவை பெற முடியும் என கூறப்படுகிறது. எனவே, அண்ணா பல்கலைக் கழகங்களுடன் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் தமிழ் வழி பொறியியல் படிப்பை துவக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: