Posted by: shuhaib | 09/07/2010

ஹாட் நூடுல்ஸ்


தேவையான பொருட்கள்:

நூடுல்ஸ் – ஒரு கப்
விருப்பப்பட்ட காய் கறிகள் – ஒரு கப் (நீளமாக மெலிதாக வெட்டியது அல்லது சதுரமாக வெட்டியது)
பச்சை பட்டாணி – கால் கப்
அஜினமோட்டோ – ஒரு சிட்டிகை
சில்லி பிளேக்ஸ் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – நான்கு
மசாலா பேஸ்ட் – ஒரு டேபிள்ஸ்பூன்
சில்லி சாஸ் – ஒரு டீஸ்பூன்
சோயா சாஸ் – ஒரு சொட்டு
உப்பு – தேவையான அளவு
ஸ்ப்ரிங் ஆனியன் – கால் கப் (நறுக்கியது)

செய்முறை:

*முதலில் நூடுல்ஸ்சை நான்கு கப் நீர் விட்டு மிதமான தீயில் ஒன்றும் பாதியுமாக வேக வைக்கவும்.

*வெந்ததும் அதை ஒரு வடிகட்டியில் போட்டு நீரை வடித்து விட்டு குளிர் நீரில் நூடுல்ஸ்சை இரண்டு நொடிகள் அலசவும்.

*பின்பு நன்றாக நீரை வடித்து விட்டு ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு பிசிறி ஆற விடவும்.

*கடையில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மசாலா பேஸ்ட் மற்றும் சில்லி ப்ளேக்ஸ்சை போட்டு பச்சை வாடை போகும் அளவு வதக்கி அஜினமோட்டோ காய்கறிகள்,பச்சை மிளகாய் போட்டு ஒன்றும் பாதியுமாக வதக்கவும்.

*பின்பு சில்லி சாஸ் ,சோயா சாஸ் விட்டு கிளறி உப்பு சேர்த்து கலக்கவும்.

*ஸ்ப்ரிங் ஆனியன்ஸ் தூவி கிளறவும்.

*ஆறவைத்துள்ள நூடுல்ஸ்சை சேர்த்து கிளறி எல்லாம் ஒன்று சேர்ந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

*விருப்பபட்டால் சிறிது நெய் சேர்த்து பரிமாறவும்.

குறிப்பு:
*********

#சில்லி ப்ளேக்ஸ் இல்லாவிட்டால் மிளகாய் வற்றலை சிறிது நீர் சேர்த்துமைய அரைத்து அதை உபயோகிக்கவும்.கெட்டியாக இருக்குமாறு பார்த்துகொள்ளவும்.

#மசாலா பேஸ்ட் இல்லாவிட்டால் சில்லி பொடி,தனியா பௌடர்,மஞ்சள் பொடி மூன்றையும் சிறிது நீர் விட்டு கலந்து உபயோகிக்கவும்.

#காய்கறிகளை வதக்கும் பொழுது நீர் விட கூடாது.

#இந்த விதமாக செய்யும் நூடுல்ச்சிர்க்கு கேரட்,பீன்ஸ்,கோஸ்,பச்சை பட்டாணி மட்டும் போட்டு செய்தால் சுவை நன்றாக இருக்கும்.இந்த மூன்றும் இல்லாத பட்சத்தில் வேறு காய்கள் பயன்படுத்தலாம். // //


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: