Posted by: shuhaib | 12/07/2010

5 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. வெற்றிப் பயணம்


அதிநவீன தொலையுணர்வு செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2பி உள்ளிட்ட 5 செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி.-சி15 ராக்கெட் மூலம் திங்கள்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன.÷பி.எஸ்.எல்.வி. வரிசையில் தொடர்ந்து 16-வது ராக்கெட்டாக பி.எஸ்.எல்.வி. சி-15, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.÷காலை 9.22 மணிக்கு பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. சரியாக 20 நிமிஷம் 47 விநாடிகள் பயணித்து 630 கிலோமீட்டர் உயரத்தில் கார்ட்டோசாட்-2பி செயற்கைக் கோளை துருவ சூரிய வட்டப் பாதையில் நிலைநிறுத்தியது.செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதும், இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் விஞ்ஞானிகள் அனைவருக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.÷முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.- டி3 ராக்கெட் கடந்த ஏப்ரல் மாதம் கடலில் விழுந்தது. அதைத் தொடர்ந்து இந்த வெற்றி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.÷இந்த ராக்கெட் ஏவப்படுவதை மத்திய திட்டக் கமிஷனின் துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா உள்பட ஏராளமானோர் நேரில் பார்த்தனர்.ரூ.175 கோடியில் கார்ட்டோசாட்÷இந்தியாவின் 17-வது தொலையுணர்வு செயற்கைக்கோளான கார்ட்டோசாட் -2பி ரூ.175 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் மதிப்பு ரூ.80 கோடியாகும்.கார்ட்டோசாட்-2பி செயற்கைக்கோளில் அதிநவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது.÷இந்த செயற்கைக்கோள் பூமியை நாளொன்றுக்கு 14 முறை சுற்றிவரும். வரைபடங்கள் தயாரிக்க உதவும். இதன்மூலம் கிராமப்புற அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளையும், சுரங்கங்கள், துறைமுகங்கள், நகர்ப்புற மேம்பாடு ஆகியவற்றையும் கண்காணிக்கலாம்.காடுகள் குறித்த வரைபடம் தயாரிக்கவும், மரங்களைக் கணக்கெடுக்கவும், ஊரக சாலைகள் மேம்பாட்டிற்கும் இந்த செயற்கைக் கோள் மிகவும் உதவிகரமாக அமையும்.÷கார்ட்டோசாட்டுடன் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த அல்சாட் -2ஏ, கனடாவைச் சேர்ந்த அஸ்ஸôட் -1, ஸ்விட்சர்லாந்தின் டிசாட் மற்றும் தென்னிந்திய பொறியியல் மாணவர்கள் உருவாக்கிய ஸ்டுட்சாட் ஆகியவையும் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டன.ஒரு மணிநேரத்தில் சிக்னல் அனுப்பியது÷இதில் ஸ்டுட்சாட் செயற்கைக் கோள், விண்ணில் ஏவப்பட்ட ஒரு மணிநேரத்தில் பூமியை ஒருமுறைச் சுற்றிவந்ததாகவும், தரைக்கு சிக்னல்களை அனுப்பியதாகவும் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குநர் டி.கே. அலெக்ஸ் தெரிவித்தார்.மாணவர்களின் மினி செயற்கைக்கோள்÷காய்கறிகள் பயிரிடுதல் மற்றும் வானிலை ஆராய்ச்சிக்காக பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களில் உள்ள 7 பொறியியல் கல்லூரிகளின் மாணவர்கள் ஸ்டுட்சாட் என்ற சிறிய ரக செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர்.÷ரூ. 1 கோடி மதிப்பீட்டிலான இந்த செயற்கைக்கோளை, 40 மாணவர்கள் இணைந்து ஒன்றரை ஆண்டுகளில் தயாரித்துள்ளனர்.ஒரு கிலோவுக்கும் குறைவாக எடைகொண்ட செயற்கைக்கோள் மூலம் படம் எடுக்க முடியும் என்றும், அந்தப் படங்களை நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியும் என்பதையும் நிரூபிக்கவே இந்தச் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது என்று இந்தத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜார்னா மஜும்தார் தெரிவித்தார்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: