Posted by: shuhaib | 14/07/2010

விஞ்ஞானம் போதித்த மெஞ்ஞான வேதம்


இரு கடல்களின் நீரும் ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை.

வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள்,மனிதனின் தோலில் தான் உள்ளன, என்பது மிகச் சமீபத்திய விஞ்ஞானக் கண்டு பிடிப்பு. ஆனால் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்த விஞ்ஞான உண்மையைக் குர்ஆன் கூறுகிறது. நமது வசனங்களை மறுப்போரை நரகில் நுழையச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம், அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை மாற்றுவோம். (4:56)

ஆகாய விமானத்தில் பயணம் செய்யும் போது, இதயம் சுருங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். அன்றே சொன்னது அல் குர்ஆன். யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படி செய்கிறான். (6:125)

நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்துக் கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காண வில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள் (21:44) என்று திருக் குர்ஆன் குறிப்பிடுவதை, இன்றைய புவியியல் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப் படுத்தி வருகின்றனர். இன்றைக்கு பூம்புகார் எனப்படும் முன்னாள் காவிரிப் பூம்பட்டிணத்தின் பெரும் பகுதி, கடல் ஊடுருவி நிலப் பகுதி குறைந்து விட்டதாக ஆய்வாளர்கள் அறிவிக்கின்றனர்.


இவ்விதம் பல் வேறு நாடுகளில், கடற்கரையோரங்களில் பூமி குறைந்துள்ளது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தீவு இந்தியாவின் தென் பகுதியுடன் முற் காலத்தில் இணைந்திருந்து, காலப் போக்கில் கடல் நீர் உட்புகுந்து இரண்டு நாடுகளாகப் பிரிந்திருக்கக் கூடும், என்று, இரு நாட்டு மக்களின் மொழியும், கலாச்சாரமும், உருவ ஒற்றுமையும் ஒரு போல் இருப்பதை ஆராய்ந்த புவியியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இரண்டு கடல்கள் ஒன்றுசேரும் இடங்களில் இரு கடல்களின் நீரும் ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை, என்று கடல் ஆய்வாளர்கள் கண்டறிந்ததை அப்போதே திருக் குர்ஆன் அறிவித்து விட்டது. அவனே இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது. அதை அவை மீற மாட்டா.(55:19,20)


தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி தனது கூட்டில் கொண்டு போய் சேமித்து வைக்கின்றன என்ற தான் பொதுவாகப் பலரும் நம்புகின்றனர். ஆனால் தேனீக்கள் மலர்களிலிருந்து உறிஞ்சும் குளுக்கோஸ் தேனீக்களின் வயிற்றினுள் சென்று மாற்றமடைந்து அதன் வயிற்றிலிருந்து வெளிவரும், கழிவு தான் தேன் என்று விஞ்ஞானம் இப்போது கண்டறிந்துள்ளது. ஆனால் அப்போதே திருக் குர்ஆன் இதைத் தெளிவு படுத்திவிட்டது.

அதன் வயிற்றிலிருந்து பல வித நிறங்களையுடைய ஒரு பானம்(தேன்) வெளியாகிறது. அதில் மக்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு. (16:69)


இரத்தம் தான் பாலாக மாறுவதாக நம்பப்பட்டு வந்த கருத்தை இந்த நூற்றாண்டில் விஞ்ஞானம் மறுக்கிறது. உண்ணப்பட்ட உணவு குடலுக்குச் சென்று கூழாக அரைக்கப் பட்டு இரத்தம் உற்பத்தியாவதற்கு முன்பே பால் உற்பத்தியாவதை விஞ்ஞானம் இப்போது கண்டறிந்துள்ளது. விஞ்ஞானத்தின் முன்னோடியான மெஞ்ஞான வேதம் சுற்றி வளைக்காமல் நேரடியாகத் தெளிவாகவே சொல்கிறது.

நிச்சயமாக உங்களுக்கு, கால் நடைகளிலும்(தக்க) படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக புகட்டுகிறோம்.(16:66)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: