Posted by: shuhaib | 17/07/2010

வாக்கியங்களை அமைக்கலாம் வாருங்கள்


[நண்பர்களே ! இது ஒரு பாடத்தின் தொடர்ச்சி .. நீங்களும் விரைவில்  ஆங்கில இலக்கணத்தில்  (English Grammar)  தேர்ச்சி பெறலாம். நீங்கள் பயன்பெற வேண்டுமேன்பதற்க்காகவே இந்த முயற்சி.  எனவே புதிய நண்பர்கள் இதன் தொடக்கத்திலிருந்தே படித்து வரவேண்டும். அப்போதுதான் உங்களுக்கு பயன்படும். அதற்க்கு நீங்கள் நான் ஏற்கனவே வழங்கிய பாடங்கள் பிரிவுகள் பகுதியில் ஈசி இங்கிலீஷ் என்ற பிரிவை அழுத்தினால் உங்களுக்கு கிடைக்கும். அதை படிக்கும் போது கீழிருந்து மேலாக(அதாவது அடிப்படை ஆங்கிலம்) படிக்குமடி  வேண்டுகிறேன். நன்றி.]

பாடங்களை மிகுந்த கவனத்துடன் படித்துவரும் உங்களால் இப்பொழுது ஆங்கில வாக்கியங்களை மிகவும் எழிய முறையில் அமைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. காலத்திற்கேற்றபடி வாக்கியங்களை அமைக்கும் முறைப் பற்றி இவ்வகுப்பில் மேலும் விரிவாகக் கூறப்போகிறேன்.

வாக்கியங்களைப் பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். எனினும் முதலில் மூன்று பிரிவுகளைப் பற்றிக் காணலாம்.

வாக்கியங்கள் காலத்திற்கேற்ப மாறுபடும்.

நான் போகிறேன், நான் போனேன், நான் போவேன் என்ற 3 வாக்கியங்களில் போ என்ற நிகழ்காலத்தில் போகிறேன், கடந்த காலத்தில் போனேன், எதிர்காலத்தில் போவேன் என்று மாறியுள்ளது. ஒரு வாக்கியத்தை நாம் அமைக்க வேண்டுமானால் கண்டிப்பாக ஒரு வினைச்சொல் இல்லாமல் அதை அமைக்க முடியாது, அமைக்கவும் கூடாது என்று உங்களுக்கு தெரியும்.

Raman , Sita

I – நான் , we – நாங்கள், you – நீ/ நீங்கள்

He – அவன், she – அவள், It – அது they – அவர்கள்

இவைகள் அனைத்தும் பெயர்ச்சொற்கள். அதாவது raman , sita என்பது noun என்ற பெயர்ச்சொற்கள் மற்றவை pronoun என்ற பிரதி பெயர்ச்சொற்கள்.

நினைவிருக்கட்டும்:

Noun, Pronoun இவைகளை வாக்கியத்தில் பயன்படுத்தும்போது இதற்கு subject என்று பெயர்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் ஒரு செயலை செய்வது subject ஆகும்.

ராமன் ஓடுகிறான். இதில் ஓடும் செயலை செய்பவர் யார்? ராமன். இதைத்தான் subject எழுவாய் என்கிறோம்.

செயல் என்பது என்ன? அதுதான் verb இதைப்பற்றி ஏற்கனவே பக்கம் பக்கமாக அட்டவனை போட்டு அதில் 130 வினைச்சொற்கள் உள்ளன என்றும், அவைகளை மனப்பாடம் செயும் படியும் கூறியிருந்தேன். என்ன மனப்பாடம் செய்து விட்டீர்களா?இப்பொழுது வினைச்சொற்கள் இருந்தால் தான் வாக்கியங்களை அமைக்க முடியும். மீண்டும் ஞாபகப் படுத்துகிறேன்.ஒரு வாக்கியத்தை அமைக்க ஒரு subject தேவை அதற்க்குப் பக்கத்தில் ஒரு வேர்ப் தேவை.

Verb என்பது ஒரு செயல்.

subject என்பது அச்செயலை செய்பவர்.

என்ன புரிகிறதா? சரி இப்பொழுது ஒரு சிறிய வாக்கியத்தை அமைத்துக் காட்டுகிறேன்.

I – நான்

Go – போ

I go – நான் போகிறேன்.

We go – நாங்கள் போகிறோம்.

இந்த வாக்கியங்களில் I, we என்பது subject , go என்பது verb.

இப்பொழுது ஒரு முக்கியமான விஷயத்தைக் கூற விரும்புகிறேன். கவனமாக கேளுங்கள்.

I walk நான் நடக்கிறேன்
You walk நீ நடக்கிறாய்/நீங்கள் நடக்கிறீர்கள்
We walk அவன் நடக்கிறான்
He walks அவன் நடக்கிறான்
She walks அவள் நடக்கிறாள்
It walks அது நடக்கிறது
They walk அவர்கள் நடக்கிறார்கள்
Rama walk ராமன் நடக்கிறான்
Sita walk சீதை நடக்கிறாள்
Rama and Sita walk ராமனும், சீதையும் நடக்கிறார்கள்

கவனித்தீர்களா?

இந்த அட்டவணையில் I, we, they, you, Rama and Sita போன்ற subject களுக்கு அருகில் உள்ள வினைச்சொல் walk என்று உள்ளது. ஆனால் he, she, it , Rama, Sita போன்ற subject  உள்ள verb உடன் ‘S’ சேர்த்து walk+s=walks என்று உள்ளது.இது என் தெரியுமா? நினைவில் வைத்துகொள்ளுங்கள்.present tense ல் he, she, it , Rama, Sita போன்ற subject களின் அருகில் இடம் பெரும் verb உடன் ‘S’ சேர்க்க வேண்டும்.

உதாரணமாக:

I READ நான் படிக்கிறேன். ஆனால்

HE READS . அவன் படிக்கிறான்.

THEY WRITE அவர்கள் எழுதுகிறார்கள்.ஆனால்

SHE WRITES . அவள் எழுதுகிறாள்.

WE WORK . நாங்கள் வேலை செய்கிறோம்.ஆனால்

IT WORKS. அது வேலை செய்கிறது.

RAMA WORKS. ராமா வேலை செய்கிறான்.

SITA WORKS. சீதா வேலை செய்கிறாள்  ஆனால்

RAMA AND SITA WORK. ராமனும் சீதையும் வேலை செய்கிறார்கள்.

இறுதியாகக் கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தில் RAMA AND SITA WORK என்று கூறியுள்ளேன். ஏன் தெரியுமா? he, she, it , Rama, Sita போன்ற ஒருமைச் சொற்களுடன் மட்டும் ‘S’ சேரும்.

ராமா தனி ஆள். SITA எனபது தனியாக ஒரு பெண்மணியைக் குறிப்பது. ஆனால் RAMA AND SITA ராமனும், சீதையும் என்பது ஒருவரல்ல இருவர்.

எனவே இது பன்மை. பன்மைக்குப் பிறகு ‘S’ சேர்க்கத் தேவையில்லை.

மேலும் சில PRESENT TENSE வாக்கியங்கள்

I LIKE நான் விரும்புகிறேன்
I KNOW எனக்குத் தெரியும்
I BELIEVE நான் நம்புகிறேன்
WE EAT நாங்கள் சாப்பிடுகிறோம்
WE SEE நாங்கள் பார்க்கிறோம்
YOU LAUGH நீ சிரிக்கிறாய்
YOU CHEAT நீங்கள் ஏமாற்றுகிறீகள்
THEY SPEAK அவர்கள் பேசுகிறார்கள்
THEY SELECT அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்
HE LIKES அவன் விரும்புகிறான்
HE PLAYS அவன் விழையாடுகிறான்
SHE SHINGS அவள் பாடுகிறாள்
SHE TYPES அவள் டைப் அடிக்கிறாள்
KAMALA GOES கமலா போகிறாள்

GO என்ற வினைச் சொல்லுடன் ‘S’ மட்டும் சேராது. எனவே ‘ES’ சேர்க்க வேண்டும்.

KAMALA AND MANI READ

கமலாவும், மணியும் படிக்கிறார்கள்

KAMALA AND MANI LAUGH

கமலாவும், மணியும் சிரிக்கிறார்கள்

இதுவரை PRESENT TENSE வாக்கியங்களைப் பற்றிப் பார்த்தோம்.

PAST TENSE பற்றி அடுத்த வகுப்பில் பாப்போம்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: