Posted by: shuhaib | 24/07/2010

இங்கிலாந்தில் மிகப்பிரபலமான 10 மொழிகளில் தமிழும் உள்ளடக்கம்


இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் மிகப்பிரபலமான மொழிகளில் தமிழ் மொழி முதல் 10 இடங்களுக்குள் இருப்பதாக லண்டன் மெட்ரோபொலிடன் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவசர உதவிகளுக்காக காவற்துறையினரை அழைக்கும் முதல் 10 மொழிகளில் தமிழ் மொழியும் உள்ளடங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளொன்றுக்கு சராசரியாக 8 ஆயிரம் அவசர அழைப்புகளும், 12 ஆயிரம் அவசரம் சாராத அழைப்புகளும் தமிழ் மொழி பேசுபவர்கள் மூலமாக மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வரிசையில் உள்ள ஏனைய மொழிகளாக போலந்து, ரோமான், பஞ்சாப், போர்த்துக்கல், ஸ்பெனிஸ், துருக்கிய மொழி, சோமாலி, ப்ரென்ச், மற்றும் பெங்காலி என்பனவும் உள்ளடக்கப்படுகின்றன.

இதேவேளை பிரித்தானியாவில் ஆங்கிலம் தவிர தமிழ் மொழியிலும் அவசர அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என காவற்துறையினர் அறிவித்து அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பிரித்தானியாவுக்கு சென்ற தமிழர்களின் காரணமாகவே தமிழ்மொழி பயன்பாடு 10 இடங்களுக்குள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில் 2 லட்சம் இலங்கைத்தமிழர்கள் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகின்றனர்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: