Posted by: shuhaib | 25/07/2010

நிலமெல்லாம் ரத்தம் !!


மொத்தம் 100 பகுதிகள். இது பின்னிப் பிணையப்பட்ட கதையல்ல. ஒரு இஸ்லாமிய நாட்டின் சரித்தரம். நொறுக்கப்பட்ட, சிதைக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின் கூக்குரல்.

நம் இணையத்தில் தொடர்ந்து எழுதலாம் என்று நினைக்கிறேன்.ஆகவே இன்ஷா அல்லாஹ் இது தொடர்ந்து வெளி  வரும்.ஆதலால் வாசகர்கள் இப்பக்கத்தை FAVORITE / BOOKMARK ல் பதிந்து கொள்வதுடன் தாங்களுக்கு தெரிந்தவர்கள் , நன்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தி அனைவரையும் தாங்களின் பிள்ளைகளையும் படிக்கச் செய்யுங்கள்.

என் முயற்சிகள் அனைத்தும் ஒரு ராஜாளியின் உயரத்துக்கு பறக்கவில்லையென்றாலும் ஒரு ஈசல் உயரத்திற்காவது பறக்க வேண்டும்.அறியாமையில் இருக்கும் நம் மக்களுக்கு என் கட்டுரைகள் ஒரு நிதியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

களத்துக்கு நேரே சென்று ஆராய்ச்சி செய்து எழுதும் ஆய்வாளன் அல்ல நான். அதற்கான வசதி வாய்ப்புகளும்மிங்கே இல்லை. புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் தரும் செய்திகளின் அடிப்படையில் மட்டுமே இந்த வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. சில வல்லுநர்கள் அவ்வப்போது பிழை திருத்தி உதவியிருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

என் எழுத்துக்களில் பிழை இருக்கலாம். தயவு செய்து பிழைகளை சுட்டிக்காட்டுங்கள். அது மீண்டும் தவறுகள் வராமல் தடுக்க உதவும்.

எனக்குக் கிடைத்த பக்கங்களை நான் நல்ல முறையில் பயன்படுத்தவே முயற்ச்சிப்பேன் இன்ஷா அல்லாஹ்.

வாசகர்கள் அறிந்திராத விஷய களஞ்சியம். சலிப்படையாமல் படித்து வருவீர்களேயானால் போக போக இதுவரை நாம் ஏன் இதை படிக்கவில்லை என்ற எண்ணம் உங்களுக்கு திண்ணமாக மேலோங்கும்.

இஸ்ரேல், பாலஸ்தீனம் பற்றிய இன்றைய பதிவுகள்தான் நாளைய வரலாறு. இது இஸ்லாம் அல்லாத ஒருவரின் ஆய்வு என்பதை மீண்டும் நினைவுப் படுத்திக்கொள்கிறேன். நன்றி- (அபு உமர்)

இதே தருணத்தில் இந்த சரித்திரம் நான் என் தளத்தில் எழுதக் காரணமாக இருந்த திரு. வாஞ்சூர் அவர்களுக்கு என் இனிய ஸலாமும் நன்றிகளும்.

இனி வரலாறுகள்..


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: