Posted by: shuhaib | 27/07/2010

அமெரிக்காவை ‘கடிக்கும்’ மூட்டைப் பூச்சி பிரச்னை


அமெரிக்க அரசுக்கு இப்போது பெரும் தலைவலியாக இருப்பது மூட்டைப் பூச்சி பிரச்னை. நியூயார்க் நகரில் மூட்டைப் பூச்சிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள், வியாபாரிகளிடம் இருந்து நூற்றுக்கணக்கில் புகார்கள். இதுபற்றி நியூயார்க் நகர்ப்புற வீட்டு பாதுகாப்பு மற்றும் முன்னேற்றப்பிரிவு விசாரித்தது. ‘மூட்டைப் பூச்சி தொந்தரவு அதிகரித்திருப்பது உண்மைதான். கடந்த 2004&ம் ஆண்டு 500 பேரிடம் இருந்து மூ.பூ. புகார்கள் வந்தன. தற்போது, இந்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டிவிட்டது’ என்று அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது.

‘உங்கள் வீட்டில் மூ.பூ. நிலைமை என்ன என்பது குறித்து உடனே அரசுக்கு தெரிவியுங்கள்’ என்று வீடுவீடாக தகவல் அனுப்பியிருக்கிறது நியூயார்க் நகர நிர்வாகம். நியூயார்க்கில் திரும்பிய பக்கமெல்லாம் இப்போது இதுதான் பேச்சு. ‘மூட்டைப் பூச்சி தொல்லை 50 ஆண்டுகளுக்கு முன்பு அதிகம் இருந்தது. அரசு கடுமையாக போராடி அவற்றை ஒழித்துக்கட்டியது. அதேபோன்ற நடவடிக்கை தேவை’ என்கின்றனர் வியாபாரிகள்.

மூட்டைப் பூச்சி ஒழிப்புக்காக கடந்த ஆண்டில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வாரியம் இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளது. ‘அல்கய்தாவே பரவாயில்லை’ என்று புலம்பாத குறையாக மூட்டைப் பூச்சி ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: