Posted by: shuhaib | 03/08/2010

Prepositions- வேற்றுமை உருபுகள்


He reads அதாவது எப்படிப் படிக்கிறான்? உங்களது விடை என்ன? Adverb of manner (தன்மை) என்ற அட்டவணையில் உள்ள adverb ஏதாவது ஒன்றைப் பயன்படுத்துங்கள், அவன் நன்றாக படிக்கிறான். இதை எழுதுங்கள்.

He reads well. அவன் நன்றாகப் படிக்கிறான்.

He reads slowly அவன் மெதுவாகப் படிக்கிறான்.

எப்பொழுது என்று கேள்வி கேட்டால்

He reads in the morning  அவன் காலையில் படிக்கிறான்.

இப்பொழுது adverb ஐ வாக்கியத்தில் எப்படிப் பயன்படுத்துவது என்பதைப் பற்றி தெரிந்து கொண்டீர்கள். ஆமாம். இறுதியாகக் கூறியுள்ள வாக்கியத்தை ஒரு முறை படித்துப் பாருங்கள்.

He reads in the morning

என்று எழுதி உள்ளேன்

He – அவன்  reads – படிக்கிறான் morning – காலை

He reads morning என்று எழுதாமல்

He reads in the morning என்று கூறியுள்ளேன்.

ஒரு வாக்கியத்தை பிழையின்றி அமைக்க வேண்டுமெனில் preposition தேவை. எனவே இவ்வகுப்பில் preposition களைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமைக்கும் முறையை விளக்குகிறேன்.

I went there 8’O clock

இது ஒரு வாக்கியம் என்று நான் எழுதிள்ளேன். இதில் ஏதாவது தவறு இருக்கிறதா? I went there – நான் அங்கே போனேன்.

8’O clock – 8 மணி

நான் அங்கே 8 மணி போனேன். இதில் ஏதோ ஒரு வார்த்தை குறைகிறது.

அதனால் பிழையாக உள்ளது. ஓ! அதுதான் preposition இந்த வாக்கியத்தில் இல்லை. சரி, சேர்த்து விடலாம்.

8’O clock – 8 மணி

At 8’O clock – 8 மணி

தற்போது எழுதலாம். I went there at 8’Oclock – நான் 8 மணிக்கு அங்கே போனேன்.

இதே போல PREPOSITION களை சரியான இடத்தில் பயன்படுத்தினால்தான் வாக்கியங்களை பிழையின்றி அமைக்க முடியும். தற்போது சில PREPOSITION களைக் காணலாம்.

IN – உள்ளே FROM – இருந்து
AT – இல் BETWEEN – இடையில்
TO – க்கு AMONG – மத்தியில்
BY – மூலமாக AGAINST – எதிராக
FOR – க்கு WITH – உடன்
INTO – உள்ளே WITHOUT – இல்லாமல்
ON – மேலே ABOVE – உயரே

I WENT எங்கே?

I WENT MARKET நான் மார்க்கெட் போனேன். இது தவறான வாக்கியம். எனவே,

I WENT TO THE MARKET – நான் மார்க்கெட்டிற்குப் போனேன். இந்த வாக்கியத்தில் ‘TO’ என்பது ‘க்கு’ என்ற பொருளைத் தருகிறது. நீங்கள் கீழ்காணும் சில தொடர்களைப் படித்து நினைவில் வைத்துக் கொள்ளவும்.

IN THE MORNING                            காலையில்

AT 10 O’ CLOCK                                 பத்துமணிக்கு

ON MONDAY                                     திங்கள் கிழமையன்று

IN THE YEAR 1986                             1986 வது வருடத்தில்

IN INDIA                                              இந்தியாவில்

FOR ME                                                எனக்கு

FROM ME                                            என்னிடமிருந்து

FOR HIM                                              அவனுக்கு

WITH YOU                                           உன்னுடன்

WITHOUT YOU                                  நீயில்லாமல்

FOR HER                                               அவளுக்கு / அவளுக்காக

TO THE MANAGER                           மேனேஜருக்கு

AGAINST HIM                                    அவனுக்கு எதிராக

இதுவரை PREPOSITION பற்றித் தெரிந்து கொண்டீர்கள். நாம் பல வகையான வாக்கியங்களை அமைக்கும்போது இவற்றைப் பயன்படுத்தப் போகிறோம். எனவே, நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளவும்

கவனிக்கவும்:

ON என்றால் மேலே என்று அட்டவணையில் உள்ளது. ஆனால் ON MONDAY என்பதன் தமிழ் அர்த்தம் திங்கக்கிழமையன்று என்று உள்ளது அல்லவா? எப்பொழுதும் கிழமைப் பற்றிக் குறிப்பிடும்போது ON என்பதைப் பயன்படுத்த வேண்டும்.

AT என்றால் இல் என்று அர்த்தம். ஆனால் AT 8’O clock என்றால் எட்டுமணிக்கு என்று பொருள் கொள்ள வேண்டும். மணியை குறிக்கும்போது at என்பதை இணைத்தால் க்கு என்ற அர்த்தம் தரும்.

On என்ற வார்த்தைக்கு மேலே/ மீது என்று அர்த்தம். ஆனால் இந்த onஎன்ற வார்த்தையின் அருகில் இடம் பெரும் வார்தைக்கேர்ப்ப இதன் அர்த்தம் மாறுபடும்.


உதாரணம்: week days என்றால் வார நாட்கள் என்று அர்த்தம்.


On week days என்றால் வாரநாட்களில் என்று பொருள் கொள்ளவேண்டும்.


இதுபோலவே ‘he is on leave’ என்றால் அவர் விடுமுறையில்  இருக்கிறார் என்று அர்த்தம். He has come here on business என்றால் வியாபார விஷயமாக அவர் இங்கே வந்திருக்கிறார்.


On foot என்றால் கால்நடையாக என்று அர்த்தம்.


Later on என்றால் அதன்பிறகு என்று அர்த்தம்.


Responses

  1. என்ன செய்யவேண்டும்


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: