Posted by: shuhaib | 04/08/2010

காலிஃப்ளவர் மஞ்சூரியன்


சைவ உணவில் மஞ்சூரியன் செய்ய முடியாது என்று வருத்தப்பட்டவர்கள் இவ்வாறு சுவையாக உங்களுக்கு விருப்பமான எந்த காய்கறியில் வேண்டுமானாலும் செய்துக்கொள்ளலாம்.

என்ன தேவை?

காலி ஃப்ளவர் – 1
பெரிய வெங்காயம் – 1
இஞ்சி – தேவையான அளவு
பூண்டு – 10 பெரிய பற்கள் ( சின்னதாக நறுக்கிக் கொள்ளுங்கள் )
ஸோயா சாஸ் – ஒரு ஸ்பூன்
அஜினமோட்டோ – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 4 + சில்லரி ஒரு தாள்
( சின்னதாக வெட்டி மிக்ஸ் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள்)
மிளகாய்த் தூள் பசை – ஒரு டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – அரை டீஸ்பூன்
மக்காச்சோளம் – ஒரு கை
மைதா மாவு – ஒரு கை
முட்டை (அடித்தது) – 1

எப்படி செய்வது?

* காலிஃப்ளவரை முதலில் வேக வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் மக்காச்சோள மாவு, மைதா மாவு, முட்டை, உப்பு தடவி எண்ணெயில் போட்டு இரண்டு நிமிடம் பொரியுங்கள்.

* வாணலியில் கொஞ்சம் எண்ணெய்விட்டு வெங்காயம், பூண்டு, இஞ்சியை வதக்குகங்கள்.

* சோயா சாஸ், அஜினமோட்டோ, உப்பு, பச்சை மிளகாய், சில்லரி, மிளகாய்ப் பசை போட்டு லேசாக வதக்கி அரை டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடுங்கள்.

* இதில் சர்க்கரையும் கொஞ்சம் மக்காச்சோள மாவும் சேர்த்துக் கிளறுங்கள்.

* இதில் பொரித்தெடுத்த காலிஃப்ளவரை கொட்டுங்கள்.

* இரண்டு நிமிடம் வதக்கி எடுத்து சுடச்சுடப் பரிமாறுங்கள்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: