Posted by: shuhaib | 07/08/2010

தாஜ்மஹால் -அதிசயமே! அதிசயமே!


04-07-1997 அன்று கடலை வாங்கிய பொழுது கடலைப் பொதியில் எழுதப்பட்டிருந்த ஒரு தகவல். கடலைப் பொதியும் நமக்கு சில நேரம் நல்ல தகவலைத் தரும். எனவே கடற்கரைக்கோ, பூங்காவுக்கோ போகும்போது கடலை வாங்கும்போதோ அல்லது சுண்டல் வாங்கும்போதோ வருகிற போகிற ஆட்களை வாய் பார்க்காமல் கையில் இருக்கும் காகிதத்தை ஒரு நிமிடம் படித்து விட்டு வீசி எறியுங்கள. சில நேரம்; சில தகவல்கள் உங்கள் தலையெழுத்தையே மாற்றலாம்…ம்ம்..ம் அதுவும் உங்க தலயெழுத்தைப் பொறுத்து… இனி கடலைப் பொதி சமாச்சாரம்….

உலக வரலாற்றில் தாஜ்மஹாலைப் போல் ஒரு இனிய கல்லறை இன்னும் எத்தனை ஜென்மங்களிலும் உதயமாகப் போவதில்லை. மும்தாஜ் எனும் அழகிய மனைவியின் மீது ஷாஜகான் வைத்திருந்த நேசத்தின் கலை வடிவம் அது.
வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டிய அந்த கலை மிகு கட்டிடம் எழுந்த கதை பெருங்கதை.
தட்சிணப் பிரதேசம் பர்ஹான்பூர் என்ற ஊரில்தான் முதன் முதலாக மும்தாஜின் உடல் புதைக்கப்பட்டது. இத
ற்குப் பின் ஆறு மாதம் கழித்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆக்ராவில் இப்போது தாஜ்மஹால் உள்ள இடத்தில் புதைக்கப்பட்டது.
மும்தாஜ் இறந்து சரியாக ஒரு வருடம் கழித்து ஷாஜஹான் களத்தில் இறங்கினார்.
வெனிஸ் நகரத்து வெரோனியா, துருக்கி நாட்டு உஸ்தாக் இசா அபாண்டி, லாகூரைச் சேர்ந்த அகமத் எனப் பலரும் வந்திருந்து ஷாஜகானும், கூட்டுச் சேர்ந்து அமைத்த மொத்த வடிவமே இன்றைய தாஜ்மஹால்.
அடுத்த கட்டமாக கட்டிடக் கலைஞர்கள், சிற்பிகள், கொத்தனார்கள் என இருபதாயிரம் பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு மள மளவென பணிகளைத் தொடங்கினார் ஷாஜஹான்.
1632- ம் ஆண்டு வேலைத் தொடங்கி 1652 வரை சுமார் 20 ஆண்டு கால உழைப்பின் சின்னம்தான் இந்த தாஜ்மஹால்…. அதற்குப் பிறகு கூட ஒரு ஆண்டுக்கு வெளியேயுள்ள சுற்றுப் புறத்தில் மிக நுண்ணிய வேலைகள் நடந்தன.
தாஜ்மஹாலைச் சுற்றி 42 மீட்டர் உயரத்திற்கு நிற்கும் 4 மினார்களும் (தூண்) லேசாக வெளிப்புறம் சாய்த்து வைத்து கட்டியிரிக்கிரார்கள். காரணம் ஏதேனும் அசம்பாவிதத்தில் அந்த தூண்கள் விழுந்தால் கூட தாஜ்மஹால் மீது பட்டுவிடக் கூடாதே என்ற காரணுத்துக்காகத்தான்.
தாஜ்மஹாலின் வெளிப்புறக் கதவுகள், சுவர்களில் பதிக்க இந்தியாவைத் தவிர ரஷியா, திபெத், பாரசீகம் என பல இடங்களில் இருந்தும் வைரம், வைடூரியம், முத்து, பவளம் என பல விதம் விதமாக வரவழைத்து பயன்படுத்தி அழகு பார்த்தார் ஷாஜஹான்.
புனித குரானிலிருந்து குறிப்பிட்ட வாசகங்களை தேர்ந்தெடுத்து அவற்றை கல்லறையைச் சுற்றிலும் உள்ள சுவர்களில் பொறிப்பது என்று முடிவு செய்தார்.
இதற்காக உ
கிலேயே மிகத் திறமையான பாரசீக கலைஞர் “அமானாத்கான் “ பெயர் சிபாரிசுச் செய்யப் பட்டது.
“ நான் எந்த வேலைச் செய்தாலும் அதில் என் கையெழுத்தைப் போடுவேன் என்று அடம்பிடித்த அவரை “ சரி…கையெழுத்து போட்டு
க்கொள்ளுங்கள்”என்று அனுமதிக் கொடுத்து வரவழைத்தார் ஷாஜஹான்.
இன்றை
க்கும் அந்தச் சிற்பியின் கையழுத்தைக் காணலாம். தாஜ்மகாலில் இவரது கையழுத்தைத் தவிர வேறு எவரின் பெயரும் கிடையாது.
இப்படி அங்குல
ம் அங்குலமாக பொன் நகையை உருவாக்குவது போல் கட்டினார் ஷாஜஹான்.
தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்டு கொஞ்சம் காலம் முஸ்லீம்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டனர். பிற்பாடு உலகெங்கிலும் இருந்து பலர் வர வர அந்தத் தடை தானாகவே நீங்கிப் போனது.
இத்தகைய அழகான தாஜ்மகால் அதன்பிறகு வந்த ஆங்கிலேயெர்களின் கண்களை பறிக்காமல் இருக்குமா?
பல ஆங்கில அதிகாரிகள் சுவர்களில் பதிக்கப் பட்ட வைர, வைடூரியங்களை சுரண்டி எடுத்துக் கொண்டு போனார்கள்.
லார்டு வில்லியம் பெண்டிங் என்பவர் இடி
த்து விடலாம் என்று ஐடியா கொடுத்தார்.
இன்னும் பல ஆங்கி
லேய அதிகாரிகள் தாஜ்மகாலை ஒவ்வொரு கல்லாக பெயெர்தெடுத்து, கப்பலில் ஏற்றிக் கொண்டு போய், இங்கிலாந்தில் இறக்கி மீண்டும் செட்டப் செய்து விடலாம் என்று ஆலோசனை வழங்கினார்.
இறைவனின் கருணையால்… இன்றைக்கும் இப்படியொரு அற்புதக் கட்டிடம் இந்தியாவில் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அப்போது வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபு…
கலைஞர்களின்பா
ல் மிகுந்த ஆர்வமும், ஆசையும் கொண்டிருந்த அவர் மற்றவர்களின் யோசனையை தூரத் தூக்கி எறிந்துவிட்டு தாஜ்மஹாலை நல்ல முறையில் பராமரிக்க ஒரு சட்டமே இயற்றினார்.
அதோடு மட்டுமல்ல.. இப்போது நீங்கள் தாஜ்மஹாலுக்குப் போனால் மும்தாஜ் – ஷாஜஹான் கல்லறைகளுக்கு மத்தியில் மேலே … ஒரு அழகான பித்தளை விளக்கு தொங்கிக் கொண்டிருக்கும்.
இதனைக் கொய்ரோவிலுருந்து வாங்கி, இங்கு தொங்கவிட்டவரே இந்த கர்சன் பிரபுதான்.
இந்த தாஜ்மஹால் கட்டுவத
ற்கு 1000 யானைகளும், 40000 பணியாளர்களும் வேலை செய்யப்பட்டனர்.


மும்தாஜின் க
டைசி நாள்:
மு
ம்தாஜுக்கு மொத்தம் 13 குழந்தைகள் (1613- 1631) க் குள் இந்தக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.
இதில் 7 குழந்தைகள் மிக சிறுவயதிலேயே இறந்து போனது. உயிருடன் தாரா, சூசா, அவுரங்கசீப், மூரத் ஆகிய 4 ஆண் குழந்தைகளும் சாகனார, ரோனார, கவுஷனாரா ஆகிய 3 பெண் குழந்தைகளும் இருந்தார்கள். இதில கடைசிப் பெண்ணான கவுஷனாராவைப் பெற்றுடுக்கும்போதுதான் பிரசவ வலி தாள மாட்டாமல் 07-06-1631 ல் மும்தாஜ் இறந்துபோனாள்.

Advertisements

Responses

 1. கடலோரம் சுகமான காத்து.எல்லா அலைகளும் அழகு.

  • கருத்துக்கு நன்றி… இந்தக் கடற்கரையில் அதிக நேரம் இருந்து பாருங்கள். சுகமான தென்றலின் குளிர்சியைப் பெறலாம். நன்றி மீண்டும் வாருங்கள்.

 2. super

 3. i love taj mahal

  i can t forget it in my life

  prema

 4. i love thajmahal……

  • i am also loving it
   thanx

 5. i love tajmahai

 6. i love tajmahal

 7. Realy I dont know about Tajmahal. But I knew the love of Shajaghan & Mumtaj. now I say ” I love Tajmahal ” By ” AK “- Indian-Tamilan


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: