Posted by: shuhaib | 08/08/2010

இருமலால் அவதியுறுவோருக்கு ‘தேனான’ மருத்துவம்!


‘குத்திருமல்’ என்று அழைக்கப்படுகிற தொடர்ந்து இருமலால் அவதியுறும் நபர்களுக்கு இதோ ஓர் இனிப்பான மருந்து… தேன்!

ஆம், இயல்பிலேயே மருத்துவ குணங்கள் நிரம்பிய தேனுக்கு, தொடர் இருமலுக்கு முட்டுக்கட்டையிடும் வல்லமை உள்ளது.

இதனை உறுதிபடச் சொல்வது, சித்த மருத்துவர்கள் அல்லர்; மேற்கத்திய மருத்துவப் பல்கலைக் கழக ஆய்வாளர்கள்!

பென்சில்வேனியா மருத்துவ பல்கலைக்கழக ஆய்வாளர்கள், 2007-ம் ஆண்டு இறுதியில் ஒரு மருத்துவ ஆய்வின் முடிவை வெளியிட்டனர்.

அந்த ஆய்வு, குத்திருமலில் அவதியுற்ற, குறிப்பாக இரவு நேரங்களில் தொடர்ந்து இருமல் இருக்கும் 105 குழந்தைகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.

அக்குழந்தைகளை மூன்று பிரிவாக பிரித்து, ஒரு பிரிவு குழந்தைகளுக்கு ஒரு சிரிஞ்ச் (தக்கை) அளவு தேனும், இரண்டாவது பிரிவு குழந்தைகளுக்கு அதே அளவிலான இருமல் மருந்தும் கொடுக்கப்பட்டது; மூன்றாவது பிரிவு குழந்தைகளுக்கு ஏதும் கொடுக்கப்படவில்லை.

சிறிது நாட்களுக்குப் பிறகு, இருமல் மருந்தை தொடர்ச்சியாக உட்கொண்ட குழந்தைகளைக் காட்டிலும், தேனை உட்கொண்ட குழந்தைகளுக்கு இருமல் வெகுவாக குறைந்திருந்தது தெரியவந்தது.

இதன் மூலம் இருமலைப் போக்கும் திறன், தேனுக்கு உள்ளது என்பது தெளிவாகிறது.

எனவே, குத்திருமலால் அவதிப்படும் சிறுவர்களும், பெரியவர்களும் உரிய சித்த மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரையுடன் தேனைப் பருகி வந்தால் ஆரோக்கியம் பேணலாம்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: