Posted by: shuhaib | 22/08/2010

தெரிந்து கொள்ளுங்கள்… பாட்மிண்டன் சிகரம்…


பாட்மிண்டன் விளையாட்டில் இந்தியாவின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவர் சையது மோடி. மோடி 1962-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் சவுரி சவுரா நகருக்கு அருகே உள்ள சிறிய கிராமம் ஒன்றில் பிறந்தார். சிறு வயது முதலே அவர் பாட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்டார். பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று விளையாடினார். சையது மேதி என்பதே அவரது இயற்பெயராகும். மும்பையில் நடைபெற்ற ஜுனியர் பாட்மிண்டன் போட்டி ஒன்றில் அவர் சிறு வயதில் விளையாடச் சென்ற போது அவரது பெயரை தவறாக சையத் மோடி என்று குறிப்பிட்டுவிட்டனர் போட்டி அமைப்பாளர்கள். அதன் பின்னர் அந்தப் பெயரையே தனது பெயராக மாற்றிக் கொண்டார் சையது.தனது அபார ஆட்டத்தால் பல்வேறு தேசிய, மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடத் தொடங்கினார் மோடி. 1980 முதல் 1988-ம் ஆண்டு வரை தொடர்ந்து 8 ஆணடுகள் தேசிய பாட்மிண்டன் சாம்பியனாக கொடி கட்டிப் பறந்தார் மோடி. 1983 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆஸ்திரிய சர்வதேச பாட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். 1982-ம் ஆண்டு தில்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றார். அதே ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் வெண்கலம் வென்றார் மோடி. பாட்மிண்டனில் மிக வேகமாக வளர்ந்து வந்து கொண்டிருந்த சையது 1988-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி லக்னௌவில் குடும்பப் பிரச்னை காரணமாக அவரது எதிரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலை பாட்மிண்டன் உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சர்வதேச அளவில் இந்த கொலை பரபரப்பாகப் பேசப்பட்டது. அவரது கொலை தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. 21 ஆண்டுகளுக்கு பிறகு 2009-ம் ஆண்டு,குற்றவாளி பகவதி சிங் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது லக்னௌ செஷன்ஸ் நீதிமன்றம்.  பாட்மிண்டன் சிகரம் சையதின் நினைவாக அவரது பெயரில் ஆண்டுதோறும் சையது மோடி கிராண்ட் பிரீ பாட்மிண்டன் போட்டிகளை நடத்தி வருகிறது இந்திய பாட்மிண்டன் சங்கம். மோடி ரயில்வேயில் பணியாற்றி வந்தார். அவரது நினைவாக இந்திய ரயில்வே, விளையாட்டு மைதானம் ஒன்றை கட்டி அதற்கு சையது மோடியின் பெயரை வைத்துள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: