Posted by: shuhaib | 23/08/2010

படித்ததில் பிடித்தது


கல்வி காணமற்  போன ஒட்டகம் அதை தேடிக்

கண்டுபிடித்துகொள்ளுங்கள் – நபி மொழி

நீ எப்படி உன் நண்பனிடம் பழகுகிறாயோ?

அதேப் போன்றுதான் அவனும் உன்னிடத்தில்

பழகுவான்.

நீ விரும்பியது கிடைக்காவிட்டால்

அது கிடைத்ததைப் போன்று நினைத்து

சந்தோசப்படு – உன்னை அறியாமல்

அது ஒருநாள் தானாகக் கிடைக்கும் .

எந்தப் புற்றில் எந்த பாம்போ

என்று பார்க்காதே…

எந்தப் பூவில் எந்த தேனோ

என்று பார்…

உங்களைக் காட்டிலும் மிகுதியான அழகும்,

செல்வமும் உள்ள ஒருவரை நீங்கள் பார்க்கும்போது …

உங்களைவிட குறைவான அழகும், செல்வமும் உள்ளவர்களை

ஒருமுறை எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள் – நபி (ஸல்)

ஒரு பஸ் பின்னாலயும்

ஒரு பொண்ணு பின்னாலயும்

தொடர்ந்து ஓடாதே…

இன்னொன்னு ஈசியா கிடைக்கும்.

ஒரு சொட்டிச் சிதைந்து போன பாத்திரத்தினுள்

தண்ணீர் எவ்வளவு அழகாக அந்தப்பாத்திரத்தினுள்

அமைந்திரிக்கிறதோ – அதுபோன்று கால நிலைக்கு ஏற்ப

உன் வாழ்க்கையயும்  மாற்றி அமைக்கப் பழகி கொள்.

கோபத்திலும் அமைதியிலும்

நீதியாக  நடக்கவேண்டும் – நபி (ஸல்)

இருட்டை சபிப்பதை விட

ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி

வைப்பது மேல்…

வீசுகின்ற வாசனையைப் பொறுத்துதான்

மலர்கள் மதிக்கப்படுகின்றன.

பேசுகின்ற வார்த்தைகளைப் பொறுத்துதான்

மனிதர்கள் மதிக்கப்படுகிறார்கள்.

பணம், பொருள், செல்வம் இதெல்லாம்

வெறும் கருவிகள்தான்…

பணம் என்பது சந்தோசம் கிடையாது…

பணத்திற்கு அர்த்தம் சந்தோசம் என்றால்

பணம் இருப்பவர்கள் அனைவரும் சந்தோஷமாக

இருக்கவேண்டும்…

வாழ்க்கையில் இழந்தால் திரும்பப் பெற முடியாத

விஷயங்கள் மூன்று…

1. உச்சரிக்கப்பட்ட சொல்

2. தவறிவிட்ட வாய்ப்பு

3. கடந்துபோன நிமிடம்

ஒருவன் கனவு காண வேண்டும்.

அந்தக் கனவை நனவாக்க முயற்சி

செய்ய  வேண்டும். அந்த கனவு

ஒரு நாள் அவனையும் அறியாமல்

நனவாக வந்தடையும்…!

கடந்த காலம் நமக்கு ஒரு பாடமாக

இருக்கவேண்டுமே தவிர, பாரமாக

இருக்க ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

ஒருவனை முன்னேறாமல் தடுப்பது

அவனது திறமையோ, தகுதி குறைவோ கூட அல்ல;

இனி தனக்கு வாய்ப்பே இல்லை, விடிவு காலமே இல்லை…

என்று அவன் ஒரு முடிவுக்கு வந்து விடுவதுதான் …

அறியாமை என்பது மிகப் பெரிய சாபம்!

முட்டாளாக இருப்பது மிகப்பெரிய தண்டனை!

இதில் விசித்திரம் என்ன வென்றால்,இந்த

சாபத்தையும், தண்டனையும் நாம் தான்

நமக்குக் கொடுத்துக் கொள்கிறோம்…

கடந்த காலம் என்பது துயரம் …

எதிர்காலம் என்பது புதிர் …

நிகழ்காலம்தான் இறைவன் நமக்கு

அளித்திருக்கும் பரிசு…

நம்மை விட எதிரி பலசாலி  – என்ற

எண்ணத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

இதொப்பார், யார் ஒருவர் தாமாகவே வந்து உதவி செய்கிறார்களோ;

ஓன்று இயற்கையாகவே இரக்கக்குணம் இருக்கவேண்டும். இல்லை,

கள்ளத்தனம் இருக்க வேண்டும்…

வேற்றி எத்தனை சுகமான அனுபவமோ

அதேப் போல தோல்வியும்  ஒரு அனுபவமே!

வேறு வார்த்தைகளில் சொன்னால் தோல்வி என்பது

தள்ளிப் போடப்பட்டிரிக்கும்  வெற்றி அவ்வளவுதான்!

அதில் உற்சாகம் இழக்க ஒன்றும் இல்லை!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: