Posted by: shuhaib | 23/08/2010

வாக்கியங்களின் முக்கியமான பிரிவுகள்


ஆங்கில மொழியின் இலக்கணம் மிகவும் தெளிவான முறையில் அமைக்கப்பட்டதாகும். இதைப் புரிந்து கொண்டுவிட்டால் மிகவும் எளிமையாக இருக்கும். ஒரு சிலர் ஆங்கில இலக்கணம் வெறும் present, past மற்றும் future என்ற மூன்று பிரிவுகளில் அடங்கியுள்ளது என்று நினைத்து விடுகிறார்கள். இந்த மூன்று பிரிவில் சில உட்பிரிவுகளும் உண்டு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

PRESENT TENSE
அதாவது நிகழ்காலம், நான்கு வகை நிகழ் காலங்கள் உண்டு. அதே போல நான்கு வகை கடந்த காலங்களும், நான்கு வகை எதிர்காலங்களும் உள்ளன. ஆக மொத்தம் 12 வகையான பிரிவுகளில் ஆங்கில இலக்கணம் அமைந்துள்ளது.

நான் இப்படிச் சொன்னவுடன் என்ன சார், நான்கு வகை நிகழ்காலமா என்று நீங்கள் கேட்கலாம். ஆமாம். மொத்தம் 12 வகையான பிரிவுகள்தான். கவலைப்படாதீர்கள். இதோ அந்தப் பிரிவுகளி விளக்குகிறேன். கண்டிப்பாக உங்களைக் குழப்பாமல் எழிய முறையில் கூறுகிறேன்.

PRESENT TENSE – நிகழ்காலம்

1. Simple Present
2. Present Perfect
3. Present Continuous
4. Present Perfect Continuous

PAST TENSE – கடந்த காலம்

5. Simple Past
6. Past Perfect
7. Past Continuous
8. Past Perfect Continuous

FUTURE TENSE – கடந்த காலம்

9.  Simple Future
10. Future Perfect
11. Future Continuous
12. Future Perfect Continuous

முதலில் நான் present tense ஐ எடுத்துக் கொள்கிறேன். அதில் மொத்தம் எத்தனை உள்ளன தெர்யுமா?

நான்கு பிரிவுகள் அல்லவா? சரி முதல் பிரிவான Simple Present ஐப் பார்க்கலாம்.

1. Simple Present

Simple Present என்பதை வழக்கமாக நடைபெறும் செயல்களைக் குறிப்பிடப் பயன்படுத்த வேண்டும்.
உதாரணமாக நான் வெள்ளிக் கிழமைகளில் கோவிலுக்குச் செல்கிறேன்.

இது என்னுடைய வழக்கமான செயல். இதேப போல உங்களது வழக்கமான செயல்களைக் குறிப்பிட இந்த Simple Present
வாக்கியங்களைப் பயன்படுத்தலாம்.

1. I get up at 6 O’ clock – நான் காலை 6 மணிக்கு எழுந்திரிக்கிறேன்.

2. I take path at 8 O’ clock – நான் 8 மணிக்கு குளிக்கிறேன்.

3. I go to office at 9:30. நான் 9:30 மணிக்கு அலுவலகத்திற்கு செல்கிறேன்.

4. I watch T.V. on Sundays – நான் ஞாயிற்றுக் கிழமைகளில் டி.வி பார்க்கிறேன்.

5. He comes here daily – அவன் இங்கே தினசரி வருகிறான்.

குறிப்பு: He comes என்று ஏன் வந்துள்ளது தெரியுமல்லவா? Presnet Tense ல் He, She, It வரும்போது S சேர்க்கவேண்டும் அல்லவா?

2. Present Perfect

சற்று நேரத்திற்கு முன் நடந்து முடிந்த செயலகழ்ப் பற்றி குறிப்பிட present perfect ஐப் பயன்படுத்த வேண்டும். இத்தலைப்பில் வாக்கியங்களை அமைக்க உங்களது verb அட்டவணையில் இடம் பெற்றிருந்த past participle களைப் பயன்படுத்த வேண்டும். past participle
மீண்டும் கூறத்தேவையில்லை. ஏனெனில் அவைகள் உங்களுக்கு மனப்பாடமாக உள்ளது அல்லவா? சரி.

Go என்பதன் past participle என்ன?

Go – Went- Gone சரியா?

இப்பொழுது present perfect வாக்கியங்களை அமைக்கலாமா? நினவிரிக்கட்டும். present perfect வாக்கியங்களை அமைக்கும்போது Subject ற்கு அருகில் Have அல்லது Has இடம்பெறும்.

I have, We have, They have, You have ஆனால்

He has, She has, It has, Rahuman has, Sumathi has.

குறிப்பு: He, She, It வரும்போது has சேரும். தற்போது வாக்கியத்தை அமைக்கலாமா?

He has இதன் அருகில் past participle ஐ இணைக்கலாம். Gone என்பதை இணைக்கலாமா?

He has gone அவன் போயிருக்கிறான் (அதாவது இப்பொழுதுதான் அவன் போனான்)

Just he has gone out (இப்பொழுதுதான் அவன் வெளியே போனான்)

Present Perfect Sentence

1. I have seen                       நான் பார்த்திருக்கிறேன்
2. We have bought             நாங்கள் வாங்கியிரிக்கிறோம்
3. You have done               நீ செய்திருக்கிறாய்
4. They have closed          அவர்கள் மூடியிரிக்கிறார்கள்
5. He has come                   அவன் வந்திருக்கிறான்
6. She has selected            அவள் தேர்ந்தேடுத்திரிக்கிறாள்
7. It has stopped               அது நிருத்தியிரிக்கிறது
8. Rama has gone               ராமன் போயிருக்கிறான்
9. Sumathi has Invited   சுமதி அழைத்திருக்கிறாள்

குறிப்பு: ஐந்தாவது வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள come என்பது past participle தான்.

3. Present Continuous

ஒரு செயலை நான் பேசிக்கொண்டிருக்கும்போது தொடர்ந்து நிகழுமானால் அது Present Continuous ஆகும். ராமன் விழையாடிக்கொண்டிரிக்கிறான் என்றால் தற்போது அவன் அந்தச் செயலைச் செய்து கொண்டிருக்கிறான் என்று பொருள்.

Present continuous Sentence

1. I am reading the book நான் அந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டு இருக்கிறேன்
2. He has going to the market    அவன் மார்கெட்டிற்குப் பொய் கொண்டு இருக்கிறான்
3. They are laughing  அவர்கள் சிரித்துக் கொண்டிரிக்கிறார்கள்
4. We are writing நாங்கள் எழுத்டிக் கொண்டிருக்கிறோம்
5. She is typing the letter அவள் கடிதத்தை டைப் செய்து கொண்டு இருக்கிறாள்
6. It is barking அது குரைத்துக் கொண்டிருக்கிறது

4.Present Perfect Continuous

ஒரு செயல் முன்பே தொடங்கி இன்னும் தொடர்ந்து நடைபெற்று வந்தால் அதை Present Perfect Continuous ல் கூறவேண்டும்.

I have been studying

We have been living

He has been learning

She has been crying

குறிப்பு : He, She, It உடன் ‘has’ எனபதைப் பயன்படுத்தட்ட வேண்டும்.

I have been reading since 6 O’ clock

நான் 6 மணியிலிருந்து படித்துக் கொண்டேயிருக்கிறேன்.

She has been crying since early morning

அவள் அதிகாலையிலிருந்தே அழுது கொண்டு இருக்கிறாள்.

I have been working here for the past 3 months

நான் கடந்த 3 மாதங்களாக இங்கு வேலை செய்து கொண்டிருக்கிறேன்.

இதுவரை கூறப்பட்ட விசைஎங்களை நினைவில் வைத்துக் கொள்ளவும். அடுத்து Past Tense ல் உள்ள நான்கு பிரிவுகளை பற்றி க் காணலாம்.

5. Simple Past

கடந்த காலத்தில் நடைபெற்ற செயல்களை நான்கு முறையில் கூற முடியும் என்று கூறியிருந்தேன். முதலில் Simple Past பற்றிக் காணலாம்.

1. I met him

நான் அவனை சந்தித்தேன்.

2. He came to my house

அவன் என்னுடைய வீட்டிற்கு வந்தான்

3. She sang a song

அவள் ஒரு பாட்டு பாடினாள்

4. They called me

அவர்கள் என்னை அழைத்தார்கள்

5. Past Perfect

Present Perfect போலவே இந்த Past Perfect வாக்கியங்களிலும் Past Participle ஐத்தான் சேர்க்க வேண்டும். இது Past Perfect. எனவே have , has ற்கு பதிலாக ‘had’ என்பதை இணைக்க வேண்டும்.

I have bought a T.V.

நான் ஒரு டிவி வாங்கியிருக்கிறேன். இது Present Perfect. இதை Past Perfect ஆக மாற்ற have ற்கு பதிலாக had என்பதை சேர்த்து எழுத வேண்டும்.

I had bought a T.V.

நான் ஒரு டிவி வாங்கியிருந்தேன்.

He had come

அவன் வந்திருந்தான்

They had closed the door

அவர்கள் கதவை மூடியிருந்தார்கள்.

7. Past Continuous

நான் ஒரு செயலை கடந்த காலத்தில் தொடர்ந்து செய்துக் கொண்டிருந்தால் அதைக் குறிப்பிட Past Continuous ஐ பயன்படுத்தலாம். உதாரணம்: நேற்று நான் டி.வி. பார்த்துக்கொண்டுருந்தேன்.

I am watching T.V.  நான் டி.வி. பார்த்துக்கொண்டிருக்கிறேன். இது Present Continuous இதை Past Continuous ஆக மாற்ற am ற்கு பதிலாக was என்ற சொல்லைச்  சேர்க்க வேண்டும்.

I was watching T.V.             நான் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தேன்

He was waiting for you.     அவன் உனக்காக காத்துக் கொண்டிருந்தான்

She was coming here          அவள் இங்கே வந்துக் கொண்டிருந்தாள்

They, You, We போன்ற SUBJECT உடன் were என்பதை (Past Continuous) இணைக்க வேண்டும்.was  என்பதை இணைக்கக் கூடாது.

They were laughing            அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

We were sitting                     நாங்கள் உட்கார்ந்து கொண்டிருதோம்

8. Past perfect Continuous

ஆங்கில இலக்கணத்தில் இதன் உபயோகம் மிக குறைவே. எனினும் நீங்கள் தெரிந்து கொள்வதற்காக ஒரு உதாரணம் கூறுகிறேன்.

I have been waiting     நான் காத்துக்கொண்டிருந்தேன். இது Present Perfect Continuous இதை Past Perfect Continuous ஆக மாற்ற I had been waiting என்று  எழுத வேண்டும். இதன் தமிழ் அர்த்தம் நான் காத்துக் கொண்டேயிருந்தேன்.

தொடரும்…


Responses

  1. sir plz continue… rombo useful’a iruku sir innum fulla eluthunga rombo nalla easy’a iruku…english..

    neenga yen ippo ellam eluthurathe ille.

    • கண்டிப்பா எழுதுகிறேன் … உங்களின் கேள்விக்கு கண்டிப்பா பதில் விரைவில்


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: