Posted by: shuhaib | 28/08/2010

நலம் தரும் இளநீர்


இளநீர் அனைவரும் அறிந்த ஒன்று.  இயற்கையின் அருட்கொடையின் அற்புதம்தான் இந்த இளநீர்.  இது ஒரு முழு உணவு.  அன்றாட வாழ்க்கையில் மனிதனுடன் கலந்துவிட்ட பானங்களுள் இளநீருக்கு முக்கிய பங்குண்டு.

இளநீர் மக்களின் நீர் தாகத்தைப் போக்குவதுடன் உடலுக்கு புத்துணர்வையும் கொடுக்கும் இயற்கை டானிக் ஆகும்.

வெப்பம் அதிகம் உள்ள நாடுகளில் உள்ள மக்களுக்கு இளநீர் ஒரு வரப்பிரசாதம்.  உடலுக்கு புத்துணர்வு தரக்கூடிய ஒரு இயற்கை பானம் இதுவே.  சுத்தமானதும், சுகாதாரமானதும் இயற்கையால் பாதுகாக்கப்பட்ட பானம் இளநீர் ஒன்றே.

சுவையான இளநீரின் மருத்துவக் குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது.

இளநீரில் நாட்டு இளநீர், செவ்விளநீர், பச்சை இளநீர் என பல வகைகள் உள்ளன.

இளநீரில் உள்ள வேதிப் பொருட்களின் அளவு

மொத்த திடப்பொருள் %      6.5
குளுக்கோஸ், பிராக்டோஸ் %     4.4
தாதுப்பொருட்கள்  %         0.6
புரதச்சத்து  %         0.01
கொழுப்புச்சத்து  %    0.01
அமிலத்தன்மை ணீஏ      4.5
பொட்டாசியம்  ட்ஞ்%      290.0
சோடியம்  ட்ஞ்%        42.0
கால்சியம்  ட்ஞ்%        44.0
மக்னீசியம் ட்ஞ்%      10.0
பாஸ்பரஸ்  ட்ஞ்%      9.2
இரும்புச்சத்து  ட்ஞ்%      106.0
காப்பர்  ட்ஞ்%        26.0
(ஆதாரம்  – சத்தியவாணி கிருஷ்ணன்குட்டி 1987)

100 கிராம் இளநீரில் கொடுக்கும் கலோரி
அளவு 17.4

இளநீரின் இயல்புகள்

·     இனிப்புச் சுவை நிறைந்தது.

·     குளுமை தரக்கூடியது.

·     எளிதில் ஜீரணமாகக்கூடியது.

·    பித்த வாதத்தை குணப்படுத்தும் தன்மையுடையது.

·     பசியைத் தூண்டக்கூடியது

·     நீர்ப்பெருக்கியாக செயல்படக்கூடியது.

·     புத்துணர்வு தரக்கூடியது.

·     உடல் வெப்பத்தைத் தணிக்கக்கூடியது.

·     உடலில் உள்ள நீர்ச்சத்துக் குறையைப் போக்கும் தன்மை கொண்டது.

இளநீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்

வெப்ப நாடுகளில் வாழ்பவர்களின் உடல் நிலை அதன் தன்மைக்கேற்ப அமையும்.  மாறுபட்டால் உடலில் பித்த நீர் அதிகரித்து, உடல் அதிக உஷ்ணமாகும்.  இதனால் உஷ்ண சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்படும்.  இவை நீங்க தினமும் இளநீர் அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.  கண்கள் குளிர்ச்சி பெறும்.  வயிற்று நோய்கள் அகலும்.

வயிற்றில் வாயுவின் சீற்றம் மிகுந்து அவை வயிற்றின் உட்புறச் சுவர்களை தாக்கி புண்களை ஏற்படுத்தும்.  நீண்ட பட்டினி, அதிக உணவு, உடலுக்கு ஒவ்வாத உணவு இவற்றால் ஏற்படும் அஜீரணக் கோளாறு அனைத்தையும் தீர்க்கும் குணம் இளநீருக்கு உண்டு.

இளநீர் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.  இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீர்களை நீக்கும்.  இரத்தச் சோகையைப் போக்குகிறது.

இரத்தக் கொதிப்பைக் குறைக்கும் சக்தி இளநீருக்கு உண்டு.  அதனால் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.

குழந்தைகளுக்கு கொடுத்தால் இதிலுள்ள சத்துக்கள் எலும்புகளுக்கும், உறுப்புகளுக்கும் வலுகொடுக்கும்.  உடல் வளர்ச்சி சீராக இருக்கும்.  குழந்தைகளுக்கு உண்டாகும்  நோய்களைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

அம்மை நோயின் தாக்கம் கண்டவர்கள் இளநீர் அருந்தினால் நோயின் வீரியம் குறையும். நாவறட்சி, தொண்டைவலி நீங்கும்.

சிறுநீர் பெருக்கியாகவும், சிறுநீரகம் சீராக இயங்கவும், இளநீர் உதவுகிறது.  சிறுநீரக கல்லடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

மூளைக்கு புத்துணர்வும், நரம்புகளுக்கு வலுவும் ஏற்படுத்துகிறது.  நினைவாற்றல் தூண்டப்படுகிறது.

மது பழக்கம் உள்ளவர்களின் கல்லீரல் அதிகம் பாதிப்படையும்.  அதனை சீர் படுத்தும் குணம் இளநீருக்கு உண்டு.

இரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதால் இருதயம் சீராக செயல்படும்.  இதய வால்வுகளை பலப் படுத்தும்.  தினமும் இளநீர் அருந்தி வந்தால் இதய நோய் ஏதும் அணுகாது.

பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் அடிவயிறு வலிக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.

டைபாய்டு, மஞ்சள் காமாலை நோயின் தாக்குதல் கொண்டவர்கள் இளநீர் அருந்தினால் உடல் விரைவாகத் தேறும்.

இளநீரில் சுண்ணாம்புச்சத்து நிறைந்திருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் உதவுகிறது.

தேன் கலந்து அருந்தினால் தாது விருத்தியாகி ஆண்மை சக்தியை பெருக்கும்.

இந்திய மருத்துவ முறையில் இளநீர் பெரும்பங்கு வகிக்கிறது.

இளநீர் ஒரு சிறந்த டானிக்காக வயதானவர்களுக்கும் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் பயன்படுகிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு இது ஒரு அருமருந்து.  இளநீர் தினமும் அருந்தினால் உடல் வலுப்பெறும். மலச்சிக்கல் தீரும்.

அடிக்கடி இளநீர் பருகி  நீண்டநாள் ஆரோக்கியம் பெற்று வாழ்க.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: