Posted by: shuhaib | 01/09/2010

கண்ணெதிரே ஒரு வசந்தம்


நீலகிரிமாவட்டத்தில் மரங்களடர்ந்த ஒரு காட்டுப்பகுதியில் ஒரு ஆங்கிலேயரின் கல்லறை இருக்கிறது. அதில் பொறிக்கப்பட்டி ருக்கும் வாசகம் “இந்த உலகத்திற்கு நான் விட்டுச்செல்லும் செய்தி, உங்களைச் சுற்றிலும் பாருங்கள்!’’ சுற்றிலும் பார்த்தால் மரங்கள், மரங்கள், மரங்கள். ‘ இந்தக் கல்லறை வாசகத்திற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது.

அந்த ஆங்கிலேயர் சில நூற்றாண்டு களுக்கு முன்னால் நீலகிரிப் பகுதியில் வாழ்ந்தவர். சமவெளிப்பகுதியான அங்கே தினமும் காலையில் வாக்கிங் செல்வது அவருடைய வழக்கம். அப்போது தன்னுடைய கோட்டுப் பாக்கெட்டில் நிறைய மரங்களின் விதைகளைப் போட்டுக் கொள் வாராம். வாக்கிங் செல்லும் வழி எங்கும் விதைகளைத் தூவியபடி செல்வார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாதையில் வாக்கிங் செல்வார். அவர் அந்தப் பகுதி முழுவதும் தூவிய விதைகள்தான் இன்று அங்கே பெரும்காடாக மாறி நிற்கிறது. அவர் இறந்த போதுகூட அவர் அந்த மரங்களைக் கண்டிருக்க வாய்ப்பில்லை.

ஆனாலும் அவர் மறைந்துபோன பிறகும் அந்தக்காடு அவர் பெயரைச் சொல்லிக்கொண்டு இருக்கிறது. ஒரு தனிமனிதரின் சாதனைதானே இது?

இதேபோல் ஒரு பெண்மணி ஆப்பிரிக்கா வில் மரங்கள் வளர்ப்பில் பெரும் சாதனை செய்தவர். உலகம் முழுக்கப் பிரபல மானவர். அவர் பெயர் வாங்கரி மத்தாய். கென்யா வின் காட்டில் உள்ள மரங்கள் சகட்டு மேனிக்கு வெட்டப்படுவதைக் கண்ட அவர் அதற்காக ஒரு தனி இயக்கத்தையே ஆரம்பித்தார். அவர் தலைமையில் திரண்ட பெண்கள் ஒரு வித்தியாசமான போராட்டத்தை ஆரம்பித்தார்கள். காட்டில் உள்ள மரங்களை மத்தாயின் தொண்டர் அணிப் பெண்கள் போய் அப்படியே கட்டிக் கொள்வார்கள். மரத்தை வெட்ட வருபவர்களை அவர்கள் அருகே அண்ட விடமாட்டார்கள். இது மீடியாவில் பெரிய செய்தியான பின் ஆயிரக்கணக்கான பெண்கள் வாங்கரி மத்தாயின் பின்னால் அணி திரண்டார்கள்.

வெறும் போராட்டத்தோடு மட்டும் நிற்காமல் பாஸிட்டிவ்வாகவும் தன்னுடைய பணியைச் செய்தார் வாங்கரி மத்தாய். “”நாங்கள் சொல்வதைக் கேட்டு நீங்கள் காடுகளை அழிப்பதை நிறுத்த மாட்டீர்கள், ஆனால் புதிய மரங்களை நாங்கள் உருவாக்குகிறோம்’’என்று சொல்லி வாங்கரி மத்தாய் தன் நாடு முழுவதும் மரங்களை நடும் மாபெரும் சமூகப் பணியை ஆரம்பித்தார். நம்பினால் நம்புங்கள், கோடிக்கணக் கான மரங்களைத் தன் போராட்டத்தின் மூலம் ஆப்பிரிக்கா வின் பல தேசங்களில் நட்டு இன்று அவற்றைப் புதிய கானகங்களாக மாற்றிய சரித்திரத்தைப் படைத்தார் வாங்கரி மத்தாய்.

தன்னுடைய போராட்டங்களுக்கான பரிசாகப் பலமுறை சிறை சென்று, கடும் தண்டனைகள் அனுபவித்தவர் வாங்கரி மத்தாய். நாளடைவில் இவர் பெயர் உலகம் முழுவதும் பரவி, பாராட்டுக்களும் விருதுகளும் குவிந்தன. தன்னுடைய சிறப்பு விருந்தினராகத் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா. இதையெல்லாம் தாண்டி உலக சமாதானத்துக்காக நோபல் பரிசு வாங்கரி மத்தாய்க்கு வழங்கப்பட்டது.

நைஜீரியாவில் எண்ணெய் வயல்களைக் கொள்ளை யடித்து நாட்டையே எரியும் பூமியாக்கி நாசப்படுத்திய பன்னாட்டு எண்ணெய் கம்பெனிகளை எதிர்த்துப் போராடிய ஆப்பிரிக்க கவிஞன் கென் சரோ விவாவை அந்த நாட்டு அரசாங்கம் தூக்கிலேயே போட்டது.

இயற்கைக்கு ஆதரவாகவும், இழந்த இயற்கைச் செல்வத்தை மீட்டெடுக்கவும் இதைப் போன்ற பல மனித முயற்சிகள், போராட்டங்கள் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன.

அப்படிப்பட்ட சாதனை ஒன்று நம் தமிழ்நாட்டிலும் ஓசைப்படாமல் நடந்திருக்கிறது. கோயம்புத்தூர் என்பது மிக வளமான பகுதி. இயற்கையோடு இயைந்து வாழும் இருளர் இன மக்களைச் சேர்ந்த மன்னன் கோயன் என்பவர் ஏற்படுத்திய ஊர் என்பதால் கோயன் புத்தூர் என்று அழைக்கப்பட்டு பின்னாட் களில் கோயமுத்தூராக மாறியதாக ஒரு வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அப்படிப்பட்ட வளமான கொங்கு நாட்டுப் பகுதி இன்றைக்குப் பல இடங் களில் வறண்ட பூமியாகக் காணப்படுவது மிகப் பெரும் சோகம்.

நொய்யல் ஆற்றின் பெருமைகளைப் பற்றியும் அதன் இன்றைய பரிதாப நிலை பற்றியும் சில அத்தி யாயங்களுக்கு முன்னால் குறிப்பிட்டிருந்தேன். நொய்யல் ஆறு மட்டு மின்றி ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் என பல தண்ணீர் நிலைகள் கோயம்புத்தூரில் அழியும் நிலைக்கு வந்துவிட்ட சமயம். இந்தத் தண்ணீர் நிலைகளுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டார் ஓர் இளம் லீடர். சிரீமதி வந்தனா என்பவர்தான் அந்தப் பெண்மணி.

“சிறுதுளி’’ என்கிற அமைப்பைத் தொடங் கியவர், பல தொண்டு நிறுவனங்கள், வாலண்டியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், இயற்கை ஆர்வலர்கள் என்று பல்லாயிரம் மக்களை ஒன்று திரட்டினார். “””இழந்த கோயமுத்தூரின் தண்ணீர் நிலைகளை மீட்டெடுப்போம்”’’ என்கிற கோஷத்துடன் அவர்கள் களத்தில் இறங்கினார்கள்.

கோயமுத்தூரில் தூர் வாராமல் தூர்ந்து போயிருந்த குளம், ஏரிகளைத் தூர்வாரி னார்கள். “”ரெய்ன் வாட்டர் ஹார்வெஸ்ட்’ முறை பற்றி மக்களிடையே பிரச்சாரம் செய்து வீடுகளில் மழை நீர் சேகரிப்புக்கான வழி வகைகளைச் செய்தார்கள். காடுகள், மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்துப் போராடினார்கள். நல்ல தண்ணீர் வீணா வதைத் தடுத்தார்கள்.

கழிவுநீர்க் கால்வாய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து அதனைச் சுத்தப்படுத்தி னார்கள். அப்படி சுத்தப்படுத்தப்பட்ட தண்ணீர் விவசாய நிலங்களில் பாசனத் துக்காகத் திருப்பி விடப்பட்டது. இதுமட்டு மின்றி ஏரிகள், குளங்களின் அருகே ஏராளமான மரங்களை நட்டார்கள். மரங்கள் என்றால் ஒரு மரம் அல்ல, இரண்டு மரம் அல்ல, ஒரு மில்லியன், அதாவது பத்து லட்சம் மரங்களை நட்டார் கள். இதையும் நிச்சயம் ஒரு பசுமைப் புரட்சி என்று தான் சொல்லவேண்டும்.

மிகக்குறுகிய காலகட்டத்தில் கோயமுத் தூரின் ஐந்து பெரிய ஏரிகளை அவர்கள் முழுக்கத் தூர்வாரி மழைத்தண்ணீரை சேமித்து வைக்கும் நீர்நிலையாக மாற்றிக் காட்டினார்கள். ஒரு பெரும் குளத்தில் இருந்து மட்டும் 26000 கியூபிக் மீட்டர் அளவுக்கு குப்பைகளையும் கொட்டப்பட்ட பழைய பொருட்களையும் அவர்கள் தோண்டி எடுத்து சுத்தப்படுத்தினார்கள்.

இவர்களின் ஓயாத உழைப்பின் பலனாக கோயமுத்தூரின் தண்ணீர் மற்றும் இயற்கை அமைப்புகளே பெருமளவில் மாற்றம் கண்டன. கண்ணெதிரே உதித்த வசந்தத்தைக் கண்டு அதிசயித்தார்கள் மக்கள்.

முயற்சித்தால் முடியாதது என்று ஒன்று உண்டா இளைஞர்களே?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: