Posted by: shuhaib | 09/09/2010

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!


என்னங்க இதுக்கும் தடை விதிக்க வந்துட்டீங்களான்னு பாக்கறீங்கள?!!!! இல்லைங்க தடையெல்லாம் இல்லை. கொஞ்சம் கவனமா சமையுங்கன்னு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்…

நாம பொதுவா அடுப்புல கடாயைப் போட்டு, அதில் எண்ணெயை விட்டு, எண்ணெய் சூடானவுடன் வெட்டிய காய்களைப் போட்டு நன்றாக வதங்கியவுடன்
அதில் நீரையும் பாக்கெட் மசாலாவையும் சேர்த்து, கொதித்தவுடன் நுடுல்சைப் போட்டு வேக வைத்து 2 நிமிடத்திகுள் (சுத்தப் பொய்!!!) சமைத்து விடுகிறோம்.

இப்போது விஷயத்திற்கு வருகிறேன். இந்த நுடுல்சின் புறப்பகுதியில் ஒரு மெழுகுக் கோட்டிங் (wax ) உள்ளதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இது எளிதில் ஜீரணமாகாத கொழுப்புப் பொருள். நம் வயிற்றுக்குள் செல்லும் இந்த மெழுகு உடலில் இருந்து வெளியேற சுமார் நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகின்றன.

எந்த ஒரு பொருளும் நான்கு நாட்கள் வயிற்றில் தங்குவது வயிற்றுக்குத் தீங்கையே விளைவிக்கும். இதற்காக நூடுல்ஸ் சாப்பிடுவதை அடியோடு தவிர்க்கவா முடியும். அது அவசியமும் இல்லை. மீசை வைத்து
இருப்பவர்கள் கூழ் குடிக்காமலா இருக்கிறார்கள் (காபியைத்தான் சொல்கிறேன்!!!) மீசையில் படாமல் லாவகமாக குடித்து விடுகிறார்களே!!!…
அது போலத்தான் கொஞ்சம் மாத்தி யோசிக்கலாமே!

தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் நூடுல்சை மட்டும் போட்டு வேகவைக்க வேண்டும். நூடுல்ஸ் நன்கு வெந்த பிறகு தண்ணீரை வடிகட்டி கொட்டி விட வேண்டும்.

Advertisements

Responses

  1. இந்த பதிவை என் தளத்தில் பதித்து உள்ளேன். நன்றி நண்பரே. கட்டாயம் உங்க தளத்தின் பெயரை இட்டு உள்ளேன்.

    நன்றி கடலோரம்.

    • போட்டுக்குங்க! போட்டுக்குங்க !! நன்றி மீண்டும் வாருங்கள் .


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: