Posted by: shuhaib | 11/09/2010

அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதல் : 9ம் வருட நினைவு தினம் இன்று! (வீடியோ)


செப்டெம்பர் 11, உலக வர்த்தக மையம் மீதான தீவிரவாத தாக்குதலின் 9ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்ட்டிக்கப்படுகிறது. கடந்த 2001 ம் வருடம், செப்டெம்பர் 11 ம் திகதி நியூயோர்க்கின் பெண்டகன் இரட்டை கோபுரம், தீவிரவாதிகளினால் கடத்தப்பட்ட இரு விமானங்கள் மூலம் மோதி தரைமட்டமாக்கப்பட்டது. இச்சம்பவத்தில் 2,752 பொதுமக்கள் உயிரிழந்தனர். இத்துயர சம்பவம், உலகில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் மிக வெற்றிகரமாக அமைந்த ஒரு நடவடிக்கையாக வரலாற்று பதிவுக்கு உள்ளானது.

இச்சம்பவத்தின் 9ம் வருட நினைவு தினம் நியூயோர்க்கின் பெண்டகன் ஞாபகார்த்த மையத்தில் நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் பார்க ஒபாமா, துனை அதிபர் ஜோசெப் பிடென்,
ஆகியோர் கலந்துகொண்டு, இத்தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களிற்காக அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஒபாமா, தெரிவித்ததாவது : இரட்டை கோபுர தகர்க்கப்பட்ட இடத்தின் அருகே மசூதி கட்ட எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அங்கு ஒருவரின் இந்து கோவில் கட்டும் போது, ஏன் மசூதி கட்டக்கூடாது. அமெரிக்காவை பொறுத்தவரை கிறிஸ்த்துவ தேவாலயமும், கட்டலாம், யூதர்களின் வழிபாட்டு தலமும் கட்டலாம், இந்து கோவிலும் கட்டலாம். மசூதியும் கட்டலாம். என தெரிவித்தார்.

இரட்டை கோபுர தகர்ப்பின் நேரடி வீடியோ பதிவினை பல்வேறு ஊடகங்கள் ஒளிபரப்பு செய்தன. எனினும், இத்தாக்குதலின் 5ம் வருட நினைவு தினத்தில், 2006 செப்டெம்பர் 11 ம் திகதி ஒரு வீடியோ பதிவு வெளியானது. பொப் மற்றும் ப்ரி எனும் இருவர் இரட்டைக்கோபுரத்திற்கு நேரெதிராக இருக்கும் தமது மாடி வீட்டு ஜன்னல் கதவின் ஊடாக எடுத்த வீடியோ பதிவு இது.சுமார் 26 நிமிடங்கள், கொண்டது. முதல் விமானம், மோதியதில் இருந்து, இரு கட்டிடங்களும் இடிந்து விழும் வரை, அப்படியே கண் முன் நெருடல் காட்சிகளாக்கியிருன்றனர்.

(இரட்டைகோபுர தாக்குலை நினைவுபடுத்தும், ஒரு சிறந்த நேரடி வரலாற்றுப்பதிவு என்ற வகையில் அவ்விடீயோ இணைப்பு)

இரண்டாவது விமானம் மோதுவதை மிகத்துல்லியமாக படம்பிடித்த மற்றுமொரு வீடியோ

கட்டிடம் இடிந்தமைக்கு காரணம் என்னவென முப்பரிமாண காட்சிகளில் சித்தரிக்கும் வீடியோ பதிவு


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: