Posted by: shuhaib | 13/09/2010

திருகுர்ஆன் எரிப்பு தினம் – செப்டம்பர் 11 – 2010


ஒரு முட்டாள் பாதிரியாரின் அறிவிப்பால் உலக அமைதிக்கு மீண்டும் ஓர் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறது.

சக மனிதனை பார்த்து புன்னகைப்பதும், மக்கள் நடமாடும் தடத்தில் கிடக்கும் தீங்கு விளைவிக்கும் ஆணி, இரும்பு போன்ற பொருள்களை நீக்குவதும் தர்மம் என போதிக்கும் இஸ்லாத்தை சாத்தான் மதம் என்று சொன்னதோடு மட்டுமன்றி, அமெரிக்க ப்ளோரிடா மாகாணத்தை சார்ந்த பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் இந்த ஆண்டு செப்டம்பர் பதினோராம் தேதி (நாளை மறுநாள்) குர்ஆன் எரிப்பு தினமாக அறிவித்து இருக்கிறார்.

இந்த அறிவிப்பினால் அமெரிக்கா மிகுந்த பயத்திற்கு உள்ளாகி உள்ளது. மேலும் இதுவரை அமெரிக்கா கடைபிடிக்க நினைக்கும் முஸ்லிம்கள் நல்லெண்ண நடவடிக்கைகள் அனைத்தும் இந்த ஒரு நிகழ்ச்சியால் அடிபட்டு போகும் என்றும் தெரிகிறது. இதற்கு ஹிலாரி கிளிண்டன் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். ஆப்கானிலும், ஈராக்கில் மீதம் இருக்கும் அமெரிக்க படையினர் பற்றி கவலை தெரிவித்து உள்ளார் அமெரிக்க பொறுப்பு கலோனல் .

வாடிகன் போப் ஆலயமும் இதை காட்டு மிராண்டி தனம் என்று அறிவித்து உள்ளதோடு இதை கைவிட கோரி உள்ளது. ஆனால் இதற்கான எல்லா ஏற்பாடுகளையும் நிறுத்தாமல் செய்வதாக அந்த தேவாலய தகவல்கள் சொல்கின்றன.

இதனிடையே ஃபுளோரிடா தேவாலயத்தின் இந்த குரான் எரிப்பு நிகழ்ச்சிக்கு அமெரிக்காவிலுள்ள கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய குழுக்கள் பல கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள “த நேஷனல் அசோசியேசன் ஆப் எவான்ஜெலிக்கல்ஸ்(NAE)” என்ற கிறிஸ்தவ அமைப்பு, குரான் எரிப்பு நிகழ்ச்சியை ஃபுளோரிடா தேவாலயம் கைவிட வேண்டும் என்றும், இது உலக அளவில் இரு பிரிவு மதத்தினருக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்திவிடும் என்றும் கூறியுள்ளது.

இந்த நிகழ்ச்சி நடந்தால் உலக முஸ்லிம்களின் கொந்தளிப்பும் மீண்டும் செப்டம்பர் பதினொன்று போன்ற தீவிரவாத சம்பவங்களுக்கும் காரணமாக அமைந்துவிடும்.

உலக அமைதியை குலைக்க நினைக்கும் இது போன்ற விசயங்களில் இருந்து உலகத்தை காக்கவும் அமைதியும் மனிதர்களிடையே மனித நேயமும் சக மனிதனையும் அவன் உணர்வுகளை மதிக்கும் எண்ணங்களை உயர்த்திடவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இந்த நிகழ்வு நடக்காமல் இருக்க… மீண்டும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: