Posted by: shuhaib | 17/02/2011

பஹ்ரைனில் போராட்டம் வலுக்கிறது: போலீஸ் தாக்குதலில் ஐந்து பலி


பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இதில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்த தாக்குதலின் போது ரப்பர் புல்லட்கள், கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் பிரயோகிக்கப்பட்டன. இதில் ஐந்து போராட்டக்காரர்கள் மரணம் அடைந்தனர். போலீசார் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து சூழ்ந்து கொண்டனர்.

வெள்ளை நிற ஹெல்மேட் அணிந்த போலீசார் தாக்கியதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் பலர் சலாமனியா மருத்துவமனைக்கு அனுப்பட்டனர். போலீசார் தாக்குதலில் இருவர் இறந்ததை தொடர்ந்து ஆத்திரம் அடைந்த மக்கள் கூடினர்.

காயம் அடைந்தவர்களை காண உறவினர்கள் கலக்கத்துடன் குவிந்தனர். போராட்டக்காரர்கள் நிகழ்விடத்தில் தூங்கி கொண்டிருந்த போது, போலீசார் தாக்குதலை நடத்தினார்கள். தேசிய ஜனநாயக செயல் அமைப்பின் பொதுச்செயலாளர் இப்ராகிம் ஷெரிப் கூறுகையில்,”500 முதல் 1000 போலீசார் தாக்குதலில் ஈடுபட்டனர். காயம் அடைந்த மக்கள் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டார்கள். அந்த வழியே மக்கள் செல்ல போலீசார் தடைவிதித்தனர்” என்றார்.

போலீசாரின் ஒரு மணி நேர தாக்குதலுக்கு பின்னர் மக்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள தப்பி ஓடினர். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என கண்டறிய முடியவில்லை.

இன்று அதிகாலையும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிரிக்கின்றது. போராட்டக்காரர்களை விரட்டும் வகையில் ஆங்காங்கே  போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டிரிக்கின்றனர்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: