Posted by: shuhaib | 20/02/2011

பேச்சுவார்த்தைக்கு மறுப்பு: பஹ்ரைனில் போராட்டம் வலுக்கிறது; ராணுவ நடவடிக்கை வாபஸ்


மனாமா,பிப் 20, 2011

பஹ்ரைனில் போராட்டம் வலுத்ததை தொடர்ந்து ராணுவ நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டது.   பஹ்ரைன் நாட்டில் மன்னர் சேக் ஹமதுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை அடக்க போலீசாரும்,ராணுவம் பயன் படுத்தப்பட்டன. அவர்கள் துப்பாக்கியால் சுட்டத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து இறந்தவர்களின் பிணங்களுடன் ஸித்ரா கிராமத்தில் இருந்து இறுதி ஊர்வலம் நடந்தது. அந்த ஊர்வலத்தை மனாமா நகரின் பியர்ஸ் சதுக்கத்துக்கு வரவிடாமல் தடுக்க கூட்டத்தினரின் மீது ஹெலிகாப்டரில் பறந்த படியே துப்பாக்கி சூடு மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
 
இச்சம்பவத்துக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்க அதிபர் ஒபாமா மன்னர் ஹமதுடன் டெலி போனில் பேசினார். அப்போது, நாட்டில் ஒரு ஆக்க பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த மன்னர் ஹமத் முன் வந்தார். அதற்காக தனது மகனும், ராணுவ துணை தலைமை தளபதியுமான சேக் சல்மான் பின் ஹமத் அல்கலிபாவை நியமித்தார். பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வுகாண பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்புவிடுத்தார்.
 
அவரது அழைப்பை போராட்டக்காரர்கள் நிராகரித்து விட்டனர்.   தெருக்களில் ராணுவத்தை குவித்து வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என தெரிவித்தனர். இதனால் பஹ்ரைனில் போராட்டம் வலுவடைந்துள்ளது. ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகமாக உள்ள மனாமாவில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. பியர்ல் சதுக்கத்தில் கூடியுள்ள அவர்கள் தங்கள் கைகளில் பஹ்ரைன் கொடிகளையும், பூக்களையும் ஏந்தியபடி மன்னர் ஹமதுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
 
போராட்டம் வலுவடைந்துள்ளதை தொடர்ந்து மனாமாவில் உள்ள பியர்ல் சதுக்கத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த ராணுவம் வாபஸ் பெறப்பட்டது. மேலும் ராணுவ டாங்கிகளும் திரும்ப பெறப்பட்டன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: