Posted by: shuhaib | 22/02/2011

இயற்கை சோலையாக மாறும் வேலூர் சிறைச்சாலை


                 பிறக்கும்போது யாரும் குற்றவாளியாக பிறப்பதில்லை. வளர்ப்பும், சூழ்நிலையும் தான் ஒரு மனிதனை குற்றவாளியாகவும், சிறந்த மனிதனகாவும் மாற்றுகிறது. தெரிந்தோ, தெரியாமலோ தவறுகள் செய்துவிட்டு சிறைக்கு வருபவர்கள் வெளியே செல்லும் போது திருந்திய நல்ல மனிதனாக வெளியே செல்ல வேண்டும் என்பதற்காக தான் சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டது. 
ஆனால் இன்றைய சிறைகள் தப்பு செய்துவிட்டு வந்தவனை திரும்ப திரும்ப தப்பு செய்ய தூண்டும்மிடமாகவும், சிறைச்சூழ்நிலை திருந்த நினைப்பவர்களை மனம் மாற்றம் ஏற்படாமல் தொடர் சித்ரவதைக்குள்ளாகி மனநிலை பாதிப்பு உருவாக்கும்மிடமாகவும் இருக்கிறது என்பது மனித உரிமை ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.
சிறையில் மட்டுமல்ல, நாட்டில் நகரங்களில் மன வியாதியால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் நாளுக்கு நாள் அதிகமாகின்றனர். அந்த மனவியாதியை குணப்படுத்த தான் மலை, காடு சார்ந்த பகுதிகளில் ஆஸ்ரமம் அமைத்து மனமாற்றத்துக்கு தியான பயிற்சி தருகின்றனர். வெளியில் உலவும் மனிதர்களால் அந்த தியான நிலையங்களுக்கு செல்ல முடியும். கூண்டுக்குள் அடைப்பட்ட பறவைகளால் அங்கு போய் மனதை மாற்றிக்கொள்ள முடியாது. சரி சிறையில் தியான பயிற்சி தரலாம் என்றால் அதற்கு உகந்தயிடமாக அதுயில்லை.
மாற்றம் என்பது மாற்றத்திற்கு உரியது என்பதை போல தியானம் செய்வதற்கு ஏற்ற உகந்தயிடமாக இச்சிறையை மாற்றினால் சிறகொடிந்த பறவைகளின் மனதில் நம்பிக்கை ஒளி ஏற்ற முடியும் என யூகித்துதான் சிறையில் வாடும் கூண்டு பறவைகளை வைத்தே சிறைச்சாலையை சோலைவனமாக மாற்றுகிறார்கள் வேலூர் மத்திய சிறைத்துறையினர்.
வேலூர் சிறை வளாகத்தில் கட்டிடங்கள் கட்டியது போக பல ஏக்கர் நிலங்கள் காலியாக உள்ளன. இதனால் சூரியனின் உக்கிர பார்வை அவ்வளாகத்தினுள் விழுந்து வெயிலின் உக்கிரம் சுட்டது. இதை மாற்ற முதலில் முடிவு செய்தார்கள் சிறைத்துறையினர். இவர்களுக்கு உதவ ஓடி வந்தார்கள் வேலூர் ரோட்டரி கிளப் அமைப்பினர். இதன் பின் பாலைவனமாகயிருந்த வேலூர் மத்திய சிறை இன்று சோலைவனமாக மாறியுள்ளது.
இதுவரை 5 ஆயிரம் மரக்கன்றுகள் சிறைச்சாலையில் நடப்பட்டுள்ளன. குளிர்ச்சியான காற்று தரும் புங்க மரம், இதமான காற்றுடன் கனி தரும் மா மரம், தாகம் தீர்க்கும் தென்னை, மருந்து தரும் வேம்பு என பல வகை மரங்கள் சிறை வளாகத்தில் வளர்ந்து சோலையாகவுள்ளன. இதுவரை சிறை வளாகத்தில் 5063 புதிய மரங்கள் நடப்பட்டு வளர்ந்துள்ளன.
அதோடு இந்த பசுமையான இயற்கை வளர்ப்பை பணமாக்கவும் கைதிகளுக்கு கற்று தந்துள்ளார்கள் சிறையில். 15 பேர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி அரை ஏக்கரில், பருத்தி செடி வளர்க்க சொல்லி ஊக்கப்படுத்தியுள்ளார்கள். 40 ஆயிரம் செடிகள் வளர்க்கப்பட்டன. 1 மாதத்திற்கு முன் அவற்றில் பாதி விற்கப்பட்டன. சுமார் 30 ஆயிரம் ரூபாய் வருமானம் வந்துள்ளது. தற்போது 2 ஏக்கரில் பருத்தி செடி வளர்ப்பை விரிவுப்படுத்தி உள்ளார்கள்.
இதுப்பற்றி சிறை கண்காணிப்பாளர் சேகரிடம் பேசியபோது…
“இப்ப இந்த சிறை பசுமையா இருக்குன்னா அதுக்கு காரணம் கைதியா உள்ளயிருக்கிறவங்க தான். தங்களது பிள்ளைகளை பாத்துக்கிற மாதிரி இந்த மரங்களை பாத்து பாத்து வளர்க்கிறாங்க. அவுங்களோட முயற்சி தான் இந்த சிறைச்சாலையை பசுமையா மாத்தியிருக்கு. இந்த சூழ்நிலை தியானம் செய்ய ஏற்றயிடமா மாறி, தியான பயிற்சியும் நடந்துக்கிட்டிருக்கு. இதுக்கெல்லாம் காரணம் அவுங்களோட ஒத்துழைப்பு தான்.
அதோட இதுக்கான முல காரணமே கல்வி தான். சிறையில பல பட்டதாரிகள் உருவாகியிருக்காங்க. உலகமே கம்ப்யூட்டர் மயமாகியிருக்கு. அத இவுங்களும் கத்துக்கனும்னு ஆசைப்பட்டோம், உள்ள இருக்கிறவுங்களும் அதுக்கு தயாரா இருந்தாங்க. உள்ள ஒரு கம்ப்யூட்டர் மையம் உருவானது. சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்துல இருக்கிற ஒரு தொண்டு நிறுவனம் சிறைக்குள்ள 10 கணிப்பொறிகள் கொண்ட மையத்தை அமைச்சு தந்துயிருக்காங்க.
இனி படிச்சி என்ன ஆகப்போகுதுன்னு முடிவு செய்தவங்க மரங்களின் வாழ்வியலை படிக்க ஆரம்பிச்சாங்க. அது சோலையை தந்துயிருக்கு. இன்னும் சில ஆண்டுகள்ல தமிழகத்திலேயே சிறந்த அறச்சாலையா மாறியிருக்கும். இதுக்கு நாங்க உறுதி,” என்றார்.
:- கைதிகளை நம்பி சிறைத்துறை புதிது புதிதாக திட்டங்களை தீட்டி அவர்கள் மூலம் வெற்றி பெறுகிறது. கைதிகளை குற்றவாளிகள் என்ற கண்ணோட்டத்துடன் பார்க்காமல்… ரத்தமும், சதையும் உள்ள மனிதர்களாக பாவித்து நடத்தும் இவர்களை, இவ்வதிகாரிகளை பாராட்ட வேண்டும். 

 நன்றி: நக்கீரன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: